கோவில் 814 - கோலார் தங்க வயல் [KGF] பொன்மலை முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-814
பொன், பொருள் அள்ளித் தரும் கோலார் தங்க வயல் [KGF] பொன்மலை முருகன் கோவில்
31.8.2023 வியாழன்
அருள்மிகு பொன்மலை முருகன் திருக்கோவில்
பெமல் நகர் [BEML Nagar]
கோலார் தங்க வயல் [Kolar Gold Fields-KGF]-563115
கர்நாடகா மாநிலம்
இருப்பிடம்: பெங்களூரு 91 கிமீ, கோலார் தங்க வயல் புது பேருந்து நிலையம் [KGF] 8 கிமீ
மூலவர்: பொன்மலை முருகன்
தலமகிமை:
கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாநகரிலிருந்து 91 கிமீ தொலைவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான கோலார் தங்க வயல் அருகில் பொன், பொருள் அள்ளித் தரும் பொன்மலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இப்பகுதி பொன் விளையும் பூமியாக இருப்பதால், இங்கு குடி கொண்டுள்ள முருகப்பெருமானுக்கு, பொன்மலை முருகன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கோலார் தங்க வயல் புது பேருந்து நிலையத்திலிருந்து [KGF] 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது
ஆடிப்பெருக்கு திருவிழா சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனைகள், சுவாமி திரு உலா என்று ஒவ்வொரு வருடமும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. மற்றும் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.
தல வரலாறு:
தமிழர்கள் கோலார் தங்க வயலில் வேலை பார்ப்பதற்காக பல்லாண்டுகளுக்கு முன்னரே குடியேறினர். அவர்கள் இணைந்து தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு இந்த பொன் விளையும் பூமியில் திருக்கோவில் எழுப்பினர்.
தல அமைப்பு:
திருக்கோவில் கோபுரம் முன் தீப ஸ்தம்பம் ஒன்று உள்ளது. கருவறையில் பொன்மலை முருகன் கையில் தண்டம் ஏந்தி நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி அருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இங்கு ஒவ்வொரு சந்நிதியும் தனித் தனியே சிறிய கோவில் போன்று விமானத்துடன் அமைந்துள்ளது. விநாயகப்பெருமான், சிவபெருமான், தேவி கருமாரியம்மன், சனீஸ்வரர், நவக்கிரகங்கள் தனித் தனியே வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, கிருத்திகை, சஷ்டி,
பிரார்த்தனை:
பொன், பொருள் வேண்டி, பயம் அகல, பிணிகள் தீர, தொழில், வியாபாரம் சிறக்க, எண்ணியது ஈடேற
நேர்த்திக்கடன்:
அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், அன்னதானம்
பயம் அகல செய்யும் கோலார் தங்க வயல் [KGF] பொன்மலை முருகனை போற்றி புகழ்வோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 814 பொன், பொருள் அள்ளித் தரும் கோலார் தங்க வயல் [KGF] பொன்மலை முருகன்
படம் 2 - 814 பயம் அகல செய்யும் கோலார் தங்க வயல் [KGF] பொன்மலை முருகன்
Comments
Post a Comment