Posts

Showing posts from July, 2023

கோவில் 784 - ஈரோடு எலத்தூர் நாகமலை முருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻                                                                                                                                                தினம் ஒரு முருகன் ஆலயம்-784 சந்தான பாக்கியமளிக்கும் ஈரோடு எலத்தூர் நாகமலை முருகன் கோவில் 1.8.2023 செவ்வாய் அருள்மிகு நாகமலை முருகன் திருக்கோவில் நம்பியூர் சாலை எலத்தூர்-638454 ஈரோடு மாவட்டம் இருப்பிடம்: ஈரோடு 58 கிமீ, நம்பியூர் 7 கிமீ மூலவர்: நாகமலை முருகன் பழமை: 400 வருடங்கள் தலமகிமை: ஈரோடு மாவட்டம் ஈரோடு நகரிலிருந்து 58 கிமீ தொலைவில் நம்பியூர் சாலையில் அமைந்துள்ள எலத்தூர் கிராமத்தில் உள்ள குன்று ஒன்றில் மிகவும் சக்தி வாய்ந்த நாகமலை முருகன் கோவில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் முருகப்பெருமானை வழிபடுவோருக்கு எல்லா நலன்களும் கிடைக்கின்றன என்பது நம்பிக்கை. கோவிலுக்கு மலையறும் வழியில் வற்றாத சுனை இருப்பது சிறப்பம்சமாகும். நீரின் நடுவில் வேல் ஒன்று நடப்பட்டுள்ளது. இந்த சுனை நீர் முருகப்பெருமான் அபிஷேகத்திற்கும், கோவிலின் பிற பயன்பாட்டிற்கும் பயன்படுகின்றது. இக்கோவிலில் தைப்பூசம் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றது.

கோவில் 783 - சென்னை அகரம் ஆறுமுகசுவாமி கோவில்

Image
🙏🏻🙏🏻                                                                                                                                                            தினம் ஒரு முருகன் ஆலயம்-783 மனக்குறைகள் தீர்க்கும் சென்னை அகரம் ஆறுமுகசுவாமி கோவில்  31.7.2023 திங்கள் அருள்மிகு ஆறுமுகசுவாமி திருக்கோவில் பல்லார்ட் சாலை அகரம் பெரம்பூர்  சென்னை 600082 இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் 7 கிமீ, கோயம்பேடு 13 கிமீ மூலவர்: ஆறுமுகசுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை  தலமகிமை: சென்னை மாநகரில் சென்னை சென்ட்ரலிலிருந்து 7 கிமீ பிரயாணம் செய்தாலும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ பிரயாணம் செய்தாலும் சிறப்பு வாய்ந்த அகரம் ஆறுமுகசுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் ஆறுமுகங்களுடன் ஆறுமுகசுவாமி எழுந்தருளி பக்தர்களின் மனக்குறைகளை தீர்க்கின்றார். இக்கோவிலில் முருகப்பெருமானை அனைத்து திருவிழாக்களும் மிகவும் விமரிசையாக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.     தல வரலாறு: இப்பகுதியில் வசிக்கும் புரவலர்கள் மற்றும் முருக பக்தர்கள் கட்டிய கோவில் இதுவாகும், தல அமைப்

கோவில் 782 - சென்னை அயனாவரம் குழந்தை வேலர் அருள் முருகன் கோவில்

Image
🙏🏻 🙏🏻                                                                                                                                                      தினம் ஒரு முருகன் ஆலயம்-782 வல்வினைகள் போக்கும் சென்னை அயனாவரம் குழந்தை வேலர் அருள் முருகன் கோவில் 30.7.2023 ஞாயிறு அருள்மிகு குழந்தை வேலர் அருள் முருகன் திருக்கோவில் பெரியார் சாலை TNHB United India Nagar அயனாவரம் சென்னை 600023 இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் 7.5 கிமீ, கோயம்பேடு 8 கிமீ மூலவர்: குழந்தை வேலர் அருள் முருகன் தலமகிமை: சென்னை மாநகரில் சென்னை சென்ட்ரலில் இருந்து 7.5 கிமீ தொலைவிலும், கோயம்பேட்டில் இருந்து 8 கிமீ தூரத்திலும் அமைந்துள்ள அயனாவரம் United India Nagar பகுதியில் உள்ள பெரியார் சாலையில் வல்வினைகள் போக்கும் சென்னை அயனாவரம் குழந்தைவேலர் அருள் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மூலவர் குழந்தை வேலர் அருள் முருகன் குழந்தை வடிவில் காட்சி தந்து அருள்புரிகின்றார். குழந்தை வேலர் அருள் முருகன் ராஜ அலங்காரத்தில் எழில்மிகு தோற்றத்துடன் அருள்வது இக்கோவிலின் சிறப்பம்சமாகும். இத்திருக்கோவிலில் தைப்பூசம் திருவிழா மிகவும் விமரிச

கோவில் 781 - சென்னை பெரம்பூர் பழனி ஆண்டவர் கோவில்

Image
  🙏🏻 🙏🏻                                                                                                                                                      தினம் ஒரு முருகன் ஆலயம்-781 திருமண வரமருளும் சென்னை பெரம்பூர் பழனி ஆண்டவர் கோவில் 29.7.2023 சனி அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில் சின்னையன் காலனி பெரம்பூர் சென்னை 600011 இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் 6 கிமீ, கோயம்பேடு 14 கிமீ மூலவர்: மேல்பழனி ஆண்டவர்/பழனி ஆண்டவர் தலமகிமை: சென்னை மாநகரில் சென்னை சென்ட்ரலில் இருந்து 6 கிமீ தொலைவிலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 14 கிமீ தூரத்தில் உள்ள முக்கிய பகுதியான பெரம்பூரில், பெரம்பூர் பேருந்து நிறுத்தத்திற்கு மிக அருகில் திருமண வரமருளும் பழனி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தீமைகளுக்கும் சாமுண்டிகா சமேத ஸ்வர்ண ஆகர்ஷ பைரவருக்கு சிறப்பு பூஜை செய்யலாம். கந்த சஷ்டி திருவிழா 6 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஏராளாமான பக்தர்கள் விரதமிருந்து முருகப்பெருமானின் அபிஷேகம், அலங்காரம், விசேஷ தீபாராதனை, சூரசம்ஹாரம், தெய்வானை திருமணம் கண்டு வழிபட்டு, அதிக

கோவில் 780 - சென்னை அயனாவரம் மேல்பழனி ஆண்டவர் கோவில்

Image
  🙏🏻 🙏🏻                                                                                                                                                  தினம் ஒரு முருகன் ஆலயம்-780 வரங்களை அள்ளி வழங்கும் சென்னை அயனாவரம் மேல்பழனி ஆண்டவர் கோவில் 28.7.2023 வெள்ளி அருள்மிகு மேல்பழனி ஆண்டவர் திருக்கோவில் குப்புசாமி நகர் அயனாவரம் சென்னை 600023 இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் 7 கிமீ, கோயம்பேடு 8.5 கிமீ மூலவர்: மேல்பழனி ஆண்டவர்/பழனி ஆண்டவர் தலமகிமை: சென்னை மாநகரின் மையப்பகுதியில் சென்னை சென்ட்ரலில் இருந்து 7 கிமீ தொலைவிலும், கோயம்பேட்டில் இருந்து 8.5 கிமீ தூரத்திலும் அமைந்துள்ள அயனாவரம் பகுதியில் உள்ள குப்புசாமி நகரில் வரங்களை அள்ளி வழங்கும் மேல்பழனி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் மூலவர் மேல்பழனி ஆண்டவர் பழனி முருகனை போல சக்தி மிகுந்தவர் எனவும், இவரை வழிபடுவோருக்கு நற்பலன்கள் அனைத்தும் வழங்குகின்றார் என்பது நம்பிக்கை. இக்கோவிலில் தைப்பூசம் மற்றும் ஆடிக்கிருத்திகை திருவிழாக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம் முதலான திருவிழாக்களும் சிறப்பாக நட

கோவில் 779 - திண்டுக்கல் எஸ். தும்மலப்பட்டி பாலசுப்பிரமணியர் கோவில்

Image
  🙏🏻 🙏🏻                                                                                                                                                       தினம் ஒரு முருகன் ஆலயம்-779 திருப்பங்கள் தரும் திண்டுக்கல் எஸ். தும்மலப்பட்டி பாலசுப்பிரமணியர் கோவில் 27.7.2023 வியாழன் அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவில் எஸ். தும்மலப்பட்டி-614617 நிலக்கோட்டை வட்டம் திண்டுக்கல் மாவட்டம் இருப்பிடம்: நிலக்கோட்டை 44 கிமீ மூலவர்: பாலசுப்பிரமணியர் தேவியர்: வள்ளி, தெய்வானை பழமை: 100 ஆண்டுகள் மேல் தலமகிமை: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் நிலக்கோட்டையிருந்து 44 கிமீ தொலைவில் உள்ள எஸ். தும்மலப்பட்டி பிரசித்திப் பெற்ற பாலசுப்பிரமணியர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவர் பாலசுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கின்றார். இத்தலத்து முருகப்பெருமான் பழனி முருகனைப் போல சக்தி உடையவர். அலர்ஜி, தோல் நோய்கள் உட்பட அனைத்து நோய்களையும் இக்கோவில் முருகப்பெருமான் தீர்த்து அருள்கின்றார். இக்கோவிலில் பங்குனி உத்திரம் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது இந்த ஆண்டு (2023).

கோவில் 778 - திருவண்ணாமலை துரிஞ்சாபுரம் புஷ்பகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻                                                                                                                                                   தினம் ஒரு முருகன் ஆலயம்-778 வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளும் திருவண்ணாமலை துரிஞ்சாபுரம் புஷ்பகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 26.7.2023 புதன் அருள்மிகு புஷ்பகிரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் புஷ்பகிரி மலை துரிஞ்சாபுரம்-606805 திருவண்ணாமலை மாவட்டம் இருப்பிடம்: திருவண்ணாமலை 15 கிமீ மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை பழமை: 200 ஆண்டுகள் தலமகிமை: திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ள துரிஞ்சாபுரம் கிராமத்தில் இருக்கும் புஷ்பகிரி என்ற பாறையின் மீது பிரசித்தி பெற்ற புஷ்பகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பாலசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருளாட்சி புரிகின்றார். இக்கோவிலில் ஆடிக்கிருத்திகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. இத்திருநாளில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், ஷோடஸோபாசார தீபாராதனை நடைபெறும். ஏராளாமான பக்த பெருமக்கள் தங்க

கோவில் 777 - மன்னார்குடி ராமநாதன் தெரு பாலமுருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻                                                                                                                                                தினம் ஒரு முருகன் ஆலயம்-777 திருமண வரம் தரும் மன்னார்குடி ராமநாதன் தெரு பாலமுருகன் கோவில் 25.7.2023 செவ்வாய் அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில் ராமநாதன் தெரு மும்மூர்த்தி விநாயகர் தெரு சந்திப்பு மன்னார்குடி-614001 திருவாரூர் மாவட்டம் இருப்பிடம்: மன்னார்குடி 1 கிமீ செல்: பக்கிரிசாமி 78128 76652, பாஸ்கர் 93603 87251 மூலவர்: பாலமுருகன் உற்சவர்: பாலமுருகன் தலமகிமை: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மையப்பகுதியில் 1 கிமீ தொலைவில் ஹரித்ரா நதியின் தென் திசையில் ராமநாதன் தெருவின் மையப்பகுதியில் [மும்மூர்த்தி விநாயகர் தெரு சந்திப்பு] அழகிய, பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. மூர்த்தி சிறிதென்றாலும், கீர்த்தி பெரிதான இந்த ஆலயத்தில் பாலமுருகன் அருள்கின்றார். இக்கோவிலுக்கு மிக அருகில் சிறப்பு மிக்க ஸ்ரீவித்யா ராஜகோபால் சுவாமி ஆலயம் [400 மீ] இருப்பது சிறப்பம்சமாகும். மேலும் மும்மூர்த்தி விநாயகர் கோவில், சேவராய அய்யனார் கோவில்களும் அருகில் உள்ளன. இக்கோவ

கோவில் 776 - மன்னார்குடி மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻                                                                                                                                                           தினம் ஒரு முருகன் ஆலயம்-776 வேண்டுதல்களை நிறைவேற்றும் மன்னார்குடி மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவில் 24.7.2023 திங்கள் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மேலவாசல் மன்னார்குடி-614014 திருவாரூர் மாவட்டம் இருப்பிடம்: மன்னார்குடி 4.2 கிமீ செல்: 89031 52788 மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தேவி: வள்ளி, தெய்வானை உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை தலமகிமை: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி நகரிலிருந்து 4.2 கிமீ தொலைவில் உள்ள மேலவாசல் பகுதியில் வேண்டுதல்களை நிறைவேற்றும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் இருந்து அருகிலிருக்கும் (4 கிமீ) இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருளாட்சி செய்கிறார். 2023-ல் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது சிறப்பம்சமாகும். இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமி திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப