கோவில் 842 - தஞ்சாவூர் பட்டுக்கோட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-842

நல்லன நடக்க அருளும் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

28.9.2023 வியாழன்


அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM014250]

முருகன் கோவில் சாலை

பட்டுக்கோட்டை-614601

தஞ்சாவூர் மாவட்டம்

இருப்பிடம்: பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் 1.2 கிமீ, தஞ்சாவூர் 49 கிமீ


மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி

உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை


தலமகிமை:

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் மாநகரின் கிழக்கே 49 கிமீ தொலைவில், பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் (1.2 கிமீ) இருக்கும் முருகன் கோவில் சாலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பாலசுப்பிரமணிய சுவாமி மூலவராக எழுந்தருளி அருள்கின்றார். இங்கு முருகப்பெருமானின் பெருங்கருணையுடன் கல்யாணங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன.


இத்திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா 7 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன, தினமும் காலை சர்வ சத்ரு திரிசதி ஹோமம், அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாரதனைகள் நடக்கின்றன. முதல் நான்கு நாட்கள் மாலையில் வைதீகாள் அலங்காரம், வேடன் அலங்காரம், முதியவர் அலங்காரம், சந்தன அலங்காரம் என விதம் விதமாக முருகப்பெருமானுக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும். 5-ம் நாள் மாலை சக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெறும். 6-ம் நாள் கந்த சஷ்டி திருநாளன்று மாலை சூரசம்ஹாரம் சிறப்பாக நிகழும். பின்னர் விஸ்வரூபம் அலங்காரம் நடைபெற்று மகா தீபாரதனை நடைபெறும். 7-ம் நாள் காலை முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். இது போல முருகப்பெருமானின் இதர திருவிழாக்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.


தல வரலாறு:

இவ்வூர் அர்ப்பணிப்பு மிக்க புரவலர்கள் மற்றும் அதி சிறந்த பக்தர்களால் கோவில் நிறுவப்பட்டு, இந்து அறநிலையத் துறையினரால் நிர்வகிக்கப்படுகிறது. 01.06.2014 அன்று இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.


தல அமைப்பு:

அழகிய சிற்பங்களுடன் கூடிய இக்கோவில் கருவறையில் முருகப்பெருமான் பாலசுப்பிரமணிய சுவாமியாக திருக்காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் அருள்புரிகின்றனர்.


திருவிழா:

கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

நல்லன நடக்க, கேட்டது கிடைக்க, திருமணம் வேண்டி, குழந்தை வேண்டி, கல்வி, ஞானம் மேம்பட, செல்வம் பெருக, பிணிகள் அகல


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 7.30-12 மாலை 4.30-8


கேட்டதை கொடுத்தருளும் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை பாலசுப்பிரமணிய சுவாமி தாள் பணிந்து வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 842 நல்லன நடக்க அருளும் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை பாலசுப்பிரமணிய சுவாமி


படம் 2 - 842 கேட்டதை கொடுத்தருளும் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை பாலசுப்பிரமணிய சுவாமி

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்