கோவில் 899 - செகந்தராபாத் மேற்கு மாரட்பள்ளி சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-899
உடல் நலன் பேணும் செகந்தராபாத் மேற்கு மாரட்பள்ளி சுப்பிரமணிய சுவாமி கோவில்
24.11.2023 வெள்ளி
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
மேற்கு மாரட்பள்ளி (West Marredpally)
செகந்தராபாத்-500026
தெலுங்கானா மாநிலம்
இருப்பிடம்: செகந்தராபாத் ரயில் நிலையம் 2 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
பழமை: 300 ஆண்டுகள்
தலமகிமை:
தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத் மாநகரம் ரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவில் இருக்கும் மேற்கு மாரட்பள்ளியில் உடல் நலன் பேணும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. சக்தி மிக்க மூலவர் சுப்பிரமணிய சுவாமி தேவியருடன் அருள்புரிகின்றார். வேண்டிய வரங்களை சுப்பிரமணிய சுவாமி அள்ளி வழங்குவதால், அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிந்து, வழிபட்டு நற்பலன்கள் பெற்று செல்கின்றனர். மேலும் ஆற்றல் மிக்க ஆஞ்சநேயர் இக்கோவிலில் குடியமர்ந்து அருள்கின்றார்.
செவ்வாய், சஷ்டி திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட சுப்பிரமணிய சுவாமியின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
தல வரலாறு:
இக்கோவில் 300 வருடங்களுக்கும் மேல் பழமையானதாக கருதப்படுகிறது. ஆலமரங்களுக்கிடையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் இருப்பதால், இப்பகுதி மாரட்பள்ளி (தெலுங்கு மொழியில் ஆலமரம்) என்றழைக்கப்படுகிறது.
தல அமைப்பு:
தமிழக திருக்கோவில்கள் போன்ற அமைப்பைக் கொண்ட இக்கோவிலில் பூஜைகள் தமிழகம் போலவே நடைபெறுகின்றனர். கோவில் கருவறையில் சுப்பிரமணிய சுவாமி கம்பீரமாக நின்ற நிலையில் வள்ளி, தெய்னை சமேதராக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். மேலும் கணபதி, ம்ருதஞ்சய சுவாமி, சிவலிங்கம், பார்வதி, லஷ்மி, தத்தத்ரேயா சுவாமி, பக்த ஆஞ்சநேயர், சாய்பாபா, நவக்கிரகங்கள் என அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
செவ்வாய், கார்த்திகை, சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், ஆடிக்கிருத்திகை, கந்த சஷ்டி, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி,
பிரார்த்தனை:
உடல் நலன் வேண்டி, நேர்மறை ஆற்றல் உண்டாக, மன அமைதி பெற, வேண்டிய வரங்கள் கிடைக்க, நல்லன நடக்க, பயம் விலக, பிரச்சினைகள் தீர
நேர்த்திக்கடன்:
அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், பொருள் காணிக்கை, அன்னதானம்
திறக்கும் நேரம்
காலை 6-11.30 மாலை 5-8.30
நேர்மறை ஆற்றல் உண்டாக அருளும் செகந்தராபாத் மேற்கு மாரட்பள்ளி சுப்பிரமணிய சுவாமியை மனமுருகி வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 899 உடல் நலன் பேணும் செகந்தராபாத் மேற்கு மாரட்பள்ளி சுப்பிரமணிய சுவாமி
படம் 2 - 899 நேர்மறை ஆற்றல் உண்டாக அருளும் செகந்தராபாத் மேற்கு மாரட்பள்ளி சுப்பிரமணிய சுவாமி
Comments
Post a Comment