கோவில் 869 - ஈரோடு P. புளியம்பட்டி தண்டாயுதபாணி சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-869

தீவினைகள் அகற்றும் ஈரோடு P. புளியம்பட்டி தண்டாயுதபாணி சுவாமி கோவில்

25.10.2023 புதன்


அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்

P. புளியம்பட்டி-638459

[புஞ்சை புளியம்பட்டி]

சத்தியமங்கலம் வட்டம்

ஈரோடு மாவட்டம்

இருப்பிடம்: சத்தியமங்கலம் 21 கிமீ, கோயம்புத்தூர் 46, ஈரோடு 71 கிமீ

செல்: 99625 63663


மூலவர்: தண்டாயுதபாணி சுவாமி

உற்சவர்: முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை

தோற்றம்: 1935


தலமகிமை:

கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 46 கிமீ தொலைவில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள P. புளியம்பட்டியில் [புஞ்சை புளியம்பட்டி] தீவினைகள் அகற்றும் தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் தண்டாயுதபாணி சுவாமியாக அருளாட்சி செய்யும் இக்கோவிலிலிருந்து 21 கிமீ தொலைவில் சத்தியமங்கலமும், 71 கிமீ பிரயாணம் செய்தால் ஈரோடு நகரையும் அடையலாம்.


இக்கோவிலில் முருகப்பெருமானின் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி உட்பட அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடபடுகின்றன.

தல வரலாறு:

P. புளியம்பட்டியில் அதி தீவிர முருக பக்தர்களான கோபால்சாமி நாடார்-அலமேலு அம்மாள் தம்பதியினர் 23.05.1935-ல் தண்டாயுதபாணி சுவாமியை பிரதிஷ்டை செய்து, இக்கோவிலை கட்டினர். இக்கோவில் நிர்வாகத்தை தண்டாயுதபாணி சுவாமி அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இந்த அறக்கட்டளை கோவில் நிர்வாகம் தவிர பக்தர்களுக்கும், ஊர் பொது மக்களுக்கும் அன்னதானம், கல்வி உதவித் தொகை, மருத்துவ முகாம் என எண்ணற்ற அளப்பரிய பணிகளையும் ஆற்றி வருகிறது. இந்து அறநிலையத் துறை பதிவின் [TM10346] படி இக்கோவிலின் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் 10.09.2006-ல் நடைபெற்றது.


தல அமைப்பு:

அழகிய அமைப்புடன் கூடிய கோவிலிக்குள் நுழைந்தவுடன் அழகிய கொடிமரம் உள்ளது. கருவறையில் மூலவராக தண்டாயுதபாணி சுவாமி ஒரு கையில் தண்டம் ஏந்தி, மற்றொரு கையை இடுப்பில் வைத்து பொலிவுடன் வீற்றிருந்து பக்த பெருமக்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சிவபெருமான், அம்பாள், நவக்கிரகங்கள், பைரவர் உள்ளிட்ட தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி,


பிரார்த்தனை:

தீவினைகள் அகல, இகபர சௌபாக்கியம் வேண்டி, கல்யாணம், குழந்தை வேண்டி, செல்வம் பெருக, வேண்டியது கிடைக்க


நேர்த்திக்கடன்:

அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், அன்னதானம்


இகபர சௌபாக்கியம் அருளும் ஈரோடு P. புளியம்பட்டி தண்டாயுதபாணி சுவாமியை மனமுருகி பிரார்த்திப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 869 தீவினைகள் அகற்றும் ஈரோடு P. புளியம்பட்டி தண்டாயுதபாணி சுவாமி


படம் 2 - 869 இகபர சௌபாக்கியம் அருளும் ஈரோடு P. புளியம்பட்டி தண்டாயுதபாணி சுவாமி



Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்