Posts

Showing posts from October, 2023

கோவில் 876 - நாமக்கல் மாணிக்கம்பாளையம் நல்லகுமார சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-876 பொருளாதாரம் முன்னேற்றமடைய அருளும் நாமக்கல் மாணிக்கம்பாளையம் நல்லகுமார சுவாமி கோவில் 1.11.2023 புதன் அருள்மிகு நல்லகுமார சுவாமி திருக்கோவில் [TM005180] கூத்தம்பூண்டி மாணிக்கம்பாளையம்-637202 திருச்செங்கோடு வட்டம் நாமக்கல் மாவட்டம் இருப்பிடம்: நாமக்கல் 24 கிமீ, திருச்செங்கோடு 16 கிமீ மூலவர்: நல்லகுமார சுவாமி உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை தலமகிமை: நாமக்கல் மாவட்டம் நாமக்கல் நகரிலிருந்து 24 கிமீ தொலைவிலும், திருச்செங்கோடு பேருந்து நிலையத்திலிருந்து 16 கிமீ தொலைவிலும் இருக்கும் மாணிக்கம்பாளையத்தின் அருகிலிருக்கும் கூத்தம்பூண்டி கிராமத்தில் திருமணிமுத்தாற்றங்கரையில் பொருளாதாரம் முன்னேற்றமடைய அருளும் நல்லகுமார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுயம்புவாக, நல்லகுமார சுவாமி என்ற திருப்பெயரில் வீற்றிருக்கும் முருகப்பெருமான் வெளையன் குல மக்களின் குலதெய்வமாக வணங்கப்படுகின்றார். இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி திருவிழா வெகுச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் பால்குடம் ஏந்தி கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வருவர்.

கோவில் 875 - திருச்சி ஊட்டத்தூர் தேவகிரி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-875 நோய்கள் யாவும் தீர்க்கும் திருச்சி ஊட்டத்தூர் தேவகிரி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் 31.10.2023 செவ்வாய் அருள்மிகு தேவகிரி பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் [TM046058] ஊட்டத்தூர்-621109 திருச்சி மாவட்டம் இருப்பிடம்: திருச்சி 44 கிமீ, பெரம்பலூர் 22 கிமீ, பாடலூர் 5 கிமீ மூலவர்: பாலதண்டாயுதபாணி சுவாமி உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை தலமகிமை: திருச்சி மாவட்டம் திருச்சி மாநகரிலிருந்து வடக்கே 44 கிமீ தொலைவிலும், பெரம்பலூர் நகரிலிருந்து தெற்கே 22 கிமீ தொலைவிலும் இருக்கும் ஊட்டத்தூர் எனும் ஊரில் உள்ள தேவகிரி குன்றில் நோய் யாவும் தீர்க்கும் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. பாலதண்டாயுதபாணி சுவாமி அருள்புரியும் இக்கோவிலிலிருந்து பாடலூர் என்ற ஊர் 5 கிமீ அருகில் உள்ளது. இத்திருத்தலத்திற்கு அருகில் பல அதிசயங்களும் ஆன்மிகத் தகவல்களும் கொட்டிக் கிடக்கின்ற ஊட்டத்தூர் சுத்த ரத்னேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. தைப்பூசம் உட்பட அனைத்து திருவிழா நாட்களிலும் வெகு விமரிசையாக பூஜைகள் நடைபெறுகின்றன. தல வரலாறு: ஒரு சமயம் தேவர்களுக்கும், அ

கோவில் 874 - திருச்சி சிறுகனூர் பாலதண்டாயுதபாணி கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-874 நல்லன அருளும் திருச்சி சிறுகனூர் பாலதண்டாயுதபாணி கோவில் 30.10.2023 திங்கள் அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் [TM046722] சிறுகனூர்-621105 திருச்சி மாவட்டம் இருப்பிடம்: திருச்சி 31 கிமீ, சமயபுரம் 14 கிமீ செல்: 80566 39442 மூலவர்: பாலதண்டாயுதபாணி உற்சவர்: முருகப்பெருமான் தலமகிமை: திருச்சி மாவட்டம் திருச்சி மாநகரிலிருந்து 31 கிமீ தொலைவிலும், மக்களை காக்கும் மாரியம்மன் குடியிருக்கும் சமயபுரத்திலிருந்து 14 கிமீ தொலைவிலும் இருக்கும் சிறுகனூர் கிராமத்தில் நல்லன அருளும் பாலதண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. பாலதண்டாயுதபாணி அருளாட்சி செய்யும் இக்கோவிலிலிருந்து சுமார் 4 கிமீ தூரத்தில் மிகவும் புகழ் பெற்ற திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் இருப்பது தனி சிறப்பம்சமாகும். இத்திருக்கோவிலில் வருடந்தோறும் கந்த சஷ்டி திருவிழாவை தொடர்ந்து முருகப்பெருமான் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும். தல வரலாறு: பழமையான சிறுகனூர் பாலதண்டாயுதபாணி கோவில் திருப்பணிகளை இந்து அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. தல அமைப்பு: இக்கோவில் கருவறையில் முருகப்பெருமான் பால

கோவில் 873 - தூத்துக்குடி சிவஞானபுரம் தண்டாயுதபாணி சுவாமி கோவில்

Image
🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-873 மன மகிழ்ச்சி தரும் தூத்துக்குடி சிவஞானபுரம் தண்டாயுதபாணி சுவாமி கோவில் 29.10.2023 ஞாயிறு அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் [TM041218] சிவஞானபுரம்-628712 விளாத்திக்குளம் வட்டம் தூத்துக்குடி மாவட்டம் இருப்பிடம்: விளாத்திக்குளம் 16 கிமீ, தூத்துக்குடி 45 கிமீ, கோவில்பட்டி 35 கிமீ, எட்டையபுரம் 21 கிமீ மூலவர்: தண்டாயுதபாணி சுவாமி பழமை: 19-ம் நூற்றாண்டு தலமகிமை: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் வட்டம் விளாத்திக்குளத்திலிருந்து 16 கிமீ தொலைவில் உள்ள சிவஞானபுரம் என்ற ஊரில் மன மகிழ்ச்சி தரும் பழமையான தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. தூத்துக்குடியிலிருந்து 45 கிமீ, கோவில்பட்டியிலிருந்து 35 கிமீ, எட்டையபுரத்திலிருந்து 21 கிமீ பிரயாணம் செய்தாலும் தண்டாயுதபாணி சுவாமி மூலவராக அருளும் திருத்தலத்தை அடையலாம். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன் தல வரலாறு: நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இத்திருக்கோவில் தற்போது இந்து அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. தல அமைப்பு: திருக்கோவில் கர

கோவில் 872 - புதுக்கோட்டை தண்டாயுதபாணி கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-872 வாழ்வில் ஜெயமளிக்கும் புதுக்கோட்டை தண்டாயுதபாணி கோவில் 28.10.2023 சனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் [TM025503] மேல ராஜ வீதி புதுக்கோட்டை-622001 புதுக்கோட்டை மாவட்டம் இருப்பிடம்: புதுக்கோட்டை பேருந்து நிலையம் 1 கிமீ மூலவர்: தண்டாயுதபாணி உற்சவர்: தண்டாயுதபாணி தலமகிமை: புதுக்கோட்டை நகர பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ அருகில் உள்ள மேல ராஜ வீதியில் வாழ்வில் ஜெயமளிக்கும் தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. ஆற்றல் மிக்க இந்தக் கோவிலில் தண்டாயுதபாணி அருளாட்சி செய்து வருகின்றார். இக்கோவிலில் தைப்பூசம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருநாளையொட்டி பல்வகை அபிஷேகங்கள் முடிந்து, அலங்காரம் நடைபெற்று, சிறப்பு தீபாரதனைகள் நடக்கின்றன. பங்குனி உத்திர திருநாளில் பூஜைகள் முடிந்து சுவாமி திரு உலா வருவது சிறப்பம்சமாகும். ஒவ்வொரு சஷ்டியிலும் விசேஷ பூஜைகள் நடந்து, தண்டாயுதபாணி சந்தன காப்பில் ஜொலிப்பது கண் கொள்ளா காட்சியாகும். முருகப்பெருமானின் இதர திருவிழாக்களும் இதைப் போலவே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன, தல வரலாறு: தொண்டைமான் காலத்தில் கட்டப்

கோவில் 871 - தஞ்சாவூர் ஆடுதுறை சக்திவேல் முருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-871 வேண்டிய வரங்களை அள்ளி வழங்கும் தஞ்சாவூர் ஆடுதுறை சக்திவேல் முருகன் கோவில் 27.10.2023 வெள்ளி அருள்மிகு சக்திவேல் முருகன் திருக்கோவில் அம்மன் கோவில் தெரு ஆடுதுறை-612101 திருவிடைமருதூர் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் இருப்பிடம்: கும்பகோணம் 14 கிமீ மூலவர்: சக்திவேல் முருகன் உற்சவர்: சக்திவேல் முருகன் தலமகிமை: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் கும்பகோணத்திலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ள ஆடுதுறையி வேண்டிய வரங்களை அள்ளி வழங்கும் சக்திவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் சக்திவேல் முருகனாக ஆட்சி செய்யும் இத்திருத்தலம் மயிலாடுதுறையிலிருந்து 23 கிமீ தோலைவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாகம் திருவிழா 54 ஆண்டுகளாக வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. விக்னேஸ்வர பூஜையுடன் வைகாசி விசாகம் திருவிழா தொடங்குகிறது. பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக பால்குடம், பால் காவடி, அலகு காவடி சுமந்து வருவர். காவடி உற்சவம் இக்கோவிலின் சிறப்பம்சமாகும். தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம், சிற்ப்பு தீபாரதனைகள் நடைபெறுகின்றன. திருக்கார்த்திக

கோவில் 870 - தஞ்சாவூர் விளங்குளம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-870 இன்னல்கள் தீர்க்கும் தஞ்சாவூர் விளங்குளம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் 26.10.2023 வியாழன் அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் விளங்குளம்-614612 பேராவூரணி வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் இருப்பிடம்: பேராவூரணி 18 கிமீ, தஞ்சாவூர் 76 கிமீ மூலவர்: பாலதண்டாயுதபாணி சுவாமி உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை தலமகிமை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை-மணமேல்குடி சாலையில் உள்ள பேராவூரணியிலிருந்து 18 கிமீ தொலைவில் இருக்கும் விளங்குளம் கிராமத்தில் இன்னல்கள் தீர்க்கும் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. பாலதண்டாயுதபாணி சுவாமி அருள்பாலிக்கும் இக்கோவில் தஞ்சாவூரிலுருந்து 76 கிமீ தொலைவில் உள்ளது. இத்திருக்கோவிலில் தைப்பூசம் உள்ளிட்ட பாலதண்டாயுதபாணி சுவாமியின் திருவிழாக்கள் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. தல வரலாறு: முக்கிய பிரமுகர்கள் கொண்ட அறக்கட்டளையின் மூலம் இக்கோவில் நிர்வகிக்கக்ப்படுகின்றது தல அமைப்பு: கோவிலுக்குள் நுழைந்தவுடன் வேல், பலிபீடம் மற்றும் மயில் கருவறை நோக்கி உள்ளன. கருவறையில் மூலவர் பாலதண்டாயுதபாணி சுவாமி கையில் த

கோவில் 869 - ஈரோடு P. புளியம்பட்டி தண்டாயுதபாணி சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-869 தீவினைகள் அகற்றும் ஈரோடு P. புளியம்பட்டி தண்டாயுதபாணி சுவாமி கோவில் 25.10.2023 புதன் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் P. புளியம்பட்டி-638459 [புஞ்சை புளியம்பட்டி] சத்தியமங்கலம் வட்டம் ஈரோடு மாவட்டம் இருப்பிடம்: சத்தியமங்கலம் 21 கிமீ, கோயம்புத்தூர் 46, ஈரோடு 71 கிமீ செல்: 99625 63663 மூலவர்: தண்டாயுதபாணி சுவாமி உற்சவர்: முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை தோற்றம்: 1935 தலமகிமை: கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 46 கிமீ தொலைவில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள P. புளியம்பட்டியில் [புஞ்சை புளியம்பட்டி] தீவினைகள் அகற்றும் தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் தண்டாயுதபாணி சுவாமியாக அருளாட்சி செய்யும் இக்கோவிலிலிருந்து 21 கிமீ தொலைவில் சத்தியமங்கலமும், 71 கிமீ பிரயாணம் செய்தால் ஈரோடு நகரையும் அடையலாம். இக்கோவிலில் முருகப்பெருமானின் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி உட்பட அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடபடுகின்றன. தல வரலாறு: P. புளியம்பட்டியில் அதி தீவிர முருக பக

கோவில் 868 - ஈரோடு ஆப்பக்கூடல் பாலதண்டாயுதபாணி கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-868 கல்வி சிறக்க அருளும் ஈரோடு ஆப்பக்கூடல் பாலதண்டாயுதபாணி கோவில் 24.10.2023 செவ்வாய் அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் [TM 012359] ஆப்பக்கூடல்-638315 ஈரோடு மாவட்டம் இருப்பிடம்: பவானி 14 கிமீ, ஈரோடு 28 கிமீ மூலவர்: பாலதண்டாயுதபாணி உற்சவர்: முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை பழமை: 100 ஆண்டுகள் தலமகிமை: ஈரோடு மாவட்டம் ஈரோடு-சத்தியமங்கலம் சாலையில் ஈரோடு மாநகரிலிருந்து 28 கிமீ தொலைவில் உள்ள ஆப்பக்கூடல் கிராமத்தில் உள்ள ஒரு சிறிய குன்றின் மேல் கல்வி சிறக்க அருளும் ஆற்றல் மிக்க பாலதண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. பவானி நகரத்திலிருந்து 14 கிமீ பிரயாணம் செய்தாலும் பாலதண்டாயுதபாணி அருளாட்சி செய்யும் திருக்கோவிலை அடையலாம். இக்கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. பக்தர்கள் பால்குடம் ஏந்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். சுவாமி தேர் உலா திருவிழாவின் சிறப்பம்சமாகும். தல வரலாறு: 100 ஆண்டுகள் பழமையான இக்கோவில் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறை கவனித்து வருகிறது. தல அமைப்ப