கோவில் 875 - திருச்சி ஊட்டத்தூர் தேவகிரி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-875

நோய்கள் யாவும் தீர்க்கும் திருச்சி ஊட்டத்தூர் தேவகிரி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

31.10.2023 செவ்வாய்


அருள்மிகு தேவகிரி பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் [TM046058]

ஊட்டத்தூர்-621109

திருச்சி மாவட்டம்

இருப்பிடம்: திருச்சி 44 கிமீ, பெரம்பலூர் 22 கிமீ, பாடலூர் 5 கிமீ


மூலவர்: பாலதண்டாயுதபாணி சுவாமி

உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை


தலமகிமை:

திருச்சி மாவட்டம் திருச்சி மாநகரிலிருந்து வடக்கே 44 கிமீ தொலைவிலும், பெரம்பலூர் நகரிலிருந்து தெற்கே 22 கிமீ தொலைவிலும் இருக்கும் ஊட்டத்தூர் எனும் ஊரில் உள்ள தேவகிரி குன்றில் நோய் யாவும் தீர்க்கும் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. பாலதண்டாயுதபாணி சுவாமி அருள்புரியும் இக்கோவிலிலிருந்து பாடலூர் என்ற ஊர் 5 கிமீ அருகில் உள்ளது. இத்திருத்தலத்திற்கு அருகில் பல அதிசயங்களும் ஆன்மிகத் தகவல்களும் கொட்டிக் கிடக்கின்ற ஊட்டத்தூர் சுத்த ரத்னேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.


தைப்பூசம் உட்பட அனைத்து திருவிழா நாட்களிலும் வெகு விமரிசையாக பூஜைகள் நடைபெறுகின்றன.

தல வரலாறு:

ஒரு சமயம் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே நடந்த போரில் தேவர்கள் தோல்வியடைந்தனர். அந்த சமயத்தில் தேவர்கள் இங்கு வந்து தங்கியதால், இப்பகுதி தேவகிரி என்று அழைக்கப்படுகிறது என்கிறது வரலாறு. இந்து அறநிலையத் துறை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் நிர்வாகத்தை கவனித்து வருகிறது.


தல அமைப்பு:

தேவகிரி குன்றின் மீது செல்லும் வழியில் தனி சந்நிதியில் விநாயகர் அருள்கின்றார். அடுத்து இடும்பன் தனி சந்நிதியில் அருள்கின்றார். கோவிலுக்கு நுழையும் முன் அழகிய வேல் ஒன்று உள்ளது. கோவிலுக்குள் நுழைந்த உடன் பலிபீடம், மயில் கருவறைக்கு எதிரில் உள்ளன. கோவில் கருவறையில் பாலதண்டாயுதபாணி கையில் தண்டம் ஏந்தி வேலுடன் நின்ற கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

நோய்கள் தீர, வரம் வேண்டி, சந்தான பாக்கியம் உண்டாக, மனத் தெளிவு பிறக்க, மகிழ்ச்சி உண்டாக


நேர்த்திக்கடன்:

அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


வேண்டிய வரங்களை வழங்கும் திருச்சி ஊட்டத்தூர் தேவகிரி பாலதண்டாயுதபாணி சுவாமி திருப்பாதங்கள் பணிந்து வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 875 நோய்கள் யாவும் தீர்க்கும் திருச்சி ஊட்டத்தூர் தேவகிரி பாலதண்டாயுதபாணி சுவாமி


படம் 2 - 875 வேண்டிய வரங்களை வழங்கும் திருச்சி ஊட்டத்தூர் தேவகிரி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்