கோவில் 1115 - கடலூர் கே என் பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1115

சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் கடலூர் கே என் பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில்

27.6.2024 வியாழன்


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM021441]

கே என் பேட்டை [K N Pettai]-607401

திருவந்திபுரம் PO

கடலூர்

கடலூர் மாவட்டம்

இருப்பிடம்: கடலூர் 4.5 கிமீ, திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 2 கிமீ

செல்: தர்மகர்த்தா திரு. சதாசிவம் 93458 68090


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தல மகிமை:

கடலூர் மாநகரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திருவந்திபுரம் செல்லும் சாலையில் 4.5 கிமீ தூரத்தில் உள்ள கே என் பேட்டையில் சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருளாட்சி செய்கின்றார். இக்கோவிலிலிருந்து 2 கிமீ தொலைவில் பிரசித்தி பெற்ற திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் மற்றும் குன்றின் மேல் ஹயக்கிரீவர் கோவில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.


இத்திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா 13 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. தினமும் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. 6-ம் நாள் மாலை சூரசம்ஹார நிகழ்வும், 7-ம் நாள் திருக்கல்யாண உற்சவமும் விமரிசையாக நடைபெறுகின்றன. ஏராளாமான பக்தர்கள் சஷ்டி விரதமிருந்து சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு, வேண்டிய வரங்களை பெற்று செல்கின்றனர். மேலும் சுப்பிரமணிய சுவாமியின் இதர திருவிழாக்கள் மற்றும் மாதாந்திர கிருத்திகை, பிரதி சஷ்டி, செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன.

தல வரலாறு:

100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இக்கோவிலை இந்து அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. தர்மகர்த்தா தலைமையின் கீழ் கோவில் நிர்வாகக் குழு கோவில் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.


தல அமைப்பு:

அழகிய அமைப்புடன் கூடிய இக்கோவிலில் வேல், கொடிமரம், மயில், பலிபீடம் உள்ளன. திருக்கோவில் கருவறையில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி மூலவராக வீற்றிருந்து பொலிவான தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சிவபெருமான், பார்வதி, பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

கந்த சஷ்டி (13 நாள்), பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கார்த்திகை, சஷ்டி, செவ்வாய்


பிரார்த்தனை:

சகல ஐஸ்வர்யங்களையும் பெற, வேண்டிய வரங்கள் கிடைக்க, திருமணம் நடைபெற, சந்தான பாக்கியம் கிட்ட, உடல் ஆரோக்கியம் வேண்டி, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்


வேண்டிய வரங்களை அள்ளி வழங்கும் கடலூர் கே என் பேட்டை சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1115 சகல ஐஸ்வர்யங்களையும் அருளும்  கடலூர் கே என் பேட்டை சுப்பிரமணிய சுவாமி


படம் 2 - 1115 வேண்டிய வரங்களை அள்ளி வழங்கும் கடலூர் கே என் பேட்டை சுப்பிரமணிய சுவாமி

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்