கோவில் 807 - கிருஷ்ணகிரி பாரதிபுரம் பனைமரத்து முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-807
நினைத்ததை நிறைவேற்றும் கிருஷ்ணகிரி பாரதிபுரம் பனைமரத்து முருகன் கோவில்
24.8.2023 வியாழன்
அருள்மிகு பனைமரத்து முருகன் திருக்கோவில்
பாரதிபுரம்-635207
ஊத்தங்கரை வட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
இருப்பிடம்: ஊத்தங்கரை 2 கிமீ
மூலவர்: முருகன்
தலமகிமை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் ஊத்தங்கரையில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ள பாரதிபுரம் பகுதியில் உள்ள மலையின் மீது நினைத்ததை நிறைவேற்றும் பனைமரத்து முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
தல வரலாறு:
பல ஆண்டுகளுக்கு முன் ஒரு மகான் மலையின் கீழ் பகுதியில் தவம் செய்து வந்தார். அப்போது ஒரு நாள் ஒரு சிறுவன் அவர் தவத்தை கலைக்க முயற்சித்தான். அந்த மகான் கோபமுற்று அச்சிறுவனை துரத்தி சென்றார். அந்த சிறுவன் மலை மீது ஏறி மறைந்தான். அவ்விடத்தில் அந்தப் பெரியவர் ஒரு கோவிலை கட்டி முருகனை சிலையை பிரதிஷ்ட செய்ததாக வரலாறு.
.
தல அமைப்பு:
மலையின் அடிவாரத்தில் இடும்பன் சிலை ஒன்றுள்ளது. பின் 1000 படிக்கட்டுகள் கோவிலுக்கு ஏறி வர வேண்டும் மலையில் ஏறிய உடன் பெரிய ஸ்தபம்பம் உள்ளது. அடுத்து வேல், பலிபீடம், மயில் உள்ளன. எதிரில் உள்ள கருவறையில் அழகு தெய்வம் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
திருவிழா
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை
பிரார்த்தனை:
நினைத்ததை நிறைவேற, கல்வி, செல்வம் சேர, குழந்தை வேண்டி, மன மகிழ்ச்சி, வினைகள் அகல
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்
கல்வி, செல்வம் சேர அருளும் கிருஷ்ணகிரி பாரதிபுரம் பனைமரத்து முருகன் பாதங்கள் பணிந்து வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 807 நினைத்ததை நிறைவேற்றும் கிருஷ்ணகிரி பாரதிபுரம் பனைமரத்து முருகன்
படம் 2 - 807 கல்வி, செல்வம் சேர அருளும் கிருஷ்ணகிரி பாரதிபுரம் பனைமரத்து முருகன்
Comments
Post a Comment