கோவில் 868 - ஈரோடு ஆப்பக்கூடல் பாலதண்டாயுதபாணி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-868
கல்வி சிறக்க அருளும் ஈரோடு ஆப்பக்கூடல் பாலதண்டாயுதபாணி கோவில்
24.10.2023 செவ்வாய்
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் [TM 012359]
ஆப்பக்கூடல்-638315
ஈரோடு மாவட்டம்
இருப்பிடம்: பவானி 14 கிமீ, ஈரோடு 28 கிமீ
மூலவர்: பாலதண்டாயுதபாணி
உற்சவர்: முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை
பழமை: 100 ஆண்டுகள்
தலமகிமை:
ஈரோடு மாவட்டம் ஈரோடு-சத்தியமங்கலம் சாலையில் ஈரோடு மாநகரிலிருந்து 28 கிமீ தொலைவில் உள்ள ஆப்பக்கூடல் கிராமத்தில் உள்ள ஒரு சிறிய குன்றின் மேல் கல்வி சிறக்க அருளும் ஆற்றல் மிக்க பாலதண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. பவானி நகரத்திலிருந்து 14 கிமீ பிரயாணம் செய்தாலும் பாலதண்டாயுதபாணி அருளாட்சி செய்யும் திருக்கோவிலை அடையலாம்.
இக்கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. பக்தர்கள் பால்குடம் ஏந்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். சுவாமி தேர் உலா திருவிழாவின் சிறப்பம்சமாகும்.
தல வரலாறு:
100 ஆண்டுகள் பழமையான இக்கோவில் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறை கவனித்து வருகிறது.
தல அமைப்பு:
படிக்கட்டுகள் ஏறும் முன்னர் மயில் வீற்றிருந்து வரவேற்கிறது. கோவில் கருவறையில் மூலவராக பாலதண்டாயுதபாணி அழகிய திருக்காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விசேஷ நாட்களிலும், சிறப்பு பூஜை காலங்களிலும் பாலதண்டாயுதபாணி ராஜ அலங்காரத்தில் அருளுவது சிறப்பம்சம். மேலும் கணபதி, காசி விஸ்வநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவக்கிரகங்கள் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருளுகின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி
பிரார்த்தனை:
கல்வி சிறக்க, ஞானம் மேம்பட, தொழில் தொடங்க, நினைத்தது நிறைவேற, குடும்ப ஒற்றுமை ஓங்க, சகல வியாதிகளும் குணமாக
நேர்த்திக்கடன்:
பால்குடம், அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்
தொழில் தொடங்க அருளும் ஈரோடு ஆப்பக்கூடல் பாலதண்டாயுதபாணி திருப்பாதங்கள் பணிந்து வணங்கிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 868 கல்வி சிறக்க அருளும் ஈரோடு ஆப்பக்கூடல் பாலதண்டாயுதபாணி
படம் 2 - 868 தொழில் தொடங்க அருளும் ஈரோடு ஆப்பக்கூடல் பாலதண்டாயுதபாணி
Comments
Post a Comment