கோவில் 870 - தஞ்சாவூர் விளங்குளம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-870
இன்னல்கள் தீர்க்கும் தஞ்சாவூர் விளங்குளம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்
26.10.2023 வியாழன்
அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்
விளங்குளம்-614612
பேராவூரணி வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
இருப்பிடம்: பேராவூரணி 18 கிமீ, தஞ்சாவூர் 76 கிமீ
மூலவர்: பாலதண்டாயுதபாணி சுவாமி
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை
தலமகிமை:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை-மணமேல்குடி சாலையில் உள்ள பேராவூரணியிலிருந்து 18 கிமீ தொலைவில் இருக்கும் விளங்குளம் கிராமத்தில் இன்னல்கள் தீர்க்கும் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. பாலதண்டாயுதபாணி சுவாமி அருள்பாலிக்கும் இக்கோவில் தஞ்சாவூரிலுருந்து 76 கிமீ தொலைவில் உள்ளது.
இத்திருக்கோவிலில் தைப்பூசம் உள்ளிட்ட பாலதண்டாயுதபாணி சுவாமியின் திருவிழாக்கள் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன.
தல வரலாறு:
முக்கிய பிரமுகர்கள் கொண்ட அறக்கட்டளையின் மூலம் இக்கோவில் நிர்வகிக்கக்ப்படுகின்றது
தல அமைப்பு:
கோவிலுக்குள் நுழைந்தவுடன் வேல், பலிபீடம் மற்றும் மயில் கருவறை நோக்கி உள்ளன. கருவறையில் மூலவர் பாலதண்டாயுதபாணி சுவாமி கையில் தண்டத்துடன் திருக்காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறை வாயிலில் விநாயகர் அருள்கின்றார். மேலும் கணபதி, இடும்பன், நாகர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வ மூர்த்தங்களும் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, கிருத்திகை, சஷ்டி, செவாய், வெள்ளி
பிரார்த்தனை:
இன்னல்கள் தீர, ஐஸ்வர்யம் பெருக, பிணிகள் அகல, நல்லன நடக்க, குடும்ப ஒற்றுமை ஓங்க,
நேர்த்திக்கடன்:
அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்
ஐஸ்வர்யம் பெருக அருளும் தஞ்சாவூர் விளங்குளம் பாலதண்டாயுதபாணி சுவாமியை தொழுது பயன் பெறுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 870 இன்னல்கள் தீர்க்கும் தஞ்சாவூர் விளங்குளம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்
படம் 2 - 870 ஐஸ்வர்யம் பெருக அருளும் தஞ்சாவூர் விளங்குளம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் கணபதி
Comments
Post a Comment