கோவில் 1113 - கடலூர் அம்பலவாணன் பேட்டை முருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1113

குறைகள் தீர்க்கும் கடலூர் அம்பலவாணன் பேட்டை முருகன் கோவில்

25.6.2024 செவ்வாய்


அருள்மிகு முருகன் திருக்கோவில் [TM021285]

அம்பலவாணன் பேட்டை-607301

குறிஞ்சிப்பாடி வட்டம்

கடலூர் மாவட்டம்

இருப்பிடம்: குள்ளஞ்சாவடி 3.5 கிமீ, குறிஞ்சிப்பாடி16 கிமீ, கடலூர் 23 கிமீ


மூலவர்: முருகன்

தேவியர்: வள்ளி, தெய்வானை


தல மகிமை:

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியிலிருந்து 3.5 கிமீ தொலைவில் இருக்கும் அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் குறைகள் யாவும் தீர்க்கும் முருகன் கோவில் அமைந்துள்ளது. குறிஞ்சிப்பாடியிலிருந்து 16 கிமீ தூரம் அல்லது கடலூர் மாநகரத்திலிருந்து 23 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் அம்பலவாணன் பேட்டை முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் அருளாட்சி புரிகின்றார்.


இக்கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. பக்தர்கள் காவடி ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். முருகப்பெருமானின் இதர திருவிழாக்களும் சிறப்பு பூஜைகளுடன் நடக்கின்றன.


தல வரலாறு:

மிகவும் பழமையான இக்கோவில் இந்து அறநிலையத் துறை மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் 04.06.2004 அன்று நடைபெற்றது.


தல அமைப்பு:

இக்கோவிலுக்கு முன் வேல், கொடிமரம் உள்ளன. கருவறையில் மூலவர் முருகன் வள்ளி, தெய்வானை சமேதராக திருக்காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், இடும்பன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

குறைகள் தீர, கேட்டது கிடைக்க, மன மகிழ்ச்சி கிடைத்திட, திருமணம், குழந்தை வேண்டி, வினைகள் அகல, நோய்கள் குணமாக


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்


கேட்டதை கொடுத்தருளும் கடலூர் அம்பலவாணன் பேட்டை முருகனை போற்றி வணங்குவோம்!


திறக்கும் நேரம்:

காலை 7-9 மாலை 4.30-7


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1113 குறைகள் தீர்க்கும் கடலூர் அம்பலவாணன் பேட்டை முருகன் கோவில்



Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்