கோவில் 1119 - கோயம்புத்தூர் ராமநாதபுரம் வேல்முருகன் கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1119
துன்பங்களை நீக்கும் கோயம்புத்தூர் ராமநாதபுரம் வேல்முருகன் கோவில்
1.7.2024 திங்கள்
அருள்மிகு வேல்முருகன் திருக்கோவில்
பஜனை கோவில் வீதி
ராமநாதபுரம்
கோயம்புத்தூர்-641045
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 6 கிமீ, சிங்காநல்லூர் 6 கிமீ, கோவை ரயில் சந்திப்பு 4 கிமீ
செல்: திரு முத்துசாமி, தலைவர் 87540 76679
மூலவர் வேல்முருகன்
உற்சவர்: முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை
தல மகிமை:
கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் நகர பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவில் இருக்கும் ராமநாதபுரத்தில் இருக்கும் பஜனை கோவில் வீதியில் துன்பங்களை நீக்கும் வேல்முருகன் கோவில் அமைந்துள்ளது. சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ அல்லது கோயம்புத்தூர் ரயில் நிலையம் சந்திப்பிலிருந்து 4 கிமீ பிரயாணம் செய்தாலும் ராமநாதபுரம் வேல்முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் வேல்முருகன் மூலவராக அருள்புரிகின்றார்.
இக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. தினமும் அபிஷேகம், சிறப்பு தீபாரதனைகள் நடைபெறுகின்றன. 7-ம் நாள் காலை முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவம் தேவியர்களுடன் மிக சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. தொடர்ந்த மகா அன்னதானம் பெரிய அளவில் நடைபெறுகிறது. அதிக அளவில் பக்தர்கள் சஷ்டி விரதம் கடைபிடிக்கின்றனர். பங்குனி உத்திரம், தைப்பூசம், உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. கார்த்திகை, சஷ்டி திருநாட்கள் மற்றும் செவ்வாய்,க்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் உண்டு.
தல வரலாறு:
75 ஆண்டுகளுக்கு முன்னர் பழமையான வேல்முருகன் கோவில்ப்ப இப்பகுதி முருக பக்தர்கள் மற்றும் புரவலர்கள் பேருதவியுடன் எழுப்பப்பட்டது.
தல அமைப்பு:
அழகிய கோபுரம் மற்றும் சிற்பங்களை உடைய இக்கோவில் கருவறையில் மூலவர் வேல்முருகன் வலது கையில் வேல் ஏந்தியும், இடது கையை இடுப்பில் ஊன்றியும் நின்ற திருக்கோலத்தில் ஆற்றல் மிக்கவராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் கற்பக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், உற்சவர்கள், சிவகாமி அம்பாள் சமேத நடராஜர், மாணிக்கவாசகர், பர்வதவர்த்தினி, சமேத ராமநாதசுவாமி, தாயார் சமேத கோதண்டராமர், ஆஞ்சநேயர், நால்வர், கால பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்கள் அனைத்தும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், கார்த்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி, சங்கடஹர சதுர்த்தி,
பிரார்த்தனை:
துன்பங்கள் நீங்க, நினைத்தது நடைபெற, தீவினைகள் அகல, குழந்தை பாக்கியம் கிட்ட, தொழில் சிறக்க, தோஷங்கள் விலக, மன மகிழ்ச்சி பெற, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்.
திறக்கும் நேரம்:
காலை 6-11 மாலை 5.30-8.30
நினைத்தது நடைபெற அருளும் கோயம்புத்தூர் ராமநாதபுரம் வேல்முருகனை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment