கோவில் 1116 - கடலூர் கூத்தப்பாக்கம் ஜெய சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1116

மன மகிழ்ச்சி அளிக்கும் கடலூர் கூத்தப்பாக்கம் ஜெய சுப்பிரமணிய சுவாமி கோவில்

28.6.2024 வெள்ளி


அருள்மிகு ஜெய சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

சண்முகா நகர்

கூத்தப்பாக்கம்

கடலூர்--607002

கடலூர் மாவட்டம்

இருப்பிடம்: கடலூர் 4 கிமீ, பாடலீஸ்வரர் கோவில் 1.5 கிமீ


மூலவர்: ஜெய சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தல மகிமை:

கடலூர் மாநகரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கெடிலம் வட்ட சாலை வழியாக 4. கிமீ தூரத்தில் உள்ள கூத்தப்பாக்கம் சண்முகா நகரில் மன மகிழ்ச்சி அளிக்கும் ஜெய சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் ஜெய சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருள்புரிகின்றார். இக்கோவிலிலிருந்து 1.5 கிமீ தொலைவில் தேவாரப் பாடல் பெற்ற தலமான பாடலீஸ்வரர் கோவில் இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.


இத்திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் முருகப்பெருமானின் மற்றைய திருவிழாக்கள், கிருத்திகை, சஷ்டி, திருநாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

தல வரலாறு:

இக்கோவில் பழமையானதாக கருதப்படுகிறது.


தல அமைப்பு:

இக்கோவிலில் கருவறையில் மூலவர் ஜெய சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அழகு திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், ஐயப்பன், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், கார்த்திகை, சஷ்டி, செவ்வாய்


பிரார்த்தனை:

மன மகிழ்ச்சி கிடைக்க, நினைத்தது நடைபெற, திருமணத்தடை அகல, குழந்தை வேண்டி, கல்வி மேம்பட, தொழில் சிறக்க


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்


நினைத்தது நடைபெற கடலூர் கூத்தப்பாக்கம் ஜெய சுப்பிரமணிய சுவாமியை மனமுருகி தொழுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1116 மன மகிழ்ச்சி தந்தருளும் கடலூர் கூத்தப்பாக்கம் ஜெய சுப்பிரமணிய சுவாமி கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்