கோவில் 873 - தூத்துக்குடி சிவஞானபுரம் தண்டாயுதபாணி சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-873
மன மகிழ்ச்சி தரும் தூத்துக்குடி சிவஞானபுரம் தண்டாயுதபாணி சுவாமி கோவில்
29.10.2023 ஞாயிறு
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் [TM041218]
சிவஞானபுரம்-628712
விளாத்திக்குளம் வட்டம்
தூத்துக்குடி மாவட்டம்
இருப்பிடம்: விளாத்திக்குளம் 16 கிமீ, தூத்துக்குடி 45 கிமீ, கோவில்பட்டி 35 கிமீ, எட்டையபுரம் 21 கிமீ
மூலவர்: தண்டாயுதபாணி சுவாமி
பழமை: 19-ம் நூற்றாண்டு
தலமகிமை:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் வட்டம் விளாத்திக்குளத்திலிருந்து 16 கிமீ தொலைவில் உள்ள சிவஞானபுரம் என்ற ஊரில் மன மகிழ்ச்சி தரும் பழமையான தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. தூத்துக்குடியிலிருந்து 45 கிமீ, கோவில்பட்டியிலிருந்து 35 கிமீ, எட்டையபுரத்திலிருந்து 21 கிமீ பிரயாணம் செய்தாலும் தண்டாயுதபாணி சுவாமி மூலவராக அருளும் திருத்தலத்தை அடையலாம்.
தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன்
தல வரலாறு:
நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இத்திருக்கோவில் தற்போது இந்து அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது.
தல அமைப்பு:
திருக்கோவில் கருவறையில் மூலவராக தண்டாயுதபாணி சுவாமி கருணை பொங்க வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கணபதி உள்ளிட்ட தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, கிருத்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
மன மகிழ்ச்சி பெற, எண்ணியது ஈடேற, கல்வி மேம்பட, ஐஸ்வர்யம் பெருக, இல்லறம் சிறக்க, நல்லது நடக்க
நேர்த்திக்கடன்:
அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்
எண்ணியது ஈடேற அருளும் தூத்துக்குடி சிவஞானபுரம் தண்டாயுதபாணி சுவாமியை உள்ளம் உருக பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 873 மன மகிழ்ச்சி தரும் தூத்துக்குடி சிவஞானபுரம் தண்டாயுதபாணி சுவாமி கோவில்
Comments
Post a Comment