கோவில் 413 - கேரளா கொல்லம் உமையநல்லூர் பாலசுப்ரமணிய சுவாமி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-413
தோஷங்கள் நீக்கும் கேரளா கொல்லம் மாவட்டம் உமையநல்லூர் பாலசுப்ரமணிய சுவாமி கோவில்
26.7.2022 செவ்வாய்
அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில்
உமையநல்லூர்-691589
மையநாடு
கொல்லம் மாவட்டம்
கேரளா மாநிலம்
இருப்பிடம்: கொல்லத்திலிருந்து 10 கிமீ
மூலவர்: பாலசுப்ரமணிய சுவாமி, உமையன்
தலமகிமை:
கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் கொல்லத்திலிருந்து 10 கிமீ தூரத்தில் பழமையான, புனிதம் நிறைந்த உமையநல்லூர் பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. மையநாடு அருகில் உள்ளது. மூலவர் பாலசுப்ரமணிய சுவாமி ஆவார். உமையன் என்றும் அழைக்கிப்படுகிறார். உமையன் இருக்குமிடம் என்பதால் உமையநல்லூர் என்று அழைக்கப்படுகிறது.
மார்ச் (பங்குனி) மஹோற்சவத்தின் (8 நாள்) போது யானை வால் பிடி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவிற்கு கேரளா முழுவதிலும் இருந்து முருக பக்தர்கள் வருகின்றனர். இது முருகர், விநாயகர் வரலாற்றை நினவுபடுத்துகிறது. குதிரை எடுப்பு என்ற விழாவும் பிரபலம். தைப்பூயம் (தைப்பூசம்) திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவிலில் வழிபடப்படும் தேவியை ஊர்வலமாக அருகில் உள்ள நெல் வயலுக்கு அழைத்துச் செல்வார்கள்.
தல வரலாறு:
தேசிங்கநாட்டு மன்னன் கேரளவர்மா தனது மகளுக்காகக் உமையநல்லூர் பாலசுப்ரமணிய சுவாமி கோவிலை கட்டினார் என்கிறது வரலாறு. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வேணாடு இராஜ்ஜியத்தின் வீரம் மிக்க பெண் ஆட்சியாளரான "உமையம்மராணி" என்பவரால் நிர்வகிக்கப்பட்டது என்பது புராணக்கதை. இந்த கோவிலின் நிர்வாகம் திருவிதாங்கூர் தேவஸ்தானம் கீழ் உள்ளது.
தல அமைப்பு:
இத்திருக்கோவில் கருவறையில் பாலசுப்ரமணிய சுவாமி என்ற உமையன் மேற்கு நோக்கி மிகவும் ஆற்றலுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விநாயகர், தேவி முதலான தெய்வங்களும் அருள்பாலிப்பது சிறப்பு. ஆதி சங்கரர். கோவில் இருப்பது கூடுதல் சிறப்பு.
திருவிழா:
தைப்பூசம், மார்ச் நடுப்பகுதி (பங்குனி) மஹோற்சவம்
பிரார்த்தனை:
தோஷங்கள் நீங்க, நோய்கள் அகல, மன அமைதி பெற
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 5-11 மாலை 5-8
மன அமைதி பெற்றிட கொல்லம் மாவட்டம் உமையநல்லூர் பாலசுப்ரமணிய சுவாமியை மனதார பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - தோஷங்கள் நீக்கும் கேரளா கொல்லம் மாவட்டம் உமையநல்லூர் பாலசுப்ரமணிய சுவாமி
படம் 2 - மன அமைதி பெற்றிட கொல்லம் மாவட்டம் உமையநல்லூர் பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் யானை வால் பிடி திருவிழா
Comments
Post a Comment