Posts

Showing posts from November, 2023

கோவில் 906 - ராமநாதபுரம் திருவாடானை ஆதிரத்திதினேஸ்வரர் கோவில் முருகன்

Image
🙏🏻🙏🏻                                                                                                                    தினம் ஒரு முருகன் ஆலயம்-906 [திருப்புகழ் தலம்]  தீவினைகள் போக்கும் ராமநாதபுரம் திருவாடானை ஆதிரத்திதினேஸ்வரர் கோவில் முருகன் 1.12.2023 வெள்ளி அருள்மிகு ஆதிரத்திதினேஸ்வரர் திருக்கோவில் [TM035936] திருப்புகழ் தலம்  திருவாடானை-623407  ராமநாதபுரம் மாவட்டம்  இருப்பிடம்: தேவக்கோட்டை 25 கிமீ, மதுரை 97 கிமீ  மூலவர்: ஆதிரத்திதினேஸ்வரர், திருஆடானை நாதர், அஜகஜேஸ்வரர்  அம்மன்: சிநேகவல்லி, அம்பாயிரவல்லி, அன்பாயி அம்மை   திருப்புகழ் நாயகர்: முருகன் தேவியர்: வள்ளி, தெய்வானை தலவிருட்சம்: வில்வமரம் தீர்த்தம்: சூரிய புஷ்கரிணி, க்ஷிரகுண்டம்  புராணப்பெயர்: ...

905 - திருநெல்வேலி பாபநாசம் பாபநாசநாதர் கோவில் முருகன்

Image
🙏🏻🙏🏻                                                                                                                       தினம் ஒரு முருகன் ஆலயம்-905 [திருப்புகழ் தலம்]  பாவங்கள் போக்கும் திருநெல்வேலி பாபநாசம் பாபநாசநாதர் கோவில் முருகன் 30.11.2023 வியாழன் அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோவில் [TM037902] திருப்புகழ் தலம்  பாபநாசம்-627425  திருநெல்வேலி மாவட்டம்  இருப்பிடம்: திருநெல்வேலி 50 கிமீ, அம்பாசமுத்திரம் 11 கிமீ  மூலவர்: பாபநாசநாதர், பாபவிநாசர் அம்மன்: உலகம்மை, விமலை, உலகநாயகி   திருப்புகழ் நாயகர்: முருகன் தேவியர்: வள்ளி, தெய்வானை தலவிருட்சம்: களாமரம் தீர்த்தம்: தாமிரபரணி, பாபநாச தீர்த்தம் புராணப்பெயர்: பொதிகைமலை, பொதியமலை, இந்திர கீழ ஷேத்திரம் ...

கோவில் 904 - திருநெல்வேலி நாங்குநேரி திருநாகேஸ்வரர் கோவில் முருகப்பெருமான்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-904 [திருப்புகழ் தலம்] மாமறை முழங்கும் திருநெல்வேலி நாங்குநேரி திருநாகேஸ்வரர் கோவில் முருகப்பெருமான் 29.11.2023 புதன் அருள்மிகு திருநாகேஸ்வரர் திருக்கோவில் [TM044264] திருப்புகழ் தலம் நாங்குநேரி-627108 திருநெல்வேலி மாவட்டம் இருப்பிடம்: திருநெல்வேலி 32 கிமீ, வள்ளியூர் 16 கிமீ மூலவர்: திருநாகேஸ்வரர் அம்மன்: சிவகாமி அம்பாள் திருப்புகழ் நாயகர்: முருகப்பெருமான் தேவியர்: வேழமங்கை, வேடமங்கை புராணப்பெயர்: ஸ்ரீபுருஷமங்கை, ஸ்ரீபுருடமங்கை, வானமாமலை, தோத்தாத்திரி பாடியவர்கள்: அருணகிரிநாதர் (3) பழமை: 1500 ஆண்டுகள் தலமகிமை: திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி நகரிலிருந்து 32 கிமீ தொலைவில் உள்ள நாங்குநேரியில் (ஆதி பெயர்: ஸ்ரீபுருஷமங்கை/ஸ்ரீபுருடமங்கை) மாமறை முழங்கும் திருநாகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படும் சிவத்தலமான திருநாகேஸ்வரர் திருக்கோவிலில் ஆன்மீகம் மற்றும் கலைகளின் கருவூலமாக ஆடல்வல்லான் எம்பெருமான் ஈசன் திருநாகேஸ்வரராகவும், பக்தர்களின் பக்திக்கு இறங்கும் பார்வதி தேவி சிவகாமி அம்பாளாகவும் வீற்றிருந்து பக்தர்கள...

கோவில் 903 - கரூர் நெரூர் அக்னீஸ்வரர் கோவில் ஆறுமுகநாதர்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-903 [திருப்புகழ் தலம்] கடன் பிரச்சனைகளை தீர்க்க அருளும் கரூர் நெரூர் அக்னீஸ்வரர் கோவில் ஆறுமுகநாதர் 28.11.2023 செவ்வாய் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில் திருப்புகழ் தலம் நெரூர்-639004 கரூர் மாவட்டம் இருப்பிடம்: கரூர் 11 கிமீ மூலவர்: அக்னீஸ்வரர் அம்மன்: சௌந்தரநாயகி திருப்புகழ் நாயகர்: ஆறுமுகநாதர் புராணப்பெயர்: நெருவூர், நெருவை பாடியவர்கள்: அருணகிரிநாதர் (1) தலமகிமை: கரூர் மாவட்டம் கரூர் மாநகரிலிருந்து வடகிழக்கே 11 கிமீ தொலைவில் உள்ள நெரூர் காவிரி ஆற்றங்கரையில் அரசியலில் வளர்ச்சி அடையவும், அரசியல்வாதிகளின் பிரச்சனைகளை தீர்த்தருளும் அக்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவர் அக்னீஸ்வரர் வலது பக்கமும், அம்பாள் சௌந்தரநாயகி இடது பக்கமும், முருகபெருமான் இருவருக்கும் நடுவில் சோமாஸ்கந்த வடிவில் இருந்து அருள்வது சிறப்பம்சமாகும். இத்தலத்துக்கருகில் “மானச சஞ்சறரரே” என்ற சிறப்பு மிக்க பாடலை பாடிய சதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவனை மனமுருகி வேண்டினால் திருமணத்தடை நீங்கும், குழந்தை பேறு கிட்டும், கடன் தொல்லை அ...

கோவில் 902 - கரூர் திருவெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-902 [திருப்புகழ் தலம்] நண்பர்கள் ஒற்றுமை ஓங்க அருளும் கரூர் திருவெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி 27.11.2023 திங்கள் அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோவில் திருப்புகழ் தலம் திருவெஞ்சமாங்கூடலூர்-639109 கரூர் மாவட்டம் இருப்பிடம்: கரூர் 19 கிமீ மூலவர்: கல்யாண விகிர்தீஸ்வரர், கல்யாண விகிர்தேஸ்வரர் அம்மன்: பண்ணோர் மொழியம்மை, மதுரபாஷினி, விகிர்தநாயகி உற்சவர்: சோமாஸ்கந்தர் திருப்புகழ் நாயகர்: சுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: வில்வமரம் தீர்த்தம்: வில்வம், குடகனாறு பாடியவர்கள்: சுந்தரர், அருணகிரிநாதர் (1) தலமகிமை: கரூர் மாவட்டம் கரூர் மாநகரிலிருந்து 19 கிமீ தொலைவில் உள்ள திருவெஞ்சமாங்கூடலூர் திருத்தலம் குடகனாற்றின் கீழ் கரையில் நண்பர்கள் ஒற்றுமை ஓங்க அருளும் கல்யாண விகிர்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தன் நண்பரும், அடியவருமான சுந்தரர் இத்தலத்தில் பாடிய பாடலைக் கேட்டு மகிழ்ந்த கல்யாண விகிர்தீஸ்வரர் தன் குமாரர்கள் விநாயகர், முருகப்பெருமான் இருவரையும் அடகு வைத்து விகிர்த வடிவில் (எதிர்மறை ...

கோவில் 901 - திருவாரூர் திருவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோவில் ஆறுமுகப்பெருமான்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-901 [திருப்புகழ் தலம்] எம பயம் போக்கும், முக்தி தரும் திருவாரூர் திருவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோவில் ஆறுமுகப்பெருமான் 26.11.2023 ஞாயிறு அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி திருக்கோவில் திருப்புகழ் தலம் திருவாஞ்சியம்-610110 திருவாரூர் மாவட்டம் இருப்பிடம்: திருவாரூர் 17 கிமீ, கும்பகோணம் 24 கிமீ மூலவர்: வாஞ்சிநாத சுவாமி, வாஞ்சிநாதர், வாஞ்சிநாதேஸ்வரர், கந்தாரண்யேஸ்வரர் அம்மன்: மங்களநாயகி, வாழவந்தநாயகி, மருவார்குழலி திருப்புகழ் நாயகர்: ஆறுமுகப்பெருமான் தேவியர்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: சந்தன மரம் தீர்த்தம்: குப்த கங்கை, எம தீர்த்தம் பாடியவர்கள்: அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர் (1) தலமகிமை: திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகரிலிருந்து 17 கிமீ தொலைவில் உள்ள "காசியைவிட வீசம் அதிகம்" என்று காசியைக் காட்டிலும் சிறப்பான சிவத்தலமாக புகழ்ந்து கூறப்படும் திருவாஞ்சியம் எனும் திருத்தலத்தில் முக்தி தந்தருளும் வாஞ்சிநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் திருமால் சிவனை வழிபட்டு இலட்சுமி தம்மிடம் வாஞ்சையுடன் இருக்குமாறு வரம் பெற்றார் எ...

கோவில் 900 - தஞ்சாவூர் திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோவில் முருகப்பெருமான்

Image
 🙏🏻🙏🏻                                                                                                                      தினம் ஒரு முருகன் ஆலயம்-900 [திருப்புகழ் தலம்]  பெண்களுக்கான தோஷம் நீக்கும் தஞ்சாவூர் திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோவில் முருகப்பெருமான்  25.11.2023 சனி அருள்மிகு அருணஜடேஸ்வரர் திருக்கோவில் திருப்புகழ் தலம்  திருப்பனந்தாள்-612504  தஞ்சாவூர் மாவட்டம்  இருப்பிடம்: கும்பகோணம் 20 கிமீ, மயிலாடுதுறை 30 கிமீ மூலவர்: அருணஜடேஸ்வரர், செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர், ஜடாதரர்  அம்மன்: பிரஹன்நாயகி (பெரியநாயகி) திருப்புகழ் நாயகர்: முருகப்பெருமான் தேவியர்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: பனைமரம் தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம் புராணப்பெயர்: தாடகையீச்சரம் பாடியவர...

கோவில் 899 - செகந்தராபாத் மேற்கு மாரட்பள்ளி சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-899 உடல் நலன் பேணும் செகந்தராபாத் மேற்கு மாரட்பள்ளி சுப்பிரமணிய சுவாமி கோவில் 24.11.2023 வெள்ளி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மேற்கு மாரட்பள்ளி (West Marredpally) செகந்தராபாத்-500026 தெலுங்கானா மாநிலம் இருப்பிடம்: செகந்தராபாத் ரயில் நிலையம் 2 கிமீ மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை பழமை: 300 ஆண்டுகள் தலமகிமை: தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத் மாநகரம் ரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவில் இருக்கும் மேற்கு மாரட்பள்ளியில் உடல் நலன் பேணும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. சக்தி மிக்க மூலவர் சுப்பிரமணிய சுவாமி தேவியருடன் அருள்புரிகின்றார். வேண்டிய வரங்களை சுப்பிரமணிய சுவாமி அள்ளி வழங்குவதால், அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிந்து, வழிபட்டு நற்பலன்கள் பெற்று செல்கின்றனர். மேலும் ஆற்றல் மிக்க ஆஞ்சநேயர் இக்கோவிலில் குடியமர்ந்து அருள்கின்றார். செவ்வாய், சஷ்டி திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட சுப்பிரமணிய சுவாமியின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக்...