கோவில் 838 - சென்னை எருக்கஞ்சேரி சிங்காரவேலவர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-838
வேண்டிய வரங்கள் தரும் சென்னை எருக்கஞ்சேரி சிங்காரவேலவர் கோவில்
24.9.2023 ஞாயிறு
அருள்மிகு சிங்காரவேலவர் திருக்கோவில் [TM000044]
இரண்டாவது மெயின் ரோடு
திருவள்ளுவர் நகர்
எருக்கஞ்சேரி
சென்னை-600118
இருப்பிடம்: சென்னை சென்ட்ரல்/பாரிமுனை 8 கிமீ, கோயம்பேடு 16 கிமீ
மூலவர்: சிங்காரவேலவர்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தலமகிமை:
சென்னை மாநகரில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அல்லது பாரிமுனை பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தூரத்தில் உள்ள கொடுங்கையூர் பகுதி எருக்கஞ்சேரியில் திருவள்ளுவர் நகர் இரண்டாவது மெயின் ரோட்டில் வேண்டிய வரங்கள் தரும் சிங்காரவேலவர் கோவில் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவராக சிங்காரவேலவர் வள்ளி, தெய்வானையுடன் அருட்காட்சி தருகின்றார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 16 கிமீ தொலைவில் இக்கோவில் உள்ளது.
தமிழ்நாடு அறநிலையத் துறையினரால் நிர்வகிக்கப்படும் இக்கோவிலில் முருகப்பெருமானுக்கு உரிய திருவிழாக்கள் அனைத்தும் நிறைவாகக் கொண்டாடப்படுகின்றன. கிருத்திகை, சஷ்டி தினங்களில் விசேஷ வழிபாடுகள் உண்டு.
தல வரலாறு:
தமிழ்நாடு அறநிலையத் துறையினரால் நிர்வகிக்கப்படும் பழமையான கோவில் இதுவாகும் [TM000044]. புனரமைக்கப்பட்ட இக்கோவில் கும்பாபிஷேகம் 23.01.2013-ல் நடைபெற்றது.
தல அமைப்பு:
அழகிய சிற்பங்களுடன் கூடிய இக்கோவில் கருவறையில் முருகப்பெருமான், சிங்காரவேலவர் திருப்பெயரில் வீற்றிருந்து வள்ளி, தெய்வானை சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். உபதெய்வங்கள் விநாயகர், ஐயப்பன், அம்பாள் சமேத ஈஸ்வரர், லட்சுமி சமேத பெருமாள், நவக்கிரகங்கள் தனித் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருளுகின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி
பிரார்த்தனை:
வேண்டிய வரம் தர, மன அமைதி பெற, திருமண பிராப்தம், குழந்தை பிராப்தம் வேண்டி, தீவினைகள் அகல
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்
மன அமைதி தந்தருளும் சென்னை எருக்கஞ்சேரி சிங்காரவேலவரை சிந்தை குளிர வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 838 வேண்டிய வரங்கள் தரும் சென்னை எருக்கஞ்சேரி சிங்காரவேலவர்
படம் 2 - 838 மன அமைதி தந்தருளும் சென்னை எருக்கஞ்சேரி சிங்காரவேலவர்
Comments
Post a Comment