கோவில் 412 - திருவனந்தபுரம் எருதாவூர் பாலசுப்ரமணிய சுவாமி கோவில்

 🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-412

குறைகளை களையும் கேரளாவின் பழனி என சிறப்பு பெற்ற திருவனந்தபுரம் எருதாவூர் பாலசுப்ரமணிய சுவாமி கோவில்

25.7.2022 திங்கள்

அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில்

எருதாவூர்

பாலராமபுரம்-695507

திருவனந்தபுரம்

கேரளா மாநிலம்

இருப்பிடம்: திருவனந்தபுரத்திலிருந்து 20 கிமீ, பாலராமபுரம் 2 கிமீ

மூலவர்: பாலசுப்ரமணிய சுவாமி


தலமகிமை:

கேரள மாநிலம், திருவனந்தபுரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் எரித்தாவூர் உள்ளது. ஏராளமான எருமைகளைக் கொண்ட ஊர் ஆதலால் எரித்தாவூர் என்று பெயர் வந்தது. இங்குள்ள குன்றின் மீது பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது.


இகோவிலில் முருகப்பெருமான் கௌபீனத்துடன் காட்சியருள்வது பழநி முருகனைப் போலவே இருப்பதால், இத்தலம் கேரளத்து பழனி என்று அழைக்கப்படுவது சிறப்பம்சம். அதிக அளவில் மயில்கள் இத்தலத்திற்கு அழகையும், முருகனுக்கு பெருமையையும் சேர்க்கின்றன.


கேரளா, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வேண்டுவோருக்கு பாலமுருகன் குறைகள் அகலவும், பிணிகள் தீரவும் அருள்கின்றார். தைப்பூசம் திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி, வைகாசி விசாகம், கார்த்திகை, ஆயில்யம், சஷ்டி, வெள்ளி, திங்கள், பவுர்ணமி, மலையாள மாத முதல் நாள் என அனைத்தும் சிறப்பாக நடைபெறுகின்றன. பார்வதி தேவிக்கு பவுர்ணமி பூஜையும், நாக தோஷம் நீங்க ஆயில்யம் நட்சத்திரத்தில் நாகராஜருக்கும், அனைத்து தோஷங்களும் விலக நவக்கிரக பூஜைகளும் நடக்கின்றன. வேண்டுதல் நிறைவேறியவர்கள் காவடி, முடிக்காணிக்கை, அங்கபிரதிட்சணம் என பல்வேறு வகையில் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.


தல அமைப்பு:

கோவிலுக்கு செல்ல 244 படிக்கட்டுகள் உள்ளன. திருக்கோவில் கருவறையில் மூலவராக பாலசுப்ரமணிய சுவாமி, பழனி தண்டாயுதபாணியை போல கோவணத்துடன் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறையின் இடதுபுறம் கணபதியும், வலப்புரம் பார்வதி தேவியும் அருள்கின்றனர். மேலும் யோகீஸ்வரர் (சிவன்), சண்முகர், நாகராஜர், நவக்கிரகங்கள் தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, பிரதி வெள்ளி, ஞாயிறு, சஷ்டி, ஆயியம், பவுர்ணமி


பிரார்த்தனை:

குறைகள் அகல, பிணிகள் தீர, தோஷங்கள் நீங்க


நேர்த்திக்கடன்:

முடிக்காணிக்கை, அங்கப்பிரதிட்சணம், காவடி, அலகு குத்துதல், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம் (ஞாயிறு)


திறக்கும் நேரம்:

காலை 5-9.30 மாலை 5-7.30


தோஷங்கள் அனைத்தையும் நீக்கி அருளும் திருவனந்தபுரம் எருதாவூர் பாலசுப்ரமணிய சுவாமி மனக்கண்ணால் தரிசித்து மகிழ்வோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

 🙏🙏


படம் 1 - குறைகளை களையும் கேரளாவின் பழனி என சிறப்பு பெற்ற திருவனந்தபுரம் எருதாவூர் பாலசுப்ரமணிய சுவாமி கோவில்



படம் 2 - தோஷங்கள் அனைத்தையும் நீக்கி அருளும் திருவனந்தபுரம் எருதாவூர் பாலசுப்ரமணிய சுவாமி


Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்