Posts

Showing posts from September, 2023

கோவில் 845 - தேனி கூடலூர் சுந்தரவேலவர் கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-845 துன்பங்கள் நீக்கும் தேனி கூடலூர் சுந்தரவேலவர் கோவில் 1.10.2023 ஞாயிறு அருள்மிகு சுந்தரவேலவர் திருக்கோவில் கூடலூர்-625518 தேனி மாவட்டம் இருப்பிடம்: கம்பம் 8.5 கிமீ மூலவர்: சுந்தர வேலவர் தேவியர்: வள்ளி, தெய்வானை தலமகிமை: தேனி மாவட்டம் கம்பம் நகரிலிருந்து 8.5 கிமீ தொலைவில் இருக்கும் கூடலூர் பகுதியில் துன்பங்கள் நீக்கும் சுந்தரவேலவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவரான சுந்தரவேலவர் தேவியர் சகிதம் அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும். மற்றொரு சிறப்பு மிக்க வழிவிடும் முருகன் கோவில், லோயர் கேம்ப் 8.5 கிமீ தூரத்தில் இருப்பது கூடுதல் சிறப்பு. இத்திருக்கோவிலில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. தினமும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். சூரசம்ஹார நிகழ்வு இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். இது போல பங்குனி உத்திரம், தைப்பூசம், நவராத்திரி உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. தல வரலாறு: கூடலூர் பகுதி பக்தர்களால் இக்கோவில் எழுப்பப்பட்டது. தல அமைப்பு: இக்கோவில் கருவறையில் மூலவர் சுந்தரவேலவர் அபயக்

கோவில் 844 - தேனி கணேச கந்த பெருமாள் கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-844 வேண்டியது அனைத்தும் அருளும் தேனி கணேச கந்த பெருமாள் கோவில் 30.9.2023 சனி அருள்மிகு கணேச கந்த பெருமாள் திருக்கோவில் NRT Nagar [என்.ஆர்.டி. நகர்] தேனி-625531 தேனி மாவட்டம் இருப்பிடம்: தேனி பேருந்து நிலையம் 2 கிமீ மூலவர்: வடிவழகர் தேவியர்: வள்ளி, குஞ்சரி (தெய்வானை) தலமகிமை: தேனி மாவட்டம் தேனி மாநர பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவில் இருக்கும் என்.ஆர்.டி. நகரில் கருணை பொங்க அனைத்தும் அருளும் கணேச கந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவர் வடிவழகர் வள்ளி, குஞ்சரி (தெய்வானை) சமேதராக திருக்காட்சி அருள்கின்றார். இங்கு கணபதியும் முக்கிய கடவுளாக உள்ளதால், இத்திருக்கோவில் கணேச கந்த பெருமாள் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் கந்த பெருமாளை வழிபடுவோருக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து நற்பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோவிலில் கந்த சஷ்டி ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுகிறது. தினமும் அபிஷேகம், ராஜ அலங்காரம் உட்பட சிறப்பு அலங்காரங்கள், தீபாராதனை நடைபெறுகின்றது. ஏராளமான பக்தர்கள் முதல் நாள் காப்பு கட்டி சஷ்டி விரதம்

கோவில் 843 - தஞ்சாவூர் நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் சுப்பிரமணியர் [திருப்புகழ் தலம்]

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-843 புரட்டாசி பௌர்ணமி நன்னாளில் நினைத்ததை நடத்தி தரும் தஞ்சாவூர் நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் சுப்பிரமணியர் [திருப்புகழ் தலம்] 29.9.2023 வெள்ளி அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவில் [TM014522] நல்லூர்-614208 [திருநல்லூர்-614208] பாபநாசம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் இருப்பிடம்: கும்பகோணம் 13 கிமீ, தஞ்சாவூர் 38 கிமீ, பாபநாசம் 5 கிமீ மூலவர்: கல்யாண சுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) அம்மன்: கல்யாணசுந்தரி (கிரிசுந்தரி) உற்சவர்: கல்யாண சுந்தரேஸ்வரர் திருப்புகழ் தெய்வம்: சுப்பிரமணியர் தேவியர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை புராணப்பெயர்: திருநல்லூர் வேறு முக்கிய தெய்வம்: அஷ்ட புஜ மகா காளிகாம்பாள் தல விருட்சம்: வில்வமரம் தீர்த்தம்: சப்தசாகரம் [ஏழு கடல்] பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், அப்பர், அருணகிரிநாதர் (1) தலமகிமை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கோவில் நகரத்திலிருந்து 13 கிமீ தொலைவிலும், தஞ்சாவூர் நகரத்திலிருந்து 38 கிமீ தொலைவிலும், பாபநாசம் வட்டத்திலிருந்து 5 கிமீ தொலைவிலும், சுந்தரபெருமாள் கோவில் ரயில் நிலையம் மற்றும் கபிஸ்த

கோவில் 842 - தஞ்சாவூர் பட்டுக்கோட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-842 நல்லன நடக்க அருளும் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 28.9.2023 வியாழன் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM014250] முருகன் கோவில் சாலை பட்டுக்கோட்டை-614601 தஞ்சாவூர் மாவட்டம் இருப்பிடம்: பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் 1.2 கிமீ, தஞ்சாவூர் 49 கிமீ மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை தலமகிமை: தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் மாநகரின் கிழக்கே 49 கிமீ தொலைவில், பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் (1.2 கிமீ) இருக்கும் முருகன் கோவில் சாலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பாலசுப்பிரமணிய சுவாமி மூலவராக எழுந்தருளி அருள்கின்றார். இங்கு முருகப்பெருமானின் பெருங்கருணையுடன் கல்யாணங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இத்திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா 7 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன, தினமும் காலை சர்வ சத்ரு திரிசதி ஹோமம், அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாரதனைகள் நடக்கின்றன. முதல் நான்கு நாட்கள் மாலையில் வைதீகாள் அலங்காரம், வேடன் அலங்காரம், முதியவர் அலங்காரம், சந்தன அலங

கோவில் 841 - சென்னை சிட்லபாக்கம் வெற்றிவேல் முருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-841 வெற்றிகளை அள்ளி வழங்கும் சென்னை சிட்லபாக்கம் வெற்றிவேல் முருகன் கோவில் 27.9.2023 புதன் அருள்மிகு வெற்றிவேல் முருகன் திருக்கோவில் மகேந்திரவர்மன் சாலை சிட்லபாக்கம் சென்னை-600126 இருப்பிடம்: தாம்பரம் 15 கிமீ, சென்னை சென்ட்ரல் 30 கிமீ, கோயம்பேடு 39 கிமீ மூலவர்: வெற்றிவேல் முருகன் தேவியர்: வள்ளி, தெய்வானை தலமகிமை: சென்னை மாநகரம் தாம்பரம் பேருந்து/ரயில் நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவில் இருக்கும் சிட்லபாக்கத்தில் வெற்றிகளை அள்ளி வழங்கும் வெற்றிவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வெற்றிவேல் முருகன் வள்ளி, தெய்வானையோடு காட்சி தந்து அருள்கின்றார். இக்கோவிலில் பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி முதலான திருவிழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. பால்குடம், காவடி ஏந்தி பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கிருத்திகை, சஷ்டி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. தல வரலாறு: இப்பகுதி புரவலர்கள் மற்றும் முருக பக்தர்கள் உதவியுடன் இத்திருக்கோவில் எழுப்பப்பட்டது. தல அமைப்பு: அழகிய அமைப்புடன் கூடிய இக்கோவில் கருவறையில் மூலவராக

கோவில் 840 - சென்னை மீஞ்சூர் திருப்பதி நகர் பாலதண்டாயுதபாணி கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-840 நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் சென்னை மீஞ்சூர் திருப்பதி நகர் பாலதண்டாயுதபாணி கோவில் 26.9.2023 செவ்வாய் அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் திருப்பதி நகர் மீஞ்சூர் பொன்னேரி வட்டம் சென்னை-601203 திருவள்ளூர் மாவட்டம் இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் 36 கிமீ, கோயம்பேடு 36 கிமீ மூலவர்: பாலதண்டாயுதபாணி தலமகிமை: சென்னை மாநகரில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்தும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தும் 36 கிமீ தொலைவில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் மீஞ்சூர் பகுதியில் உள்ள திருப்பதி நகரில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் பாலதண்டாயுதபாணி கோவில் சிறப்புற அமைந்துள்ளது. இக்கோவிலில் பழனி தண்டாயுதபாணி போலவே மூலவர் பாலதண்டாயுதபாணி ஞான வடிவமாக காட்சி தந்து அருள்கின்றார், எனவே மீஞ்சூர் திருப்பதி நகர் பாலதண்டாயுதபாணியை பழனி கோவில் அம்சம் என்கின்றனர். இக்கோவிலில் சேனாதிபதீஸ்வரர், சக்ரநாயகி ரேணுகா பரமேஸ்வரி அம்பாள் மற்றும் 18 சித்தர்கள் வீற்றிருந்து அருள்வது கூடுதல் சிறப்பம்சமாகும். இக்கோவிலில் பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி திருவிழா

கோவில் 839 - ஈரோடு பவானி பழனியாண்டவர் கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-839 வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் ஈரோடு பவானி பழனியாண்டவர் கோவில் 25.9.2023 திங்கள் அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோவில் [TM010225] பவானி-638301 ஈரோடு மாவட்டம் இருப்பிடம்: பவானி பழைய பேருந்து நிலையம் 200 மீ மூலவர்: பழனியாண்டவர் உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை தலமகிமை: ஈரோடு மாவட்டம் பவானி நகரம் மையப்பகுதியில் பவானி அஞ்சல் நிலையம் அருகில் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் பழனியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் அருகிலும், பவானி பழைய பேருந்து நிலையத்திலிருந்து 200 மீ தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகப்பெருமான் பழனியாண்டவராக, தண்டாயுதபாணியாக அருள்புரிகின்றார். இக்கோவிலில் தைப்பூச திருவிழா ஒவ்வொரு வருடமும் வாஸ்து பூஜையுடன் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளையும் பல்வேறு சிறப்பு பூஜைகள் பழனியாண்டவருக்கு நடைபெறும். தைப்பூச திருவிழாவையொட்டி இக்கோவிலில் இருந்து பவானியில் இருந்து பக்தர்கள் பலர் பாதயாத்திரையாக பழனிக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். தைப்பூச விழாவின் முக்கிய நிகழ

கோவில் 838 - சென்னை எருக்கஞ்சேரி சிங்காரவேலவர் கோவில்

Image
 🙏🏻🙏🏻                                                                                                             தினம் ஒரு முருகன் ஆலயம்-838 வேண்டிய வரங்கள் தரும் சென்னை எருக்கஞ்சேரி சிங்காரவேலவர் கோவில்  24.9.2023 ஞாயிறு அருள்மிகு சிங்காரவேலவர் திருக்கோவில் [TM000044] இரண்டாவது மெயின் ரோடு திருவள்ளுவர் நகர் எருக்கஞ்சேரி  சென்னை-600118  இருப்பிடம்: சென்னை சென்ட்ரல்/பாரிமுனை 8 கிமீ, கோயம்பேடு 16 கிமீ மூலவர்: சிங்காரவேலவர் தேவியர்: வள்ளி, தெய்வானை தலமகிமை: சென்னை மாநகரில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அல்லது பாரிமுனை பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தூரத்தில் உள்ள கொடுங்கையூர் பகுதி எருக்கஞ்சேரியில் திருவள்ளுவர் நகர் இரண்டாவது மெயின் ரோட்டில் வேண்டிய வரங்கள் தரும் சிங்காரவேலவர் கோவில் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவராக சிங்காரவேலவர் வள்ளி, தெய்வானையுடன் அருட்காட்சி தருகின்றார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 16 கிமீ தொலைவில் இக்கோவில் உள்ளது. தமிழ்நாடு அறநிலையத் துறையினரால் நிர்வகிக்கப்படும் இக்கோவிலில் முருகப்பெருமானுக்கு உரிய திருவிழாக்கள் அனைத்தும் நிறைவாகக் கொண்ட

கோவில் 837 - கன்னியாகுமரி ஆரல்வாய்மொழி வௌவ்வால் குகை பாலமுருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-837 எண்ணியதை நிறைவேற்றும் கன்னியாகுமரி ஆரல்வாய்மொழி வௌவ்வால் குகை பாலமுருகன் கோவில் 23.9.2023 சனி அருள்மிகு வௌவ்வால் குகை பாலமுருகன் திருக்கோவில் பெருமாள்புரம் ஆரல்வாய்மொழி-629302 கன்னியாகுமரி மாவட்டம் இருப்பிடம்: நாகர்கோவில் 16 கிமீ, ஆரல்வாய்மொழி பேருந்து நிலையம் 1.5 கிமீ மூலவர்: பாலமுருகன் உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை பழமை: 3000 ஆண்டுகள் தலமகிமை: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரிலிருந்து 16 கிமீ தொலைவில் உள்ள ஆரல்வாய்மொழி என்ற ஊரில் இருக்கும் பெருமாள்புரம் பகுதியில் உள்ள ஒரு சிறிய குன்றில் எண்ணியதை நிறைவேற்றும் வௌவ்வால் குகை பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. 3000 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் பாலமுருகன் அருள்புரிந்து வருகின்றார். ஆரல்வாய்மொழி பேருந்து நிலையத்தில் இருந்து 1.5 கிமீ பிரயாணம் செய்தால் இக்கோவிலை அடையலாம். வௌவ்வால் குகை பாலமுருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது. விழாவில் முதல் நாள் காலையில் கணபதி ஹோமம், 10 மணிக்கு வௌவ்வால் குகை பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பின்னர் காப்பு கட்ட