கோவில் 815 - பெங்களூரு காட்டன்பேட்டை வேல்முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-815
வாழ்வில் வளம் சேர்க்கும் பெங்களூரு காட்டன்பேட்டை வேல்முருகன் கோவில்
1.9.2023 வெள்ளி
அருள்மிகு வேல்முருகன் திருக்கோவில்
TCM Royan Road,
அஞ்சனப்பா கார்டன்ஸ் [Anjanappa Gardens]
காட்டன்பேட்டை [Cottonpet]
பெங்களூரு [Bengaluru]-560018
கர்நாடகா மாநிலம்
இருப்பிடம்: பெங்களூரு KSR ரயில் நிலையம்/KG மெஜஸ்டிக் பேருந்து நிலையம் 2 கிமீ
மூலவர்: வேல்முருகன்
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை
தலமகிமை:
பெங்களூரு மாநகரத்தில் பெங்களூரு KSR ரயில் நிலையம் மற்றும் KG மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவில் காட்டன்பேட்டை பகுதியில் வாழ்வில் வளம் சேர்க்கும் வேல்முருகன் கோவில் அமைந்துள்ளது. நகரத்தின் மையத்தில் உள்ள சிறப்பு மிக்க இக்கோவிலில் உள்ள மூலவர் வேல்முருகனை ஒரு முறை தரிசித்தாலே, வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்பது திண்ணம்.
காவடி எடுத்து வந்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை அல்லது நேர்த்திக்கடனை செலுத்துவது இக்கோவிலின் சிறப்பு. இத்திருக்கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி திருவிழாக்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. செவ்வாய் கிழமையில் நடைபெறும் விசேஷ பூஜைகளில் கலந்துக் கொண்டு வழிபடுவது மிகவம் சிறப்பம்சமாகும்.
தல வரலாறு:
தமிழர்கள் அதிகம் வசிக்கும் இவ்வூரில் இக்கோவில் தொன்மையானதாகக் கருதப்படுகிறது.
தல அமைப்பு:
அழகிய அமைப்புடன் கூடிய இக்கோவில் கருவறையில் மூலவர் வேல்முருகன் வேல் தாங்கி நின்ற கோலத்தில் மயிலுடன் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் கணபதி, சிவபெருமான், மாரியம்மன், சத்யநாராயணர் உட்பட அனைத்து தெய்வங்களும் இக்கோவிலில் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, கிருத்திகை, சஷ்டி, செவ்வாய்
பிரார்த்தனை:
வாழ்வில் வளம் சேர, சங்கடங்கள் தீர, நினைத்தது நிறைவேற, கல்வி, ஞானம் சிறக்க
நேர்த்திக்கடன்:
காவடி, அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், அன்னதானம்
சங்கடங்கள் தீர்க்கும் பெங்களூரு காட்டன்பேட்டை வேல்முருகப் பெருமானை வேண்டி தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 815 வாழ்வில் வளம் சேர்க்கும் பெங்களூரு காட்டன்பேட்டை வேல்முருகன்
படம் 2 - 815 சங்கடங்கள் தீர்க்கும் பெங்களூரு காட்டன்பேட்டை வேல்முருகன்
Comments
Post a Comment