கோவில் 844 - தேனி கணேச கந்த பெருமாள் கோவில்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-844

வேண்டியது அனைத்தும் அருளும் தேனி கணேச கந்த பெருமாள் கோவில்

30.9.2023 சனி


அருள்மிகு கணேச கந்த பெருமாள் திருக்கோவில்

NRT Nagar [என்.ஆர்.டி. நகர்]

தேனி-625531

தேனி மாவட்டம்

இருப்பிடம்: தேனி பேருந்து நிலையம் 2 கிமீ


மூலவர்: வடிவழகர்

தேவியர்: வள்ளி, குஞ்சரி (தெய்வானை)


தலமகிமை:

தேனி மாவட்டம் தேனி மாநர பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவில் இருக்கும் என்.ஆர்.டி. நகரில் கருணை பொங்க அனைத்தும் அருளும் கணேச கந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவர் வடிவழகர் வள்ளி, குஞ்சரி (தெய்வானை) சமேதராக திருக்காட்சி அருள்கின்றார். இங்கு கணபதியும் முக்கிய கடவுளாக உள்ளதால், இத்திருக்கோவில் கணேச கந்த பெருமாள் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் கந்த பெருமாளை வழிபடுவோருக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து நற்பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


இக்கோவிலில் கந்த சஷ்டி ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுகிறது. தினமும் அபிஷேகம், ராஜ அலங்காரம் உட்பட சிறப்பு அலங்காரங்கள், தீபாராதனை நடைபெறுகின்றது. ஏராளமான பக்தர்கள் முதல் நாள் காப்பு கட்டி சஷ்டி விரதம் கடைபிடிக்கின்றனர். பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம் உட்பட வேலவனின் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடக்கின்றன. ஆற்றல் மிக்க அனைத்து தெய்வங்களும் இங்கு வீற்றிருப்பதால் விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி உட்பட அனைத்து திருவிழாக்களும் கொண்டாடப்படுகின்றன.


தல வரலாறு:

தேனி மாநகர பக்தர்கள் மற்றும் புரவலர்கள் பேருதவியுடன் கணேச கந்த பெருமாள் கோவில் கட்டப்பட்டது. சமீபத்தில் புதிய சாய்பாபா கோவில் அருகில் நிறுவப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சம்.


தல அமைப்பு:

அழகிய இறைவன் சிற்பங்களுடன் கூடிய இக்கோவில் கருவறையில் முருகப்பெருமான் வடிவழகர் என்ற திருப்பெயருடன் வள்ளி, குஞ்சரி (தெய்வானை) உடன் கருணை பொங்க வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் கன்னி மூல கணபதி, சித்தி விநாயகர், சிவபெருமான், சண்டிகேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சௌந்தரராஜ பெருமாள், லட்சுமி ஹயக்ரீவர், யோக நரசிம்மர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், மங்கள் வராஹி, ராகவேந்திர்,ர தட்சிணாமூர்த்தி, அஷ்ட புஜ துர்க்கை, நாக தெய்வங்கள், நவக்கிரகங்கள் மற்றும் கால பைரவர் முதலான தெய்வங்கள் தனித் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். சக்தி மிக்க சாய்பாபா அருகில் தனிக் கோவிலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.


திருவிழா:

கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, ஏகாதசி, விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி


பிரார்த்தனை:

வேண்டியது அனைத்தும் கிட்ட, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, ஐஸ்வர்யம் பெருக, நோய்கள் தீர, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உண்டாக


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


ஐஸ்வர்யம் பெருக அருளும் தேனி கணேச கந்த பெருமாள் கோவில் வடிவழகரை மனமுருக வேண்டுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 844 ஐஸ்வர்யம் பெருக அருளும் தேனி கணேச கந்த பெருமாள் கோவில் வடிவழகர்


படம் 2 - 844 வேண்டியது அனைத்தும் அருளும் தேனி கணேச கந்த பெருமாள் கோவில் வடிவழகர்







Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்