கோவில் 845 - தேனி கூடலூர் சுந்தரவேலவர் கோவில்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-845

துன்பங்கள் நீக்கும் தேனி கூடலூர் சுந்தரவேலவர் கோவில்

1.10.2023 ஞாயிறு


அருள்மிகு சுந்தரவேலவர் திருக்கோவில்

கூடலூர்-625518

தேனி மாவட்டம்

இருப்பிடம்: கம்பம் 8.5 கிமீ


மூலவர்: சுந்தர வேலவர்

தேவியர்: வள்ளி, தெய்வானை


தலமகிமை:

தேனி மாவட்டம் கம்பம் நகரிலிருந்து 8.5 கிமீ தொலைவில் இருக்கும் கூடலூர் பகுதியில் துன்பங்கள் நீக்கும் சுந்தரவேலவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவரான சுந்தரவேலவர் தேவியர் சகிதம் அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும். மற்றொரு சிறப்பு மிக்க வழிவிடும் முருகன் கோவில், லோயர் கேம்ப் 8.5 கிமீ தூரத்தில் இருப்பது கூடுதல் சிறப்பு.


இத்திருக்கோவிலில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. தினமும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். சூரசம்ஹார நிகழ்வு இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். இது போல பங்குனி உத்திரம், தைப்பூசம், நவராத்திரி உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.


தல வரலாறு:

கூடலூர் பகுதி பக்தர்களால் இக்கோவில் எழுப்பப்பட்டது.


தல அமைப்பு:

இக்கோவில் கருவறையில் மூலவர் சுந்தரவேலவர் அபயக் கரங்களுடன் வேல், சேவற்கொடியுடன் வள்ளி, தெய்வானை சமேதராக திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் கணபதி, ஐயப்பன், சிவபெருமான், அம்பாள், சரஸ்வதி உள்ளிட்ட தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, நவராத்திரி


பிரார்த்தனை:

துன்பங்கள் நீங்க, எண்ணியது ஈடேற, திருமணம் வரம், குழந்தை வரம் வேண்டி, வினைகள் அகல


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


எண்ணியதை ஈடேற்றும் தேனி கூடலூர் சுந்தரவேலவரை வேண்டி பிரார்த்திப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 845 துன்பங்கள் நீக்கும் தேனி கூடலூர் சுந்தரவேலவர் 


படம் 2 - 845 எண்ணியதை ஈடேற்றும் தேனி கூடலூர் சுந்தரவேலவர்



Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்