கோவில் 876 - நாமக்கல் மாணிக்கம்பாளையம் நல்லகுமார சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-876
பொருளாதாரம் முன்னேற்றமடைய அருளும் நாமக்கல் மாணிக்கம்பாளையம் நல்லகுமார சுவாமி கோவில்
1.11.2023 புதன்
அருள்மிகு நல்லகுமார சுவாமி திருக்கோவில் [TM005180]
கூத்தம்பூண்டி
மாணிக்கம்பாளையம்-637202
திருச்செங்கோடு வட்டம்
நாமக்கல் மாவட்டம்
இருப்பிடம்: நாமக்கல் 24 கிமீ, திருச்செங்கோடு 16 கிமீ
மூலவர்: நல்லகுமார சுவாமி
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை
தலமகிமை:
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் நகரிலிருந்து 24 கிமீ தொலைவிலும், திருச்செங்கோடு பேருந்து நிலையத்திலிருந்து 16 கிமீ தொலைவிலும் இருக்கும் மாணிக்கம்பாளையத்தின் அருகிலிருக்கும் கூத்தம்பூண்டி கிராமத்தில் திருமணிமுத்தாற்றங்கரையில் பொருளாதாரம் முன்னேற்றமடைய அருளும் நல்லகுமார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுயம்புவாக, நல்லகுமார சுவாமி என்ற திருப்பெயரில் வீற்றிருக்கும் முருகப்பெருமான் வெளையன் குல மக்களின் குலதெய்வமாக வணங்கப்படுகின்றார்.
இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி திருவிழா வெகுச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் பால்குடம் ஏந்தி கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வருவர். தொடர்ந்து பாலாபிஷேகம் உட்பட அனைத்து அபிஷேக, ஆராதனை நடைபெறும். பின்னர் மகா அன்னதானம் நடைபெறுகிறது. மகா சிவராத்திரி திருவிழா 4 நாட்கள் விமரிசையாக நடக்கின்றன. ஆடிக்கிருத்திகை திருநாளில் மாலையில் லட்சார்ச்சனை, அபிஷேகம், சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெறுகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம் திருநாட்களில் பகல் 1 மணிக்கு பல்வகை அபிஷேகங்கள், அலங்காரம், ஆராதனை நடைபெறும். தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். பௌர்ணமி, அமாவாசை, கார்த்திகை, சஷ்டி நன்னாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்.
தல வரலாறு:
இவ்வூர் மக்களின் குலதெய்வமாக போற்றப்படும் நல்லகுமார சுவாமி கோவில் இந்து சமய அறநிலையத் துறையினரால் பராமரிக்கப்படுகின்றது. இக்கோவிலில்
கும்பாபிஷேகம் 7.11.2003 மற்றும் 19.10.2016-ல் சிறப்பாக நடைபெற்றன.
தல அமைப்பு:
அழகிய ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோவில் கருவறையில் மூலவர் நல்லகுமார சுவாமி சுயம்புவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் ஆலமர விநாயகர், கருவறை முன் வாசல் விநாயகர், விநாயகர், கருப்பண்ணசாமி, அய்யனார், இதர சுவாமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இரண்டு கம்பீரமான குதிரைகள் நல்லகுமார சுவாமியை நோக்கி அமைந்துள்ளன,
திருவிழா:
சித்ரா பௌர்ணமி, ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், பௌர்ணமி, அமாவாசை, கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
பொருளாதாரம் முன்னேற்றமடைய, சத்ரு தொல்லைகள் நீங்க, திருமணம் கை கூட, நல்லன அருள, மகிழ்ச்சி பெற, வாழ்வில் வளம் பெற, தோஷங்கள் நீங்க
நேர்த்திக்கடன்:
முடிக்காணிக்கை, பால்குடம், அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், அன்னதானம்
சத்ரு தொல்லைகள் அனைத்தும் நீங்க அருளும் நாமக்கல் மாணிக்கம்பாளையம் நல்லகுமார சுவாமியை மனமுருகி தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 876 பொருளாதாரம் முன்னேற்றமடைய அருளும் நாமக்கல் மாணிக்கம்பாளையம் நல்லகுமார சுவாமி
படம் 2 - 876 சத்ரு தொல்லைகள் அனைத்தும் நீங்க அருளும் நாமக்கல் மாணிக்கம்பாளையம் நல்லகுமார சுவாமி
Comments
Post a Comment