கோவில் 841 - சென்னை சிட்லபாக்கம் வெற்றிவேல் முருகன் கோவில்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-841

வெற்றிகளை அள்ளி வழங்கும் சென்னை சிட்லபாக்கம் வெற்றிவேல் முருகன் கோவில்

27.9.2023 புதன்


அருள்மிகு வெற்றிவேல் முருகன் திருக்கோவில்

மகேந்திரவர்மன் சாலை

சிட்லபாக்கம்

சென்னை-600126

இருப்பிடம்: தாம்பரம் 15 கிமீ, சென்னை சென்ட்ரல் 30 கிமீ, கோயம்பேடு 39 கிமீ


மூலவர்: வெற்றிவேல் முருகன்

தேவியர்: வள்ளி, தெய்வானை


தலமகிமை:

சென்னை மாநகரம் தாம்பரம் பேருந்து/ரயில் நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவில் இருக்கும் சிட்லபாக்கத்தில் வெற்றிகளை அள்ளி வழங்கும் வெற்றிவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வெற்றிவேல் முருகன் வள்ளி, தெய்வானையோடு காட்சி தந்து அருள்கின்றார்.


இக்கோவிலில் பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி முதலான திருவிழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. பால்குடம், காவடி ஏந்தி பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கிருத்திகை, சஷ்டி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

தல வரலாறு:

இப்பகுதி புரவலர்கள் மற்றும் முருக பக்தர்கள் உதவியுடன் இத்திருக்கோவில் எழுப்பப்பட்டது.


தல அமைப்பு:

அழகிய அமைப்புடன் கூடிய இக்கோவில் கருவறையில் மூலவராக முருகப்பெருமான், வெற்றிவேல் முருகன் என்ற திருப்பெயருடன் வேல், சேவற்கொடி ஏந்தி நின்ற கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக திருக்காட்சி அருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விநாயகர் உட்பட உப தெய்வங்களும் வீற்றிருந்து அருள்கின்றனர்.


திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

வெற்றிகள் வேண்டி, திருமணம் நடைபெற, குழந்தை பாக்கியம் கிட்ட, நினைத்தது நடக்க


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6-10 மாலை 5-8


திருமண பாக்கியம் தந்தருளும் சென்னை சிட்லபாக்கம் வெற்றிவேல் முருகனை மனம் குளிர வணங்கி மகிழ்வோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 841 வெற்றிகளை அள்ளி வழங்கும் சென்னை சிட்லபாக்கம் வெற்றிவேல் முருகன்


படம் 2 - 841 திருமண பாக்கியம் தந்தருளும் சென்னை சிட்லபாக்கம் வெற்றிவேல் முருகன் கோவில்



Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்