கோவில் 1118 - கோயம்புத்தூர் உப்பிலிபாளையம் வேல்முருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1118

எண்ணிய எண்ணங்களை ஈடேற்றும் கோயம்புத்தூர் உப்பிலிபாளையம் வேல்முருகன் கோவில்

30.6.2024 ஞாயிறு


அருள்மிகு வேல்முருகன் திருக்கோவில்

சக்தி நகர்

உப்பிலிபாளையம்

கோயம்புத்தூர்-641015

கோயம்புத்தூர் மாவட்டம்

இருப்பிடம்: காந்திபுரம் 8 கிமீ, சிங்காநல்லூர் 3 கிமீ, கோவை ரயில் சந்திப்பு 9 கிமீ


மூலவர் வேல்முருகன்


தல மகிமை:

கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் நகர பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவில் இருக்கும் உப்பிலிபாளையத்தில் உள்ள சக்தி நகரில் இருக்கும் ஸ்ரீராம் நகரில் எண்ணிய எண்ணங்களை ஈடேற்றும் வேல்முருகன் கோவில் அமைந்துள்ளது. சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலையம் சந்திப்பிலிருந்து 9 கிமீ பிரயாணம் செய்தாலும் உப்பிலிபாளையம் சக்தி நகர் வேல்முருகனை தரிசிக்கலாம். இக்கோவிலில் மூலவராக வேல்முருகன் அருளாட்சி செய்கின்றார்.


இக்கோவிலில் பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. கார்த்திகை, சஷ்டி திருநாட்கள் மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.

தல வரலாறு:

இப்பகுதி முருக பக்தர்கள் மற்றும் புரவலர்கள் பேருதவியுடன் வேல்முருகன் கோவில் எழுப்பப்பட்டது.


தல அமைப்பு:

நேர்த்தியான அமைப்பை உடைய இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் வேல்முருகன் வலது கையில் வேல் ஏந்தியும், இடது கையை இடுப்பில் ஊன்றியும் நின்ற திருக்கோலத்தில் சாந்தசொரூபியாக திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் கணபதி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, குபேர ஐயப்பன், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் உட்பட அனைத்து தெய்வங்களும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், கார்த்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி, சங்கடஹர சதுர்த்தி


பிரார்த்தனை:

எண்ணங்கள் ஈடேற, எதிரிகள் தொல்லை அகல, கல்வி, ஞானம் சிறக்க, வியாபரம் செழிக்க, தொழில் மேம்பட, குழந்தை வரம் வேண்டி, மன அமைதி வேண்டி, துன்பங்கள் நீங்க


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்


திறக்கும் நேரம்:

காலை 6.30-9 மாலை 5.30-8


எதிரிகள் தொல்லை அகல அருளும் கோயம்புத்தூர் உப்பிலிபாளையம் வேல்முருகனை மனமுருகி வேண்டிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1118 எண்ணிய எண்ணங்களை ஈடேற்றும் கோயம்புத்தூர் உப்பிலிபாளையம் வேல்முருகன்


படம் 2 - 1118 எதிரிகள் தொல்லை அகல அருளும் கோயம்புத்தூர் உப்பிலிபாளையம் வேல்முருகன்


Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்