கோவில் 874 - திருச்சி சிறுகனூர் பாலதண்டாயுதபாணி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-874
நல்லன அருளும் திருச்சி சிறுகனூர் பாலதண்டாயுதபாணி கோவில்
30.10.2023 திங்கள்
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் [TM046722]
சிறுகனூர்-621105
திருச்சி மாவட்டம்
இருப்பிடம்: திருச்சி 31 கிமீ, சமயபுரம் 14 கிமீ
செல்: 80566 39442
மூலவர்: பாலதண்டாயுதபாணி
உற்சவர்: முருகப்பெருமான்
தலமகிமை:
திருச்சி மாவட்டம் திருச்சி மாநகரிலிருந்து 31 கிமீ தொலைவிலும், மக்களை காக்கும் மாரியம்மன் குடியிருக்கும் சமயபுரத்திலிருந்து 14 கிமீ தொலைவிலும் இருக்கும் சிறுகனூர் கிராமத்தில் நல்லன அருளும் பாலதண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. பாலதண்டாயுதபாணி அருளாட்சி செய்யும் இக்கோவிலிலிருந்து சுமார் 4 கிமீ தூரத்தில் மிகவும் புகழ் பெற்ற திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் இருப்பது தனி சிறப்பம்சமாகும்.
இத்திருக்கோவிலில் வருடந்தோறும் கந்த சஷ்டி திருவிழாவை தொடர்ந்து முருகப்பெருமான் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும்.
தல வரலாறு:
பழமையான சிறுகனூர் பாலதண்டாயுதபாணி கோவில் திருப்பணிகளை இந்து அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது.
தல அமைப்பு:
இக்கோவில் கருவறையில் முருகப்பெருமான் பாலதண்டாயுதபாணி என்ற திருப்பெயருடன் வேல் மற்றும் சேவற்கொடி ஏந்தி திருக்காட்சி அருளி பக்தர்களுக்கு ஆற்றலுடன் அருள்பாலிக்கின்றார். இந்த சிறிய கோவிலில் விநாயகர் தனி சந்நிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
திருவிழா:
கந்த சஷ்டி, திருக்கல்யாணம்
பிரார்த்தனை:
நல்லன நடைபெற, மன நிம்மதி பெற, வேண்டிய வரம் கிடைக்க, நேர்மறை ஆற்றல் உண்டாக
நேர்த்திக்கடன்:
அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்
மன நிம்மதி தந்தருளும் திருச்சி சிறுகனூர் பாலதண்டாயுதபாணியை போற்றி வணங்கிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 874 நல்லன அருளும் திருச்சி சிறுகனூர் பாலதண்டாயுதபாணி
படம் 2 - 874 மன நிம்மதி தந்தருளும் திருச்சி சிறுகனூர் பாலதண்டாயுதபாணி
Comments
Post a Comment