கோவில் 1114 - கடலூர் ஆயிக்குப்பம் முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1114
செல்வம் பெருக அருளும் கடலூர் ஆயிக்குப்பம் முருகன் கோவில்
26.6.2024 புதன்
அருள்மிகு முருகன் திருக்கோவில்
ஆயிக்குப்பம்-607301
குறிஞ்சிப்பாடி வட்டம்
கடலூர் மாவட்டம்
இருப்பிடம்: குள்ளஞ்சாவடி 4.5 கிமீ, குறிஞ்சிப்பாடி17 கிமீ, கடலூர் 24 கிமீ, அம்பலவாணன் பேட்டை 3 கிமீ
மூலவர்: முருகன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியிலிருந்து 4.5 கிமீ தொலைவில் இருக்கும் ஆயிக்குப்பம் கிராமத்தில் செல்வம் பெருக அருளும் முருகன் கோவில் அமைந்துள்ளது. குறிஞ்சிப்பாடியிலிருந்து 17 கிமீ தூரம் அல்லது கடலூர் மாநகரத்திலிருந்து 24 கிமீ தொலைவு அல்லது அம்பலவாணன் பேட்டை முருகன் கோவிலிலிருந்து (1113) 3 கிமீ பிரயாணம் செய்தாலும் ஆயிக்குப்பம் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் வள்ளி, தெய்வானை சமேதராக அருளுகின்றார்.
இக்கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. பக்தர்கள் காவடி ஏந்தி வழிபாடு செய்கின்றனர். முருகப்பெருமானின் மற்ற திருவிழாக்களும் விசேஷ பூஜைகளுடன் நடக்கின்றன.
தல வரலாறு:
இக்கோவில் பழமையானதாகக் கருதப்படுகிறது.
தல அமைப்பு:
இக்கோவில் கருவறையில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் மூலவராக நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் கணபதி, நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்களும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், கார்த்திகை, சஷ்டி, செவ்வாய்
பிரார்த்தனை:
செல்வம் பெருக, நோய்கள் குணமாக, திருமணத்தடை அகல, குழந்தை பாக்கியம் வேண்டி, கல்வி சிறக்க, வேண்டியது கிடைக்க, மன அமைதி கிட்ட
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
நோய்கள் யாவும் குணமாக அருளும் கடலூர் ஆயிக்குப்பம் முருகன் திருப்பாதங்கள் பணிந்து வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1114 செல்வம் பெருக அருளும் கடலூர் ஆயிக்குப்பம் முருகன்
படம் 2- 1114 நோய்கள் யாவும் குணமாக அருளும் கடலூர் ஆயிக்குப்பம் முருகன்
Comments
Post a Comment