கோவில் 837 - கன்னியாகுமரி ஆரல்வாய்மொழி வௌவ்வால் குகை பாலமுருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-837
எண்ணியதை நிறைவேற்றும் கன்னியாகுமரி ஆரல்வாய்மொழி வௌவ்வால் குகை பாலமுருகன் கோவில்
23.9.2023 சனி
அருள்மிகு வௌவ்வால் குகை பாலமுருகன் திருக்கோவில்
பெருமாள்புரம்
ஆரல்வாய்மொழி-629302
கன்னியாகுமரி மாவட்டம்
இருப்பிடம்: நாகர்கோவில் 16 கிமீ, ஆரல்வாய்மொழி பேருந்து நிலையம் 1.5 கிமீ
மூலவர்: பாலமுருகன்
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை
பழமை: 3000 ஆண்டுகள்
தலமகிமை:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரிலிருந்து 16 கிமீ தொலைவில் உள்ள ஆரல்வாய்மொழி என்ற ஊரில் இருக்கும் பெருமாள்புரம் பகுதியில் உள்ள ஒரு சிறிய குன்றில் எண்ணியதை நிறைவேற்றும் வௌவ்வால் குகை பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. 3000 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் பாலமுருகன் அருள்புரிந்து வருகின்றார். ஆரல்வாய்மொழி பேருந்து நிலையத்தில் இருந்து 1.5 கிமீ பிரயாணம் செய்தால் இக்கோவிலை அடையலாம்.
வௌவ்வால் குகை பாலமுருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது. விழாவில் முதல் நாள் காலையில் கணபதி ஹோமம், 10 மணிக்கு வௌவ்வால் குகை பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பின்னர் காப்பு கட்டுதல் ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து வருகிற விழா நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை, பக்தி பஜனை போன்றவை நடைபெறும். 6-ம் நாள் காலையில் வௌவ்வால் குகை பாலமுருகனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு பாலமுருகன் போர்க்கால முருகனாக குதிரை வாகனத்தில் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளிகின்றார். தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சூரபதுமனை பாலமுருகன் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடியபெறும். பின்னர் வாணவேடிக்கை, பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பாலமுருகன் மயில் வாகனத்தில் எழுந்தருளல் போன்றவை நடக்கிறது. 7-ம் நாள் முருகப்பெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சியும், பின்னர் மாபெரும் அன்னதானமும் நடைபெறுகிறது. இது போல முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.
தல வரலாறு:
3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் நிர்வாகத்தை இந்து நாடார் சமுதாய பெருமக்கள் நிர்வகித்து வருகின்றனர்.
தல அமைப்பு:
திருக்கோவில் கருவறையில் மூலவராக பாலமுருகன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விநாயகர் தனி சந்நிதியில் அருள்புரிகின்றார்
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், கிருத்திகை, சஷ்டி, வெள்ளி
பிரார்த்தனை:
எண்ணியது நிறைவேற, திருமண வரம் வேண்டி, குழந்தைப்பேறு கிட்ட, கல்வி மேம்பட, வியாபாரம் சிறக்க
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், அன்னதானம்
திருமண வரம் அருளும் கன்னியாகுமரி ஆரல்வாய்மொழி வௌவ்வால் குகை பாலமுருகனை மனக்கண்ணால் தரிசித்து மகிழ்வோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 837 எண்ணியதை நிறைவேற்றும் கன்னியாகுமரி ஆரல்வாய்மொழி வௌவ்வால் குகை பாலமுருகன்
படம் 2 - 837 திருமண வரம் அருளும் கன்னியாகுமரி ஆரல்வாய்மொழி வௌவ்வால் குகை பாலமுருகன்
Comments
Post a Comment