Posts

Showing posts from August, 2023

கோவில் 815 - பெங்களூரு காட்டன்பேட்டை வேல்முருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-815 வாழ்வில் வளம் சேர்க்கும் பெங்களூரு காட்டன்பேட்டை வேல்முருகன் கோவில் 1.9.2023 வெள்ளி அருள்மிகு வேல்முருகன் திருக்கோவில் TCM Royan Road, அஞ்சனப்பா கார்டன்ஸ் [Anjanappa Gardens] காட்டன்பேட்டை [Cottonpet] பெங்களூரு [Bengaluru]-560018 கர்நாடகா மாநிலம் இருப்பிடம்: பெங்களூரு KSR ரயில் நிலையம்/KG மெஜஸ்டிக் பேருந்து நிலையம் 2 கிமீ மூலவர்: வேல்முருகன் உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை தலமகிமை: பெங்களூரு மாநகரத்தில் பெங்களூரு KSR ரயில் நிலையம் மற்றும் KG மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவில் காட்டன்பேட்டை பகுதியில் வாழ்வில் வளம் சேர்க்கும் வேல்முருகன் கோவில் அமைந்துள்ளது. நகரத்தின் மையத்தில் உள்ள சிறப்பு மிக்க இக்கோவிலில் உள்ள மூலவர் வேல்முருகனை ஒரு முறை தரிசித்தாலே, வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்பது திண்ணம். காவடி எடுத்து வந்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை அல்லது நேர்த்திக்கடனை செலுத்துவது இக்கோவிலின் சிறப்பு. இத்திருக்கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி திருவிழாக்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. செவ்வாய் கிழமையில்

கோவில் 814 - கோலார் தங்க வயல் [KGF] பொன்மலை முருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-814 பொன், பொருள் அள்ளித் தரும் கோலார் தங்க வயல் [KGF] பொன்மலை முருகன் கோவில் 31.8.2023 வியாழன் அருள்மிகு பொன்மலை முருகன் திருக்கோவில் பெமல் நகர் [BEML Nagar] கோலார் தங்க வயல் [Kolar Gold Fields-KGF]-563115 கர்நாடகா மாநிலம் இருப்பிடம்: பெங்களூரு 91 கிமீ, கோலார் தங்க வயல் புது பேருந்து நிலையம் [KGF] 8 கிமீ மூலவர்: பொன்மலை முருகன் தலமகிமை: கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாநகரிலிருந்து 91 கிமீ தொலைவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான கோலார் தங்க வயல் அருகில் பொன், பொருள் அள்ளித் தரும் பொன்மலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இப்பகுதி பொன் விளையும் பூமியாக இருப்பதால், இங்கு குடி கொண்டுள்ள முருகப்பெருமானுக்கு, பொன்மலை முருகன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கோலார் தங்க வயல் புது பேருந்து நிலையத்திலிருந்து [KGF] 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஆடிப்பெருக்கு திருவிழா சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனைகள், சுவாமி திரு உலா என்று ஒவ்வொரு வருடமும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. மற்றும் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின

கோவில் 813 - பெங்களூரு பரப்பன அக்ரஹார சுப்ரமண்ய சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-813 நல்லன அருளும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சுப்ரமண்ய சுவாமி கோவில் 30.8.2023 புதன் அருள்மிகு சுப்ரமண்ய சுவாமி திருக்கோவில் சாய் ஸ்ரீ லே அவுட் [Sai Sree Lay Out] பரப்பன அக்ரஹார [Parappana Agrahara] பெங்களூரு-560068 [Bengaluru] கர்நாடகா மாநிலம் இருப்பிடம்: பெங்களூரு மெஜெஸ்டிக்/KSR ரயில் நிலையம் 18 கிமீ, ஓசூர் 27 கிமீ மூலவர்: சுப்ரமண்ய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தலமகிமை: கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாநகரம் மெஜெஸ்டிக் KG பேருந்து நிலையம்/ KSR பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திலிருந்து 18 கிமீ தூரத்தில் உள்ள பரப்பன அக்ரஹார பகுதியில் நல்லன அருளும் சுப்ரமண்ய சுவாமி கோவில் அமைந்துள்ளது. தமிழக நகரமான ஓசூரிலிருந்து 27 கிமீ பிராயாணம் செய்தாலும், இக்கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் சுப்ரமண்ய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருளாட்சி செய்கின்றார். இக்கோவில் முருகப்பெருமானை வழிபடும் கர்ப்பிணி பெண்களுக்கு, சுகப் பிரசவம் அடைய அருள்புரிகின்றார் சுப்ரமண்ய சுவாம

கோவில் 812 - பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி சுப்ரமண்யர் கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-812 துன்பங்கள் நீக்கும் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி சுப்ரமண்யர் கோவில் 29.8.2023 செவ்வாய் அருள்மிகு சுப்ரமண்யர் திருக்கோவில் கொல்லஹள்ளி மெயின் ரோடு [Gollahalli Main Road] எலக்ட்ரானிக் சிட்டி [Electronic City] பெங்களூரு-560100 [Bengaluru-560100] கர்நாடகா மாநிலம் இருப்பிடம்: பெங்களூரு மெஜெஸ்டிக்/KSR ரயில் நிலையம் 24 கிமீ, ஓசூர் 25 கிமீ மூலவர்: சுப்ரமண்யர் தலமகிமை: கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாநகரம் மெஜெஸ்டிக் KG பேருந்து நிலையம்/ KSR பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திலிருந்து 24 கிமீ தூரத்தில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி கொல்லஹள்ளி மெயின் ரோட்டில் துன்பங்கள் நீக்கும் அருள்மிகு சுப்ரமண்யர் கோவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள சிறப்பு மிக்க ஒரே முருகப்பெருமான் கோவில் இதுவாகும். தமிழக நகரமான ஓசூரிலிருந்து 25 கிமீ பிராயாணம் செய்தாலும் இத்திருக்கோவிலை அடைந்து ஆற்றல் மிக்க சுப்ரமண்யரை தரிசித்து அனைத்து நற்பலன்களை பெறலாம். குழந்தை வரம் வேண்டி இக்கோவில் முருகப்பெருமானை வழிபடுவோருக்கு சுப்ரமண்ய சுவாமி விரைவில் சந்தான பாக்கியம் அளிக்கின்றார்.

கோவில் 811 - கிருஷ்ணகிரி வேப்பனபள்ளி பச்சைமலை முருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-811 வேண்டியவை விரைவில் நிறைவேற அருளும் கிருஷ்ணகிரி வேப்பனபள்ளி பச்சைமலை முருகன் கோவில் 28.8.2023 திங்கள் அருள்மிகு பச்சைமலை முருகன் திருக்கோவில் காரக்குப்பம் வேப்பனபள்ளி-635121 (வேப்பனஹள்ளி) கிருஷ்ணகிரி மாவட்டம் இருப்பிடம்: கிருஷ்ணகிரி 26 கிமீ மூலவர்: பச்சைமலை முருகன் தேவியர்: வள்ளி, தெய்வானை பழமை: 45 ஆண்டுகள் தலமகிமை: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி நகரிலிருந்து 26 கிமீ தூரத்தில் உள்ள வேப்பனபள்ளி (வேப்பனஹள்ளி என்றும் அழைப்பர்) என்ற ஊருக்கு அருகில் சிறப்பு மிக்க பச்சைமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவராக வீற்றிருக்கும் வள்ளி, தெய்வானை சமேத பச்சைமலை முருகப்பெருமானை வழிபடுவோருக்கு வேண்டியவை அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்பது இப்பகுதி முருக பக்தர்களின் நம்பிக்கை. இக்கோவிலில் திருமணங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது. கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. கந்த சஷ்டி பெருவிழா 7 நாட்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. முதல் ஆறு நாட்கள்

கோவில் 810 - தூத்துக்குடி அண்ணா நகர் தென்பழனி முருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-810 அருள் அனைத்தும் அள்ளி வழங்கும் தூத்துக்குடி அண்ணா நகர் தென்பழனி முருகன் கோவில் 27.8.2023 ஞாயிறு அருள்மிகு தென்பழனி முருகன் திருக்கோவில் அண்ணா நகர் 12-வது தெரு தூத்துக்குடி-628008 தூத்துக்குடி மாவட்டம் இருப்பிடம்: தூத்துக்குடி பழைய/புதிய பேருந்து நிலையம் 1.5 கிமீ, தூத்துக்குடி ரயில் நிலையம் 3 கிமீ மூலவர்: தென்பழனி முருகன் தலமகிமை: தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கிமீ தொலைவிலும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கிமீ தொலைவிலும், தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து 3 கிமீ தூரத்திலும் உள்ள அண்ணா நகர் 12-வது தெருவில் நல்லன அருளும் தென்பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. தென்பழனி முருகனுக்கு தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொள்ளும் தைப்பூசத் திருநாளன்று காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மூலவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடக்கின்றது. பின்னர் அன்னதானம் மிகப் பெரிய அளவில் நடைபெறுகிறது. கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்கள

கோவில் 809 - நாமக்கல் கே கே நகர் பாலதண்டாயுதபாணி கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-809 நேர்மறை ஆற்றல் தரும் நாமக்கல் கே கே நகர் பாலதண்டாயுதபாணி கோவில் 26.8.2023 சனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் மோகனூர் சாலை கே கே நகர் நாமக்கல்-637001 நாமக்கல் மாவட்டம் இருப்பிடம்: நாமக்கல் 1.5 கிமீ மூலவர்: பாலதண்டாயுதபாணி தல விருட்சம்: வன்னி மரம் தலமகிமை: நாமக்கல் நகரம் நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து மோகனூர் செல்லும் சாலையில் 1.5 கிமீ தொலைவில் கே கே நகர் பகுதியில் நேர்மறை ஆற்றலை அள்ளி வழங்கும் பாலதண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. மூலவர் பாலதண்டாயுதபாணியின் அருளாசியால் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறும் தலாமாக இக்கோவில் திகழ்கின்றது. இத்திருக்கோவிலுக்கருகில் உலகப் புகழ் பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். ஒவ்வொரு மாத கிருத்திகையன்றும் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், காலை, 8:00 மணிக்கு கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் துவங்கும். மூலவர் பாலதண்டாயுதபாணிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து முத்தங்கி சாத்தப்பட்டு செவ்வரளி, மனோரஞ்சித

கோவில் 808 - நாமக்கல் கருங்கல்பாளையம் கருமலை தண்டாயுதபாணி கோவில்

Image
  🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-808 மன அமைதி தரும் நாமக்கல் கருங்கல்பாளையம் கருமலை தண்டாயுதபாணி கோவில் 25.8.2023 வெள்ளி அருள்மிகு கருமலை தண்டாயுதபாணி திருக்கோவில் கருங்கல்பாளையம்-637003 நாமக்கல் மாவட்டம் இருப்பிடம்: நாமக்கல் 11 கிமீ மூலவர்: தண்டாயுதபாணி தலமகிமை: நாமக்கல் மாவட்டம் நாமக்கல் நகரிலிருந்து 11 கிமீ தொலைவில் உள்ள கருங்கல்பாளையத்தில் உள்ள கருமலை குன்றில் மன அமைதி தரும் கருமலை தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. மூலவர் தண்டாயுதபாணி ஆற்றலுடன் அருளுகின்றார். இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 6 நாட்கள் மிக சிறப்பாக அபிஷேக, ஆராதனைகளுடன் நடைபெறும். 6-ம் நாள் மாலை சூரசம்ஹார நிகழ்வு மிகவும் விமரிசையாக நடக்கும். ஏராளமான முருக பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டிய வரங்களை பெற்று செல்கின்றனர். தைப்பூசத் திருநாளன்று சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெறுகின்றது. பங்குனி உத்திர திருவிழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருநாளன்று சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, பக்தர

கோவில் 807 - கிருஷ்ணகிரி பாரதிபுரம் பனைமரத்து முருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-807 நினைத்ததை நிறைவேற்றும் கிருஷ்ணகிரி பாரதிபுரம் பனைமரத்து முருகன் கோவில் 24.8.2023 வியாழன் அருள்மிகு பனைமரத்து முருகன் திருக்கோவில் பாரதிபுரம்-635207 ஊத்தங்கரை வட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் இருப்பிடம்: ஊத்தங்கரை 2 கிமீ மூலவர்: முருகன் தலமகிமை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் ஊத்தங்கரையில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ள பாரதிபுரம் பகுதியில் உள்ள மலையின் மீது நினைத்ததை நிறைவேற்றும் பனைமரத்து முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தல வரலாறு: பல ஆண்டுகளுக்கு முன் ஒரு மகான் மலையின் கீழ் பகுதியில் தவம் செய்து வந்தார். அப்போது ஒரு நாள் ஒரு சிறுவன் அவர் தவத்தை கலைக்க முயற்சித்தான். அந்த மகான் கோபமுற்று அச்சிறுவனை துரத்தி சென்றார். அந்த சிறுவன் மலை மீது ஏறி மறைந்தான். அவ்விடத்தில் அந்தப் பெரியவர் ஒரு கோவிலை கட்டி முருகனை சிலையை பிரதிஷ்ட செய்ததாக வரலாறு. . தல அமைப்பு: மலையின் அடிவாரத்தில் இடும்பன் சிலை ஒன்றுள்ளது. பின் 1000 படிக்கட்டுகள் கோவிலுக்கு