கோவில் 840 - சென்னை மீஞ்சூர் திருப்பதி நகர் பாலதண்டாயுதபாணி கோவில்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-840

நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் சென்னை மீஞ்சூர் திருப்பதி நகர் பாலதண்டாயுதபாணி கோவில்

26.9.2023 செவ்வாய்


அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

திருப்பதி நகர்

மீஞ்சூர்

பொன்னேரி வட்டம்

சென்னை-601203

திருவள்ளூர் மாவட்டம்

இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் 36 கிமீ, கோயம்பேடு 36 கிமீ

மூலவர்: பாலதண்டாயுதபாணி


தலமகிமை:

சென்னை மாநகரில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்தும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தும் 36 கிமீ தொலைவில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் மீஞ்சூர் பகுதியில் உள்ள திருப்பதி நகரில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் பாலதண்டாயுதபாணி கோவில் சிறப்புற அமைந்துள்ளது. இக்கோவிலில் பழனி தண்டாயுதபாணி போலவே மூலவர் பாலதண்டாயுதபாணி ஞான வடிவமாக காட்சி தந்து அருள்கின்றார், எனவே மீஞ்சூர் திருப்பதி நகர் பாலதண்டாயுதபாணியை பழனி கோவில் அம்சம் என்கின்றனர்.


இக்கோவிலில் சேனாதிபதீஸ்வரர், சக்ரநாயகி ரேணுகா பரமேஸ்வரி அம்பாள் மற்றும் 18 சித்தர்கள் வீற்றிருந்து அருள்வது கூடுதல் சிறப்பம்சமாகும். இக்கோவிலில் பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. அமாவாசை, பௌர்ணமி நிறைநாட்களில் சிறப்பு யாகம், பூஜைகள் நடைபெற்று அன்னம் பாலிப்பு நடைபெறுகிறது. அந்நாட்களில் பாலதண்டாயுதபாணிக்கு படைக்கப்பட்ட பஞ்சாமிர்தம் பிரசாதமாக பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது.

தல வரலாறு:

ராஜசித்தம் சேவா அறக்கட்டளை மூலம் இக்கோவில் நல்ல முறையில் நிர்வகிக்கப்படுகிறது. அறக்கட்டளை மூலம் பல பொது சேவைகள் நடக்கின்றன.


தல அமைப்பு:

திருக்கோவில் கருவறையில் மூலவர் பாலதண்டாயுதபாணி சுவாமி கையில் ஏந்தி பழனி தண்டாயுதபாணி அம்சமாக திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறையின் கீழ் பாதாள லிங்கம் இருந்து அருள்வதால் பாலதண்டாயுதபாணி ஆற்றல் மிக்கவராகவும், ஞானம் மிக்கவராகவும் காட்சி அளிக்கின்றார். சேனாதிபதீஸ்வரர், சக்ரநாயகி ரேணுகா பரமேஸ்வரி அம்பாள் இருவரும் பிரதானமாக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். சித்தி, புத்தி சமேத ஞான கணபதி தனி சந்நிதியில் அருள்கின்றார். இக்கோவிலில் வீற்றிருக்கும் நந்திதேவர், அகத்தியர், திருமூலர், போகர், கொங்கணர், மச்சமுனி, கோரக்கர், சட்டைமுனி, சுந்தரனந்தர், ராமதேவர், குதம்பை, கருவூரார், இடைக்காடர், கமலமுனி, பதஞ்சலி, தன்வந்திரி, பாம்பாட்டி, வால்மீகி ஆகிய 18 சித்தர்களையும் ஒரு சேர தரிசிக்கலாம். 18 சித்தர்களும் கிரக தோஷங்களை நீக்கி அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, கிருத்திகை, சஷ்டி, அமாவாசை, பௌர்ணமி


பிரார்த்தனை:

நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க, நல்லாசி வேண்டி, அனைத்து செல்வங்களும் கிடைக்க, தொழில், வியாபாரம் மேம்பட, குடும்ப பிரச்சனைகள் தீர, நோய்கள் அகல, சுப காரியங்கள் நடக்க, குழந்தைப்பேறு, திருமணம் வேண்டி, கிரக தோஷங்கள் அகல


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், அன்னதானம்


நாடி வருவோருக்கு நல்லாசிகள் வழங்கும் சென்னை மீஞ்சூர் திருப்பதி நகர் பாலதண்டாயுதபாணி திருவடிகள் பணிந்து போற்றுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 840 நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் சென்னை மீஞ்சூர் திருப்பதி நகர் பாலதண்டாயுதபாணி


படம் 2 - 840 நாடி வருவோருக்கு நல்லாசிகள் வழங்கும் சென்னை மீஞ்சூர் திருப்பதி நகர் பாலதண்டாயுதபாணி



Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்