கோவில் 810 - தூத்துக்குடி அண்ணா நகர் தென்பழனி முருகன் கோவில்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-810

அருள் அனைத்தும் அள்ளி வழங்கும் தூத்துக்குடி அண்ணா நகர் தென்பழனி முருகன் கோவில்

27.8.2023 ஞாயிறு


அருள்மிகு தென்பழனி முருகன் திருக்கோவில்

அண்ணா நகர் 12-வது தெரு

தூத்துக்குடி-628008

தூத்துக்குடி மாவட்டம்

இருப்பிடம்: தூத்துக்குடி பழைய/புதிய பேருந்து நிலையம் 1.5 கிமீ, தூத்துக்குடி ரயில் நிலையம் 3 கிமீ


மூலவர்: தென்பழனி முருகன்


தலமகிமை:

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கிமீ தொலைவிலும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கிமீ தொலைவிலும், தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து 3 கிமீ தூரத்திலும் உள்ள அண்ணா நகர் 12-வது தெருவில் நல்லன அருளும் தென்பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது.


தென்பழனி முருகனுக்கு தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொள்ளும் தைப்பூசத் திருநாளன்று காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மூலவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடக்கின்றது. பின்னர் அன்னதானம் மிகப் பெரிய அளவில் நடைபெறுகிறது. கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.

தல வரலாறு:

தூத்துக்குடி நகரில் உள்ள வயதான முருக பக்தர்கள் பழனி முருகனை தரிசிக்க செல்ல முடியாதவர்களுக்காக, அண்ணா நகரில் தென்பழனி முருகன் கோவில் எழுப்பப்பட்டது.

தல அமைப்பு:

திருக்கோவில் கருவறையில் தென்பழனி முருகன் பழனி தண்டாயுதபாணி போல் கையில் தண்டம் ஏந்தி, வேல் தாங்கி நின்ற கோலத்தில் விசேஷ நாட்களில் ராஜ அலங்காரத்தில் அழகாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் அழகு நிறைந்த விநாயகர் உட்பட உபமூர்த்திகள் எழுந்தருளி அருள்பாலிப்பது சிறப்பு.


திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், கிருத்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

நல்லன வேண்டி, எண்ணியது ஈடேற, கல்வி, ஞானம் சிறக்க, வினைகள் நீங்க, தோஷங்கள் அகல, செல்வம் பெருக


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், அன்னதானம்



எண்ணியது ஈடேற அருளும் தூத்துக்குடி அண்ணா நகர் தென்பழனி முருகனை மனமுருகி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 810 தூத்துக்குடி அண்ணா நகர் தென்பழனி முருகன் ராஜ அலங்காரம்


படம் 2 - 810 எண்ணியது ஈடேற அருளும் தூத்துக்குடி அண்ணா நகர் தென்பழனி முருகன்




Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்