கோவில் 1019 - ஈரோடு சின்னப்புலியூர் முத்துக்குமார சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-1019

சங்கடங்கள் தீர்க்கும் ஈரோடு சின்னப்புலியூர் முத்துக்குமார சுவாமி கோவில்

23.3.2024 சனி


அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோவில் [TM012459]

சின்னப்புலியூர்-638455

பவானி வட்டம்

ஈரோடு மாவட்டம்

இருப்பிடம்: பவானி 8 கிமீ


மூலவர்: முத்துக்குமார சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை


தல மகிமை:

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் பவானி நகரிலிருந்து 8 கிமீ தொலைவில் இருக்கும் சின்னப்புலியூர் கிராமத்தில் சங்கடங்கள் தீர்க்கும் முத்துக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது. தைப்பூசம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் பங்குனி உத்திரம் உள்ளிட்ட முருகப்பெருமானின் திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.


தல வரலாறு:

இந்து அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் இத்திருக்கோவில் மிகவும் தொன்மையானது.


தல அமைப்பு:

அழகிய இக்கோவிலின் கருவறை வாயிலில் துவாரபாலகர்கள் உள்ளனர். வேல் ஒன்றும் உள்ளது. இக்கோவிலில் மூலவர் முத்துக்குமார சுவாமி வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர் உட்பட தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

சங்கடங்கள் தீர, நல்லன நடைபெற, குடும்பம் சிறக்க, வேண்டுவன கிடைக்க, தோஷங்கள் அகல

நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்


நல்லன நடைபெற அருளும் ஈரோடு சின்னப்புலியூர் முத்துக்குமார சுவாமியை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1019 சங்கடங்கள் தீர்க்கும் ஈரோடு சின்னப்புலியூர் முத்துக்குமார சுவாமி கோவில்


படம் 2 - 1018 நல்லன நடைபெற அருளும் ஈரோடு சின்னப்புலியூர் முத்துக்குமார சுவாமி கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்