Posts

Showing posts from June, 2024

கோவில் 1119 - கோயம்புத்தூர் ராமநாதபுரம் வேல்முருகன் கோவில்

Image
🙏🏻🙏🏻                                                                                                        தினம் ஒரு முருகன் ஆலயம்-1119 துன்பங்களை நீக்கும் கோயம்புத்தூர் ராமநாதபுரம் வேல்முருகன் கோவில்  1.7.2024 திங்கள் அருள்மிகு வேல்முருகன் திருக்கோவில்  பஜனை கோவில் வீதி ராமநாதபுரம்  கோயம்புத்தூர்-641045 கோயம்புத்தூர் மாவட்டம் இருப்பிடம்: காந்திபுரம் 6 கிமீ, சிங்காநல்லூர் 6 கிமீ, கோவை ரயில் சந்திப்பு 4 கிமீ செல்: திரு முத்துசாமி, தலைவர் 87540 76679 மூலவர் வேல்முருகன் உற்சவர்: முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை தல மகிமை: கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் நகர பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவில் இருக்கும் ராமநாதபுரத்தில் இருக்கும் பஜனை கோவில் வீதியில் துன்பங்களை நீக்கும் வேல்முருகன் கோவில் அமைந்துள்ளது. சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலையம் சந்திப்பிலிருந்து 4 கிமீ பிரயாணம் செய்தாலும் ராமநாதபுரம் வேல்முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் வேல்முருகன் மூலவராக அருள்புரிகின்றார். இக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. தின

கோவில் 1118 - கோயம்புத்தூர் உப்பிலிபாளையம் வேல்முருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1118 எண்ணிய எண்ணங்களை ஈடேற்றும் கோயம்புத்தூர் உப்பிலிபாளையம் வேல்முருகன் கோவில் 30.6.2024 ஞாயிறு அருள்மிகு வேல்முருகன் திருக்கோவில் சக்தி நகர் உப்பிலிபாளையம் கோயம்புத்தூர்-641015 கோயம்புத்தூர் மாவட்டம் இருப்பிடம்: காந்திபுரம் 8 கிமீ, சிங்காநல்லூர் 3 கிமீ, கோவை ரயில் சந்திப்பு 9 கிமீ மூலவர் வேல்முருகன் தல மகிமை: கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் நகர பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவில் இருக்கும் உப்பிலிபாளையத்தில் உள்ள சக்தி நகரில் இருக்கும் ஸ்ரீராம் நகரில் எண்ணிய எண்ணங்களை ஈடேற்றும் வேல்முருகன் கோவில் அமைந்துள்ளது. சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலையம் சந்திப்பிலிருந்து 9 கிமீ பிரயாணம் செய்தாலும் உப்பிலிபாளையம் சக்தி நகர் வேல்முருகனை தரிசிக்கலாம். இக்கோவிலில் மூலவராக வேல்முருகன் அருளாட்சி செய்கின்றார். இக்கோவிலில் பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் வெகு சிறப்பாகக் க

கோவில் 1117 - கடலூர் அம்பாபுரம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1117 கேட்கும் வரமருளும் கடலூர் அம்பாபுரம் சுப்பிரமணிய சுவாமி கோவில் 29.6.2024 சனி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM021793] அம்பாபுரம்—608704 புவனகிரி வட்டம் கடலூர் மாவட்டம் இருப்பிடம்: புவனகிரி 13 கிமீ, வடலூர் 12 கிமீ, சிதம்பரம் 18 கிமீ மூலவர் சுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் புவனகிரி பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவில் இருக்கும் அம்பாபுரம் கிராமத்தில் கேட்கும் வரமருளும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. வடலூர் வள்ளலார் மையத்திலிருந்து 12 கிமீ அல்லது சிதம்பரம் நடராஜர் கோவிலிலிருந்து 18 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் அம்பாபுரம் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருள்கின்றார். பின்னலூர் சுப்பிரமணிய சுவாமி [கோவில் எண்: 438] இக்கோவிலிலிருந்து 2 கிமீ அருகில் இருப்பது சிறப்பம்சமாகும். இத்திருக்கோவிலில் பங்குனி உத்தர த

கோவில் 1116 - கடலூர் கூத்தப்பாக்கம் ஜெய சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1116 மன மகிழ்ச்சி அளிக்கும் கடலூர் கூத்தப்பாக்கம் ஜெய சுப்பிரமணிய சுவாமி கோவில் 28.6.2024 வெள்ளி அருள்மிகு ஜெய சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சண்முகா நகர் கூத்தப்பாக்கம் கடலூர்--607002 கடலூர் மாவட்டம் இருப்பிடம்: கடலூர் 4 கிமீ, பாடலீஸ்வரர் கோவில் 1.5 கிமீ மூலவர்: ஜெய சுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: கடலூர் மாநகரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கெடிலம் வட்ட சாலை வழியாக 4. கிமீ தூரத்தில் உள்ள கூத்தப்பாக்கம் சண்முகா நகரில் மன மகிழ்ச்சி அளிக்கும் ஜெய சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் ஜெய சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருள்புரிகின்றார். இக்கோவிலிலிருந்து 1.5 கிமீ தொலைவில் தேவாரப் பாடல் பெற்ற தலமான பாடலீஸ்வரர் கோவில் இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். இத்திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் முருகப்பெருமானின் மற்றைய திருவிழாக்கள், கிருத்திகை, சஷ்டி, திருநாட்களில்

கோவில் 1115 - கடலூர் கே என் பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1115 சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் கடலூர் கே என் பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் 27.6.2024 வியாழன் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM021441] கே என் பேட்டை [K N Pettai]-607401 திருவந்திபுரம் PO கடலூர் கடலூர் மாவட்டம் இருப்பிடம்: கடலூர் 4.5 கிமீ, திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 2 கிமீ செல்: தர்மகர்த்தா திரு. சதாசிவம் 93458 68090 மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: கடலூர் மாநகரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திருவந்திபுரம் செல்லும் சாலையில் 4.5 கிமீ தூரத்தில் உள்ள கே என் பேட்டையில் சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருளாட்சி செய்கின்றார். இக்கோவிலிலிருந்து 2 கிமீ தொலைவில் பிரசித்தி பெற்ற திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் மற்றும் குன்றின் மேல் ஹயக்கிரீவர் கோவில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். இத்திருக்கோவிலி

கோவில் 1114 - கடலூர் ஆயிக்குப்பம் முருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1114 செல்வம் பெருக அருளும் கடலூர் ஆயிக்குப்பம் முருகன் கோவில் 26.6.2024 புதன் அருள்மிகு முருகன் திருக்கோவில் ஆயிக்குப்பம்-607301 குறிஞ்சிப்பாடி வட்டம் கடலூர் மாவட்டம் இருப்பிடம்: குள்ளஞ்சாவடி 4.5 கிமீ, குறிஞ்சிப்பாடி17 கிமீ, கடலூர் 24 கிமீ, அம்பலவாணன் பேட்டை 3 கிமீ மூலவர்: முருகன் தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியிலிருந்து 4.5 கிமீ தொலைவில் இருக்கும் ஆயிக்குப்பம் கிராமத்தில் செல்வம் பெருக அருளும் முருகன் கோவில் அமைந்துள்ளது. குறிஞ்சிப்பாடியிலிருந்து 17 கிமீ தூரம் அல்லது கடலூர் மாநகரத்திலிருந்து 24 கிமீ தொலைவு அல்லது அம்பலவாணன் பேட்டை முருகன் கோவிலிலிருந்து (1113) 3 கிமீ பிரயாணம் செய்தாலும் ஆயிக்குப்பம் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் வள்ளி, தெய்வானை சமேதராக அருளுகின்றார். இக்கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. பக்தர்கள் காவடி ஏந்தி வழிபாடு

கோவில் 1113 - கடலூர் அம்பலவாணன் பேட்டை முருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1113 குறைகள் தீர்க்கும் கடலூர் அம்பலவாணன் பேட்டை முருகன் கோவில் 25.6.2024 செவ்வாய் அருள்மிகு முருகன் திருக்கோவில் [TM021285] அம்பலவாணன் பேட்டை-607301 குறிஞ்சிப்பாடி வட்டம் கடலூர் மாவட்டம் இருப்பிடம்: குள்ளஞ்சாவடி 3.5 கிமீ, குறிஞ்சிப்பாடி16 கிமீ, கடலூர் 23 கிமீ மூலவர்: முருகன் தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியிலிருந்து 3.5 கிமீ தொலைவில் இருக்கும் அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் குறைகள் யாவும் தீர்க்கும் முருகன் கோவில் அமைந்துள்ளது. குறிஞ்சிப்பாடியிலிருந்து 16 கிமீ தூரம் அல்லது கடலூர் மாநகரத்திலிருந்து 23 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் அம்பலவாணன் பேட்டை முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் அருளாட்சி புரிகின்றார். இக்கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. பக்தர்கள் காவடி ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். முருகப

கோவில் 1112 - சென்னை அமைந்தகரை திருத்தணி சிங்காரவேலன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1112 சந்தோஷம் தரும் சென்னை அமைந்தகரை திருத்தணி சிங்காரவேலன் கோவில் 24.6.2024 திங்கள் அருள்மிகு திருத்தணி சிங்காரவேலன் திருக்கோவில் 425A, PP Garden ஐந்தாவது தெரு [பொன்னுவேல்பிள்ளை தோட்டம்] அமைந்தகரை சென்னை-600029 சென்னை மாவட்டம் இருப்பிடம்: கோயம்பேடு 4.5 கிமீ, சென்னை சென்ட்ரல் 8 கிமீ, எழும்பூர் 6 கிமீ மூலவர்: திருத்தணி சிங்காரவேலன் தேவியர்: வள்ளி, தெய்வானை தல மகிமை: சென்னை மாநகரில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 4.5 கிமீ தொலைவில் இருக்கும் அமைந்தகரை PP Garden ஐந்தாவது தெருவில் சந்தோஷங்களை அள்ளித் தரும் திருத்தணி சிங்காரவேலன் கோவில் அமைந்துள்ளது. சென்னை சென்ட்ரல் பேருந்து நிலையத்திலிருந்தும் [8 கிமீ], எழும்பூர் பேருந்து நிலையத்திலிருந்தும் [6 கிமீ] இக்கோவிலுக்கு வரலாம். இத்திருக்கோவிலில் திருத்தணி சிங்காரவேலன் மூலவராக வள்ளி, தெய்வானை சமேதராக அருள்பாலிக்கின்றார். இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்ட

கோவில் 1111 - ராமநாதபுரம் மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1111 சகல ஐஸ்வர்யங்களையும் தரும் ராமநாதபுரம் மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 23.6.2024 ஞாயிறு அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மோர்ப்பண்ணை-632525 உப்பூர் ராமநாதபுரம் மாவட்டம் இருப்பிடம்: உப்பூர் 1.5 கிமீ, R S மங்கலம் 13 கிமீ, ராமநாதபுரம் 30 கிமீ மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி கும்பாபிஷேகம்: 19.6.2024 தல மகிமை: ராமநாதபுரம் மாவட்டம் உப்பொர் பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கிமீ தொலைவில் இருக்கும் மோர்ப்பண்ணை கிராமத்தில் சகல ஐஸ்வர்யங்களையும் தரும் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. R S மங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது தலைநகரம் ராமநாதபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 30 கிமீ தூரம் பிரயாணம் செய்தாலும் மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் பாலசுப்பிரமணிய சுவாமி மூலவராக அருளாட்சி செய்கின்றார். புதியதாக கும்பாபிஷேகம் நடந்த மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய ச