கோவில் 812 - பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி சுப்ரமண்யர் கோவில்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-812

துன்பங்கள் நீக்கும் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி சுப்ரமண்யர் கோவில்

29.8.2023 செவ்வாய்


அருள்மிகு சுப்ரமண்யர் திருக்கோவில்

கொல்லஹள்ளி மெயின் ரோடு [Gollahalli Main Road]

எலக்ட்ரானிக் சிட்டி [Electronic City]

பெங்களூரு-560100 [Bengaluru-560100]

கர்நாடகா மாநிலம்

இருப்பிடம்: பெங்களூரு மெஜெஸ்டிக்/KSR ரயில் நிலையம் 24 கிமீ, ஓசூர் 25 கிமீ

மூலவர்: சுப்ரமண்யர்


தலமகிமை:

கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாநகரம் மெஜெஸ்டிக் KG பேருந்து நிலையம்/ KSR பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திலிருந்து 24 கிமீ தூரத்தில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி கொல்லஹள்ளி மெயின் ரோட்டில் துன்பங்கள் நீக்கும் அருள்மிகு சுப்ரமண்யர் கோவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள சிறப்பு மிக்க ஒரே முருகப்பெருமான் கோவில் இதுவாகும். தமிழக நகரமான ஓசூரிலிருந்து 25 கிமீ பிராயாணம் செய்தாலும் இத்திருக்கோவிலை அடைந்து ஆற்றல் மிக்க சுப்ரமண்யரை தரிசித்து அனைத்து நற்பலன்களை பெறலாம். குழந்தை வரம் வேண்டி இக்கோவில் முருகப்பெருமானை வழிபடுவோருக்கு சுப்ரமண்ய சுவாமி விரைவில் சந்தான பாக்கியம் அளிக்கின்றார்.


இக்கோவிலில் கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதலான திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. கிருத்திகை, சஷ்டி திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும்.


தல வரலாறு:

தமிழர்கள் அதிகம் வாழும் இப்பகுதியில் முருக பக்தர்கள் மற்றும் உயரிய புரவலர்கள் பேருதவியுடன் இக்கோவில் நிறுவப்பட்டது.


தல அமைப்பு:

அழகிய அமைப்பைக் கொண்ட இக்கோவிலில் இறைவன் சிற்பங்கள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் சுப்ரமணியர் ஒரு முகம், நான்கு திருக்கரங்களுடன் அபயக் கரம் நீட்டி, மயில் உடனிருக்க நின்ற கோலத்தில் தெய்வீக அனுபவம் தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கணபதி தனி சந்நிதியில் வீற்றிருந்து அருளுகின்றார். ஐயப்பன் தனி சந்நிதியில் அருள்வது சிறப்பு. ஐயப்பன் பஜனை, முருகப்பெருமான் திருவிழாக்கள், விநாயகர் பூஜை முதலானவை நடைபெற விசாலமான ஹால் ஒன்று உள்ளது. ஆற்றல் மிக்க ஆஞ்சநேயர் மிகவும் விசேஷமாக காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். மேலும் நவக்கிரகங்கள் உட்பட அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

துன்பங்கள் நீங்க, சந்தான பாக்கியம் வேண்டி, நல்லவை நடக்க, தோஷங்கள் அகல


நேர்த்திக்கடன்:

பால்குடம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6-11 மாலை 5.30-8.30


சந்தான பாக்கியம் தந்தருளும் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி சுப்ரமண்யரை மனக்கண்ணால் தரிசிப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 812 துன்பங்கள் நீக்கும் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி சுப்ரமணியர்


படம் 2 - 812 சந்தான பாக்கியம் தந்தருளும் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி சுப்ரமண்யர்



Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்