Posts

Showing posts from March, 2023

கோவில் 662 - புதுச்சேரி கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻                                                                                                                                                 தினம் ஒரு முருகன் ஆலயம்-662 வல்வினை போக்கும் புதுச்சேரி கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவில் 1.4.2023 சனி அருள்மிகு கதிர்வேல் சுவாமி திருக்கோவில் சுப்பிரமணியம் கோவில் சாலை கதிர்காமம் புதுச்சேரி-605009 இருப்பிடம்: புதுச்சேரி பேருந்து நிலையம் 5 கிமீ, மூலவர்: கதிர்வேல் சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தலமகிமை: புதுச்சேரி மாநகர் பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் வல்வினைகள் போக்கும் கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கதிர்வேல் சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக அருள்பாலிக்கின்றார். அகத்தியப் பெருமான் தவம் செய்த தலம் இது. வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள் தனது ஆன்மீக பயணத்தில் இறைவன் ஆணைப்படி விழுப்புரம் மாவட்டம் திருஆமாத்தூர் திருத்தலத்தில் கௌமார மடலாயம் அமைத்து இறைப்பணி செய்து வந்த போது, புதுச்சேரி காதிர்காமம் கதிர்வேல் சுவாமி பக்தர்கள் தங்கள் கோவில் வந்து முருகப்பெர

கோவில் 296 - கோயம்புத்தூர் மாவட்டம் சொர்ணமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                              தினம் ஒரு முருகன் ஆலயம்-296 ஞானத்தை அள்ளி அருளும் ஞானபண்டிதனாக காட்சியளிக்கும் கோயம்புத்தூர் மாவட்டம் சொர்ணமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவில்                                                                                                                                                 31.3.2022 வியாழன் அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவில் சொர்ணமலை  காளாம்பாளையம்  கோயம்புத்தூர் மாவட்டம்  இருப்பிடம்: காரமடை-வெள்ளியங்காடு சாலையில் தாயனூர் 12 கிமீ, அங்கிருந்து கோவில் 1.5 கிமீ  மூலவர்: குழந்தை வேலாயுத சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை பழமை: 1400 ஆண்டுகளுக்கு முன்னர் தல மகிமை: கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையிலிருந்து 13.5 கிமீ தொலைவில் உள்ள காளாம்பாளையம் சொர்ணமலையில் குடி கொண்டிருக்கும் குழந்தை வேலாயுத சுவாமி, பழனி முருகனைப் போலவே மேற்கு நோக்கி ஞான வடிவமாக காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இம்மலையைச் சுற்றியுள்

கோவில் 661 - சென்னை ஓட்டேரி சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻                                                                                                                                                    தினம் ஒரு முருகன் ஆலயம்-661 வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அள்ளி வழங்கும் வள்ளல் சென்னை ஓட்டேரி சுப்பிரமணிய சுவாமி கோவில் 31.3.2023 வெள்ளி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஓட்டேரி சென்னை-600012 இருப்பிடம்: சென்னை சென்ட்ரல் 5 கிமீ, கோயம்பேடு 11கிமீ மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை உற்சவர்: முருகப்பெருமான் தல விருட்சம்: அரசமரம் தலமகிமை: சென்னை மாநகரின் மையப்பகுதியில் சென்னை சென்ட்ரலிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள ஓட்டேரியில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அள்ளி வழங்கும் வள்ளல் என்று போற்றப்படுகிறார். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் கனவில் இத்தல முருகப்பெருமான் திருக்காட்சி அளித்ததை அடுத்து மறுநாளே இக்கோவிலுக்கு வந்து சுப்பிரமணிய சுவாமியை தரிசித்து மகிழ்ந்தாக இப்பகுதி பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இக்கோ

கோவில் 295 - திருவண்ணாமலை மாவட்டம் தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                         தினம் ஒரு முருகன் ஆலயம்-295 அனேக அற்புதங்களை நிகழ்த்துகின்ற திருவண்ணாமலை மாவட்டம் தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்                                                                                                                                                 30.3.2022 புதன் அருள்மிகு தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் விநாயகபுரம்  ரெட்டிபாளையம்--632312 காட்டுக்காநல்லூர் ஊராட்சி ஆரணி வட்டம் திருவண்ணாமலை மாவட்டம்  இருப்பிடம்: கண்ணமங்கலம் 3 கிமீ, வேலூர் 24 கிமீ  அலைபேசி: 94430 36373, 95242 03789 மூலவர்: சுப்பிரமணிய சுவாமி  தேவியர்: வள்ளி, தெய்வானை உற்சவர்: வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான் தல விருட்சம்: கடம்பமரம்  தல மகிமை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் காட்டுக்காநல்லூர் ஊராட்சியில் உள்ள ரெட்டிபாளையத்தில் இருக்கும் விநாயகபுரம் அருகில் உள்ள மலை உச்சியில் தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந

கோவில் 660 - ராணிப்பேட்டை மாவட்டம் கீழ் வீராணம் சக்திவேல் முருகன் கோவில்

Image
🙏🏻 🙏🏻                                                                                                                                                 தினம் ஒரு முருகன் ஆலயம்-660 இகபர சௌபாக்கியம் அருளும் ராணிப்பேட்டை மாவட்டம் கீழ் வீராணம் சக்திவேல் முருகன் கோவில் 30.3.2023 வியாழன் அருள்மிகு சக்திவேல் முருகன் திருக்கோவில் கீழ் வீராணம்-632505 சோளிங்கர் வட்டம் ராணிப்பேட்டை மாவட்டம் இருப்பிடம்: காவேரிபாக்கம் 11 கிமீ, சோளிங்கர் 19 கிமீ, ராணிப்பேட்டை 22 கிமீ செல்: 94869 38786 மூலவர்: சக்திவேல் முருகன் தேவியர்: வள்ளி, தெய்வானை தலமகிமை ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை-பெங்களூரு தேசிய் நெடுஞ்சாலையில் உள்ள காவரிபாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் வழியில் 11-வதி கிமீ-ல் உள்ள கீழ் வீராணத்தில் ஆற்றல் மிகுந்த சக்திவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலும் சோளிங்கரிலிருந்து 19 கிமீ, மாவட்ட தலைநகர் ராணிப்பேட்டையிலிருந்து 22 கிமீ பிரயாணம் செய்தாலும் இக்கோவிலை அடையலாம். இத்திருத்தலத்தில் சக்திவேல் முருகன் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கின்றார். 1984-ம் ஆண்டு, மகா பெரியவர் காஞ்சி சங்கராச்சாரியார், ஜ

கோவில் 294 - ஈரோடு மாவட்டம் கோட்டுப்புள்ளாம் பாளையம் பாலதண்டாயுதபாணி கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                              தினம் ஒரு முருகன் ஆலயம்-294 செவ்வேளின் செவ்வாய் பரிகாரத் தலம் ஈரோடு மாவட்டம் கோட்டுப்புள்ளாம் பாளையம் பாலதண்டாயுதபாணி கோவில்                                                                                                                                                    29.3.2022 செவ்வாய் அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் கோட்டுப்புள்ளாம் பாளையம்-638453  கோபிசெட்டிபாளையம் வட்டம் ஈரோடு மாவட்டம்  இருப்பிடம்: கோபிசெட்டிபாளையத்திலிருந்து 10 கிமீ  மூலவர்: பாலதண்டாயுதபாணி  உற்சவர்: வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான்  தல விருட்சம்: கடம்பமரம் தீர்த்தம்: இடி தீர்த்தம் தல மகிமை: ஈரோடு மாவட்டம் கோபிக்கு அருகில் உள்ள கோட்டுப்புள்ளாம் பாளையம் எனும் ஊரில் உள்ள ஒரு சிறிய குன்றின் மீது அழகன் முருகப்பெருமான், பாலதண்டாயுதபாணி என்னும் திருநாமத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். இந்த அற்புத தலத்தை குஹகிரி எனவும் அழைக்கின்றனர். இக்க

கோவில் 659 - தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நெட்டூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻                                                                                                                                                    தினம் ஒரு முருகன் ஆலயம்-659 அற்புதங்கள் நிறைந்த தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நெட்டூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் 29.3.2023 புதன் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நெட்டூர்-627854 ஆலங்குளம் வட்டம் தென்காசி மாவட்டம் இருப்பிடம்: ஆலங்குளம் 5 கிமீ, தென்காசி 33 கிமீ, திருநெல்வேலி 45 கிமீ மூலவர்: சிவசுப்பிரமணியர் தேவியர்: வள்ளி, தெய்வானை சித்தர்: அப்பரானந்த சுவாமிகள் பழமை: 17-ம் நூற்றாண்டு தலமகிமை: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் ஆலங்குளத்திலிருந்து 5 கிமீ தொலைவில் அற்புதங்கள் நிறைந்த ஆலங்குளம் நெட்டூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பல அதிசயங்கள், அற்புதங்கள் நிகழ்வதற்கு கருவறையின் முன் அமைந்திருக்கும் அப்பரானந்த சுவாமிகள் ஜீவசமாதியே முக்கிய காரணம் என்பது பக்தர்கள் நம்பிக்கை அழகிய சூழலில் அமைந்துள்ள இத்தலத்தில் வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமியிடம் விண்ணப்ப பத்திரம் வைத்து வழிபடுவோருக்கு, முருகப்பெருமா

கோவில் 293 - கன்யாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                   தினம் ஒரு முருகன் ஆலயம்-293 கேட்பவருக்கு கேட்ட வரமளிக்கும் கன்யாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோவில்                                                                                                                                                    28.3.2022 திங்கள் அருள்மிகு வேல்முருகன் திருக்கோவில் முருகன் குன்றம்  கன்யாகுமரி-629702  இருப்பிடம்: கன்யாகுமரி ரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ, நாகர்கோவில் 20 கிமீ அலைப்பேசி: 9489 032988 மூலவர்: வேல்முருகன் உற்சவர்: வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் தலமகிமை: கன்யாகுமரி-சென்னை தங்க நாற்கர சாலையில், கன்யாகுமரியிலிருந்து 2 கிமீ தூரத்தில் உள்ள சிறிய குன்றில், வேல் வடிவில் தோன்றிய வேலவன் குடியிருக்கும் தலம் முருகன் குன்றம் வேல்முருகன் கோவில் என்றழைக்கப்படுகிறது. சந்தனக் கவசத்தில் வேல்முருகனைக் காணக் கண்கோடி வேண்டும். மலை உச்சியில் ஏறி வந்து மனமுருக வேண்டி நின்றால், வேண்டியதை நிறைவேற்றித் த

கோவில் 658 - திருவண்ணாமலை மாவட்டம் குண்ணகம்பூண்டி சிவசுப்பிரமணியர் (கல் முருகன்) கோவில்

Image
  🙏🏻 🙏🏻                                                                                                                                                 தினம் ஒரு முருகன் ஆலயம்-658 கோரிக்கைகளை நிறைவேற்றும் திருவண்ணாமலை மாவட்டம் குண்ணகம்பூண்டி சிவசுப்பிரமணியர் (கல் முருகன்) கோவில் 28.3.2023 செவ்வாய் அருள்மிகு சிவசுப்பிரமணியர் (கல் முருகன்) திருக்கோவில் குண்ணகம்பூண்டி-614501 வந்தவாசி வட்டம் திருவண்ணாமலை மாவட்டம் இருப்பிடம்: வந்தவாசி 26 கிமீ Ref: தினமலர் 01.11.2013 மூலவர்: சிவசுப்பிரமணியர் தேவியர்: வள்ளி, தெய்வானை ஆதி பெயர்: சித்தருகாவூர் மதுராபுதூர் (சி.எம்.புதூர்) தலமகிமை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து வெடால் செல்லும் வழியில் 26-வது கிமீ-ல் உள்ள குண்ணகம்பூண்டியில் கல் முருகன் கோவில் அமைந்துள்ளது. பழமையான இக்கோவிலில் ஆட்சி செய்யும் சிவசுப்பிரமணியர் வழிபடும் பக்தர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுகின்றார். பாறை மீது அமைந்த கோவிலுக்கு படி ஏறித்தான் செல்ல வேண்டும். பெருமானை ஏறி செல்லும் படிகளிலும் ஒரு கணக்கு உள்ளது. 4 வேதங்களும், 18 புராணங்களும், பன்னிரு திருமுறைகளும்