கோவில் 1111 - ராமநாதபுரம் மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1111
சகல ஐஸ்வர்யங்களையும் தரும் ராமநாதபுரம் மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
23.6.2024 ஞாயிறு
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
மோர்ப்பண்ணை-632525
உப்பூர்
ராமநாதபுரம் மாவட்டம்
இருப்பிடம்: உப்பூர் 1.5 கிமீ, R S மங்கலம் 13 கிமீ, ராமநாதபுரம் 30 கிமீ
மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி
கும்பாபிஷேகம்: 19.6.2024
தல மகிமை:
ராமநாதபுரம் மாவட்டம் உப்பொர் பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கிமீ தொலைவில் இருக்கும் மோர்ப்பண்ணை கிராமத்தில் சகல ஐஸ்வர்யங்களையும் தரும் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. R S மங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது தலைநகரம் ராமநாதபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 30 கிமீ தூரம் பிரயாணம் செய்தாலும் மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இக்கோவிலில் பாலசுப்பிரமணிய சுவாமி மூலவராக அருளாட்சி செய்கின்றார். புதியதாக கும்பாபிஷேகம் நடந்த மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்புற ந்டைபெறுகின்றன.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜூன் 17-ல் [17.6.2024] விக்னேஷ்வர் பூஜை,, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, மறுநாள் [18.6.2024] இரண்டாம் கால யாகசாலை பூஜை மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. 19.6.24 புதன்கிழமையன்று காலை 7:15 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, காலை 9:15 மணிக்கு கோ பூஜை, நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று, மகா பூர்ணாகுதி தீபாரதனை நடைபெற்றது. பின்பு, சிவாச்சாரியார்கள் சந்திரசேகர் மற்றும் மணிகண்ட குருக்கள் தலைமையில், சிவாச்சாரியார்கள் யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீரை ஊர்வலமாக எடுத்துச் சென்று, காலை 11:15 மணிக்கு கோவில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு, புனித நீர் மூலம் மூலவர் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் பிச்சை குருக்கள், தேவகோட்டை ஜமீன்தார் நாராயணன் செட்டியார், மோர்ப்பண்ணை கிராம தலைவர் ராஜதுரை மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தல வரலாறு:
இக்கோவிலின் கும்பாபிஷேகம் 19.6.2024-ல் மிக சிறப்பாக நடைபெற்றது.
தல அமைப்பு:
இக்கோவிலில் மூலவராக பாலசுப்பிரமணிய சுவாமி நின்ற கோலத்ஹ்டில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். எதிரே மயில், பலிபீடம் உள்ளன. மேலும் விநாயக், இடும்பன், நவக்கிரகங்கள் மற்றும் பரிவாஅர தெய்வங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
சகல ஐஸ்வர்யங்கள் வேண்டி, வேண்டியது நிறைவேற, சந்தான பாக்கியம் கிட்ட, வல்வினைகள் அகல, நல்லன அருள, உடல் ஆரோக்கியம் பெற
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
வேண்டியது அனைத்தும் நிறைவேற அருளும் ராமநாதபுரம் மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய சுவாமி மனமுருகி போற்றி தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1111 சகல ஐஸ்வர்யங்களையும் தரும் ராமநாதபுரம் மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய சுவாமி
படம் 2 - 1111 வேண்டியது அனைத்தும் நிறைவேற அருளும் ராமநாதபுரம் மோர்ப்பண்ணை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் (19.6.2024)
Comments
Post a Comment