கோவில் 808 - நாமக்கல் கருங்கல்பாளையம் கருமலை தண்டாயுதபாணி கோவில்

 🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-808

மன அமைதி தரும் நாமக்கல் கருங்கல்பாளையம் கருமலை தண்டாயுதபாணி கோவில்

25.8.2023 வெள்ளி


அருள்மிகு கருமலை தண்டாயுதபாணி திருக்கோவில்

கருங்கல்பாளையம்-637003

நாமக்கல் மாவட்டம்

இருப்பிடம்: நாமக்கல் 11 கிமீ


மூலவர்: தண்டாயுதபாணி


தலமகிமை:

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் நகரிலிருந்து 11 கிமீ தொலைவில் உள்ள கருங்கல்பாளையத்தில் உள்ள கருமலை குன்றில் மன அமைதி தரும் கருமலை தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. மூலவர் தண்டாயுதபாணி ஆற்றலுடன் அருளுகின்றார்.


இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 6 நாட்கள் மிக சிறப்பாக அபிஷேக, ஆராதனைகளுடன் நடைபெறும். 6-ம் நாள் மாலை சூரசம்ஹார நிகழ்வு மிகவும் விமரிசையாக நடக்கும். ஏராளமான முருக பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டிய வரங்களை பெற்று செல்கின்றனர். தைப்பூசத் திருநாளன்று சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெறுகின்றது. பங்குனி உத்திர திருவிழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருநாளன்று சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து மகா தீபாரதனைகள் நடக்கின்றன. மேலும் கிருத்திகை, சஷ்டி தினங்களிலும் விசேஷ வழிபாடுகள் உண்டு.


தல வரலாறு:

இது ஒரு பழமையான கோவில் என்றும், நூறாண்டுகளுக்கு மேல் பழமையானது என்பது செவி வழி செய்தி.

.

.தல அமைப்பு:

அழகிய அமைப்பைக் கொண்ட இக்கோவில் கருவறையில் மூலவராக நின்ற கோலத்தில் பழனி முருகனை போன்றே அழகிய தோற்றத்துடன் காட்சி அருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். மேலும் செல்வ விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, அமிர்தகடேஸ்வரர். அபிராமி அம்பாள், கால பைரவர், நவக்கிரகங்கள் தனித் தனி சந்நிதிகளில் அருளுகின்றனர்.


திருவிழா

பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, கிருத்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

மன அமைதி, வேண்டும் வரம் கிட்ட, கல்வி, ஞானம் சிறக்க, ஆனந்தம் தர


நேர்த்திக்கடன்:

பால்குடம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


வேண்டும் வரம் அருளும் நாமக்கல் கருங்கல்பாளையம் கருமலை தண்டாயுதபாணியை தொழுது பயன் பெறுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 808 மன அமைதி தரும் நாமக்கல் கருங்கல்பாளையம் கருமலை தண்டாயுதபாணி


படம் 2 - 808 வேண்டும் வரம் அருளும் நாமக்கல் கருங்கல்பாளையம் கருமலை தண்டாயுதபாணி

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்