கோவில் 872 - புதுக்கோட்டை தண்டாயுதபாணி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-872
வாழ்வில் ஜெயமளிக்கும் புதுக்கோட்டை தண்டாயுதபாணி கோவில்
28.10.2023 சனி
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் [TM025503]
மேல ராஜ வீதி
புதுக்கோட்டை-622001
புதுக்கோட்டை மாவட்டம்
இருப்பிடம்: புதுக்கோட்டை பேருந்து நிலையம் 1 கிமீ
மூலவர்: தண்டாயுதபாணி
உற்சவர்: தண்டாயுதபாணி
தலமகிமை:
புதுக்கோட்டை நகர பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ அருகில் உள்ள மேல ராஜ வீதியில் வாழ்வில் ஜெயமளிக்கும் தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. ஆற்றல் மிக்க இந்தக் கோவிலில் தண்டாயுதபாணி அருளாட்சி செய்து வருகின்றார்.
இக்கோவிலில் தைப்பூசம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருநாளையொட்டி பல்வகை அபிஷேகங்கள் முடிந்து, அலங்காரம் நடைபெற்று, சிறப்பு தீபாரதனைகள் நடக்கின்றன. பங்குனி உத்திர திருநாளில் பூஜைகள் முடிந்து சுவாமி திரு உலா வருவது சிறப்பம்சமாகும். ஒவ்வொரு சஷ்டியிலும் விசேஷ பூஜைகள் நடந்து, தண்டாயுதபாணி சந்தன காப்பில் ஜொலிப்பது கண் கொள்ளா காட்சியாகும். முருகப்பெருமானின் இதர திருவிழாக்களும் இதைப் போலவே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன,
தல வரலாறு:
தொண்டைமான் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில், இந்து சமய அறநிலைத் துறையினரால் நிர்வக்கிக்கப்படுகிறது. இக்கோவிலின் அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் 23.04.2008-ல் நடைபெற்றது.
தல அமைப்பு:
ஆகம விதிகளின் படி கட்டப்பட்ட இக்கோவில் கருவறையில் மூலவர் தண்டாயுதபாணி கையில் வேல் ஏந்தி அழகிய தோற்றத்தில் நின்ற நிலையில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை சிவபெருமான், காமாட்சி அம்மன், மற்றும் துணைவியருடன் நவக்கிரகங்கள் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, கிருத்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
வாழ்வில் ஜெயம் பெற, பிணிகள் தீர, நோய்கள் அகல, கல்வி சிறக்க, தொழில் மேம்பட, கஷ்டங்கள் விலக
நேர்த்திக்கடன்:
அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்
திறக்கும் நேரம்:
காலை 6.30-11.30 மாலை 4.30-8.30
பிணிகள் தீர்க்கும் புதுக்கோட்டை தண்டாயுதபாணியை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 872 வாழ்வில் ஜெயமளிக்கும் புதுக்கோட்டை தண்டாயுதபாணி
படம் 2 - 872 பிணிகள் தீர்க்கும் புதுக்கோட்டை தண்டாயுதபாணி
Comments
Post a Comment