கோவில் 110 - விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-110 மன அமைதி தரும் விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவில் 26.9.21 ஞாயிறு அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மயிலம் - 604304 விழுப்புரம் மாவட்டம் இருப்பிடம்: திண்டிவனம் 15 கிமீ, பாண்டிச்சேரி 30 கிமீ, விழுப்புரம் 28 கிமீ மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தாயார்: வள்ளி, தெய்வானை உற்சவர்கள்: பாலசுப்பிரமணியர், முத்துக்குமார சுவாமி, சண்முகப்பெருமான் (3) புராணப்பெயர்: மயூராசலம் பழைமை: 1000 வருடங்கள் பாடியவர்கள்: அருணகிரிநாதர் (1), சிவப்பிரகாச சுவாமிகள், தண்டபாணி சுவாமிகள் தல மகிமை: விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்தை அடுத்த கூட்டேரிப்பட்டிலிருந்து 5 கிமீ தொலைவில் சிறப்பு வாய்ந்த, அழகிய மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் மயிலம் பொம்மபுரி ஆதினம் ஸ்ரீமத் சிவக்னான பாலாய சுவாமிகள் திருமடம் மூலமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திருக்கோவில் நெடிய ராஜகோபு...