கோவில் 49 - கன்யாகுமரி மாவட்டம் தோவாளை சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-49 நினைத்ததை நிறைவேற்றும் கன்யாகுமரி மாவட்டம் தோவாளை சுப்பிரமணிய சுவாமி கோவில் 27.7.2021 செவ்வாய் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி (திருமலை அமரர் பதிகாத்த நயினார்) திருக்கோவில் தோவாளை-629302 கன்யாகுமரி மாவட்டம் இருப்பிடம்: நாகர்கோவில் 14 கிமீ, கன்யாகுமரி 23 கிமீ, ஆரல்வாய்மொழி 4 கிமீ மூலவர்: சுப்பிரமணிய சுவாமி (திருமலை அமரர் பதிகாத்த நயினார்) பழமை: 500 ஆண்டுகள் புராணப்பெயர்: எதிர்வில்லி சோழபுரம் தலமகிமை: கன்யாகுமரி மாவட்டத்தில் தலைநகர் நாகர்கோவிலிலிருந்து 14 கிமீ தொலைவில் முருகனுக்கு பிடித்தமான மிகப் பெரிய அளவில் மலர்கள் சந்தை அமைந்துள்ள தோவாளை எனும் ஊரில் உள்ள குன்று ஒன்றில் முருகப்பெருமான் குடிகொண்ட சுப்பிரமணிய சுவாமி (திருமலை அமரர் பதிகாத்த நயினார்) திருக்கோவில் அமையப் பெற்றுள்ளது. மருமகன் சுப்பிரமணிய சுவாமியாக குன்றின் உச்சியிலும், மாமன் பாலகிருஷ்ணனாக குன்றின் அடிவாரத்திலும் நின்று அருள் புரியும் தலம் என்ற சிறப்புப்பெற்றது.. சஷ்டி திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது, திருவிழாவின் போது மூலவர் சுப்பிரமணிய சுவாமி முதல் நாள் பாலமுருகன் வடிவத்தி...