கோவில் 1015 - ஈரோடு பாப்பாத்திக்காடு பாலமுருகன் கோவில்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-1015

தீவினைகள் அகற்றும் ஈரோடு பாப்பாத்திக்காடு பாலமுருகன் கோவில்

19.3.2024 செவ்வாய்


அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்

பாப்பாத்திக்காடு II

முனிசிபல் காலனி

ஈரோடு-638004

ஈரோடு மாவட்டம்

இருப்பிடம்: ஈரோடு 2 கிமீ


மூலவர்: பாலமுருகன்


தல மகிமை:

ஈரோடு மாவட்டம் ஈரோடு நகரிலிருந்து 2 கிமீ தொலைவில் இருக்கும் பாப்பாத்திக்காடு 2-வது வீதியில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருந்து அருள் புரியும் பாலமுருகனை வழிபடுவோருக்கு தீவினைகள் அகலும். ஐஸ்வர்யங்கள் பெருகும். ஞானம் பெருகும். தொழில் மேம்படும். இக்கோவிலின் கும்பாபிஷேகம் ஜூலை 2022-ல் நடைபெற்றது.


நகரின் மத்தியில் இருக்கும் இந்த பாலமுருகன் கோவிலில் முருகப்பெருமானின் அனைத்து விசேஷங்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.


தல வரலாறு:

ஈரோடு நகர் வாழ் பக்தர்களால் இக்கோவில் நிறுவப்பட்டது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் 6.7.2022-ல் சிறப்பாக நடைபெற்றது.

தல அமைப்பு:

இக்கோவில் கருவறையில் மூலவர் பாலமுருகன் இளையோனாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் இக்கோவிலில் செல்வகணபதி, தர்ம சாஸ்தா, சிவகாமசுந்தரி, நடராஜர், கைலாசாநாதர், அம்பாள், லட்சுமி நாராயணர், ராமபக்த ஆஞ்சநேயர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், கார்த்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

தீவினைகள் அகல, செல்வம் பெருக, கல்வி, ஞானம் சிறக்க, எண்ணியது ஈடேற, தொழில் மேம்பட, நோய்கள் குணமாக

நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல். அன்னதானம்


செல்வம் பெருக அருளும் ஈரோடு பாப்பாத்திக்காடு பாலமுருகனை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1015 தீவினைகள் அகற்றும் ஈரோடு பாப்பாத்திக்காடு பாலமுருகன்

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்