கோவில் 1112 - சென்னை அமைந்தகரை திருத்தணி சிங்காரவேலன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1112

சந்தோஷம் தரும் சென்னை அமைந்தகரை திருத்தணி சிங்காரவேலன் கோவில்

24.6.2024 திங்கள்


அருள்மிகு திருத்தணி சிங்காரவேலன் திருக்கோவில்

425A, PP Garden ஐந்தாவது தெரு [பொன்னுவேல்பிள்ளை தோட்டம்]

அமைந்தகரை

சென்னை-600029

சென்னை மாவட்டம்

இருப்பிடம்: கோயம்பேடு 4.5 கிமீ, சென்னை சென்ட்ரல் 8 கிமீ, எழும்பூர் 6 கிமீ


மூலவர்: திருத்தணி சிங்காரவேலன்

தேவியர்: வள்ளி, தெய்வானை


தல மகிமை:

சென்னை மாநகரில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 4.5 கிமீ தொலைவில் இருக்கும் அமைந்தகரை PP Garden ஐந்தாவது தெருவில் சந்தோஷங்களை அள்ளித் தரும் திருத்தணி சிங்காரவேலன் கோவில் அமைந்துள்ளது. சென்னை சென்ட்ரல் பேருந்து நிலையத்திலிருந்தும் [8 கிமீ], எழும்பூர் பேருந்து நிலையத்திலிருந்தும் [6 கிமீ] இக்கோவிலுக்கு வரலாம். இத்திருக்கோவிலில் திருத்தணி சிங்காரவேலன் மூலவராக வள்ளி, தெய்வானை சமேதராக அருள்பாலிக்கின்றார்.


இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தினமும் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கந்த சஷ்டி திருநாளன்று காலை 9 மணியளவில் சத்ரு சம்ஹார ஹோமம் சிறப்புற நடைபெறும். மாலை 7 மணியளவில் தேவி நாகாத்தமன் கோவிலில் முருகப்பெருமான் சக்தியிடமிருந்து வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு வரசித்தி விநாயகர் கோவில் அருகில் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு உற்சவ பெருமானுக்கு 108 இளநீர அபிஷேகம் நடைபெறும். மறுநாள் இரவு 7 மணிக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடக்கின்றது. 47 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஆடிப்பூர பாஞ்சாட்சர் காவடி பெருவிழா 7 நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும். மேலும் முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன


தல வரலாறு:

சுமார் 50 வருடங்களுக்கு முன் தெய்வத்திரு ஆனந்தன் என்ற சிறந்த பக்தரின் பேருதவியுடன் கட்டப்பட்டது. தற்போது திருத்தணி சிங்காரவேலன் நிர்வாகக் குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது.


தல அமைப்பு:

அழகிய அமைப்புடன் இக்கோவில் கருவறையில் திருத்தணி சிங்காரவேலன் வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, ஆடிப்பூரம், கார்த்திகை, சஷ்டி, செவ்வாய்


பிரார்த்தனை:

சந்தோஷம் பெற்றிட, மன அமைதி பெற, தொழில், வியாபரம் சிறக்க, கல்வி மேம்பட, நினைத்தது நிறைவேற, தீவினைகள் நீங்க


நேர்த்திக்கடன்:

பால்குடம், பஞ்சாட்சர காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


மன அமைதி பெற அருளும் சென்னை அமைந்தகரை திருத்தணி சிங்காரவேலனை பணிந்து பிரார்த்திப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1112 சந்தோஷம் தரும் சென்னை அமைந்தகரை திருத்தணி சிங்காரவேலன்


படம் 2 - 1112 மன அமைதி பெற அருளும் சென்னை அமைந்தகரை திருத்தணி சிங்காரவேலன்







Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்