Posts

கோவில் 867 - சிவகங்கை புழுதிப்பட்டி சத்திரம் பாலதண்டாயுதபாணி கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-867 நல்லன அருளும் சிவகங்கை புழுதிப்பட்டி சத்திரம் பாலதண்டாயுதபாணி கோவில் 23.10.2023 திங்கள் அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் புழுதிபட்டி சத்திரம் -630309 பிரான்பட்டி சிவகங்கை மாவட்டம் இருப்பிடம்: துவரங்குறிச்சி 8 கிமீ, நத்தம் 29 கிமீ மூலவர்: பாலதண்டாயுதபாணி உற்சவர்: முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை தலமகிமை: சிவகங்கை மாவட்டம் நத்தம்-துவரங்குறிச்சி சாலையில் துவரங்குறிச்சியில் இருந்து 8 கிமீ தொலைவில் இருக்கும் புழுதிபட்டி சத்திரத்தில் நல்லன அருளும் பாலதண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் நத்தம் பேருந்துநிலையத்தில் இருந்து 29 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு முருகப்பெருமான் பாலதண்டாயுதபாணியாக அருளுகின்றார். ஆறு தாமரை மலர்களில் ஆறு முருகன் வீற்றிருக்கும் சிற்பங்கள் கண்கொள்ளா அழகு. இக்கோவிலில் தைப்பூசம் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. பல்வகை அபிஷேகங்கள் நடைபெற்று அழகிய அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. பங்குனி உத்திரத் திருவிழாவும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தல வரலாறு: மலை ம...

கோவில் 866 - சிவகங்கை அரளிப்பாறை முருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-866 சிக்கல்கள் தீர்க்கும் சிவகங்கை அரளிப்பாறை முருகன் கோவில் 22.10.2023 ஞாயிறு அருள்மிகு முருகன் திருக்கோவில் அரளிப்பாறை சதுர்வடமங்கலம்-630505 சிங்கணம்புரி வட்டம் சிவகங்கை மாவட்டம் இருப்பிடம்: சிங்கணம்புரி 9 கிமீ, திருப்பத்தூர் 16 கிமீ மூலவர்: முருகன் பழமை: 800 ஆண்டுகள் தலமகிமை: சிவகங்கை மாவட்டம் சிங்கணம்புரி வட்டம் சிங்கணம்புரியிலிருந்து 9 கிமீ தொலைவில் இருக்கும் அரளிப்பாறையில் சிக்கல்கள் தீர்க்கும் முருகன் கோவில் அமைந்துள்ளது. திருப்பத்தூரில் இருந்து 16 கிமீ பிரயாணம் செய்தாலும் சிறப்பு மிக்க இக்கோவிலை அடையலாம். கோவில் இருக்கும் பாறையில் மாசி மகத்தன்று நடைபெறும் மஞ்சு விரட்டு பந்தயம் இம்மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அரளிப்பாறை முருகபெருமானுக்கு பூஜைகள் நடந்த பின்னர்தான் மஞ்சு விரட்டு பந்தயம் நடைபெறும். இக்கோவிலில் கல்யாணங்கள் அதிக அளவில் நடக்கின்றன. அரளிப்பாறை எனும் இப்பகுதியை அரளிப்பட்டி என்றும் அழைக்கின்றனர். இக்கோவில் பகுதியில் அதிக அளவில் சினிமா படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன. தைப்பூசம் மற்றும் மாசி மகம் திருவிழா மிகச்...

கோவில் 865 - ராமநாதபுரம் மண்டபம் சக்தி வடிவேல் முருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-865 வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் ராமநாதபுரம் மண்டபம் சக்தி வடிவேல் முருகன் கோவில் 21.10.2023 சனி அருள்மிகு சக்தி வடிவேல் முருகன் திருக்கோவில் காந்திநகர் மண்டபம்-623518 ராமநாதபுரம் மாவட்டம் இருப்பிடம்: ராமநாதபுரம் 38 கிமீ, மண்டபம் 4 கிமீ மூலவர்: சக்தி வடிவேல் முருகன் தலமகிமை: ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகரிலிருந்து 38 கிமீ தொலைவில் உள்ள மண்டபம் காந்திநகரில் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் சக்தி வடிவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. மண்டபம் நகரில் சுயம்புவாக தோன்றி சக்தி வடிவேல் முருகனாக அருள்பாலிக்கும் இக்கோவில் புனரமைக்கப்படுவதற்காக 7.6.23 அன்று பாலாலய முகூர்த்த வைபவம் நடைபெற்றது. மண்டபம் காந்திநகரில் அமைந்துள்ள ஆதி ஶ்ரீ அருள்மிகு சண்முக சடாக்ஷர சக்தி வடிவேல் முருகன் ஆலய கும்பாபிஷேக திருப்பணிக்கு நன்கொடை மற்றும் பொருளுதவி வழங்க விரும்பும் உபயதாரர்கள் மற்றும் பக்த கோடிகள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் (9629758268) திரு. M. சண்முகசாமி தலைவர் அவர்கள் மற்றும் திரு. M. ராஜு உதவி பொருளாளர் அவர்கள் (9443171107). இக்கோவிலில் ...

கோவில் 864 - சேலம் ஆலச்சம்பாளையம் காட்டூர் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-864 ஐஸ்வர்யம் பெருக அருளும் சேலம் ஆலச்சம்பாளையம் காட்டூர் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் 20.10.2023 வெள்ளி அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் ஆலச்சம்பாளையம் காட்டூர்-637101 எடப்பாடி வட்டம் சேலம் மாவட்டம் இருப்பிடம்: சேலம் 46 கிமீ, எடப்பாடி 2.6 கிமீ மூலவர்: பாலதண்டாயுதபாணி சுவாமி தலமகிமை: சேலம் மாவட்டம் எடப்பாடியிலிருந்து 2.6 கிமீ தொலைவில் இருக்கும் ஆலச்சம்பாளையம் கிராமம் அருகில் இருக்கும் காட்டூரில் ஐஸ்வர்யம் பெருக அருளும் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பாலதண்டாயுதபாணி அருளாட்சி செய்கின்றார். சேலம் மாநரிலிருந்து இத்திருக்கோவில் 46 கிமீ தொலைவில் உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 6.6.2023 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கல்வடங்கம் காவிரியில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வந்தனர். தொடர்ந்து கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, நாடி சந்தானம், பூர்ணாஹுதி பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக வேள்விகள் நடைபெற்றது. பின்னர் வேத மந்திரம் முழங்க, 8.6.2023 காலை கோபுர கலசங்களில் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடை...

கோவில் 863 - சேலம் புதுப்பாளையம் கந்தசுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-863 வளம் சேர்க்கும் சேலம் புதுப்பாளையம் கந்தசுவாமி கோவில் 19.10.2023 வியாழன் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில் புதுப்பாளையம்-636115 வாழப்பாடி சேலம் மாவட்டம் இருப்பிடம்: சேலம் 29 கிமீ, வாழப்பாடி 2 கிமீ செல்: 94430 91701 மூலவர்: கந்தசுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை தலமகிமை: சேலம் மாவட்டம் சேலம் மாநகரம் பழைய 29 கிமீ தொலைவில் இருக்கும் பதுப்பாளையம் கிராமத்தில் பக்தர்களுக்கு வளம் சேர்க்கும் கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு கந்தசுவாமி வள்ளி, தெய்வானை சகிதம் அருளாட்சி செய்ய்கின்றார். வாழப்பாடியிலிருந்து 2 கிமீ பிரயாணம் செய்தாலும், இத்திருக்கோவிலை அடையலாம். பங்குனி உத்திரம் திருநாளில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சுவாமி திருவீதி உலா வருவது சிறப்பம்சமாகும். தைப்பூசம், கந்த சஷ்டி விழாக்கள் சிறப்பாகக் கொண்டாட்டப்படுகின்றனர். தல வரலாறு: இக்கோவில் 2016-ல் புனரமைக்கப்பட்டு 11.7.2016-ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தல அமைப்பு: திருக்கோவில் கருவறையில் மூலவராக கந்தசுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக...

கோவில் 862 - கோயம்புத்தூர் பீட்பள்ளம் கங்கைஸ்தல பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-862 செல்வம் பெருக்கும் கோயம்புத்தூர் பீட்பள்ளம் கங்கைஸ்தல பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் 18.10.2023 புதன் அருள்மிகு கங்கைஸ்தல பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் பீட்பள்ளம் செல்லப்பா கவுண்டன் புதூர் [செல்லப்பா கவுண்டன் புத்தூர்] கோயம்புத்தூர்-641010 கோயம்புத்தூர் மாவட்டம் இருப்பிடம்: காந்திபுரம் 15 கிமீ, பேரூர் 5.5 கிமீ செல்: மதன் கண்ணன் 99429 50770 மூலவர்: பாலதண்டாயுதபாணி சுவாமி உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை தலமகிமை: கோயம்புத்தூர் மாநகரில் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவில் இருக்கும் பீட்பள்ளம் பகுதியில் செல்வம் பெருக்கும் கங்கைஸ்தல பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலுக்கு 5.5 கிமீ தொலைவில் சிறப்பு மிக்க பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். இத்திருக்கோவிலுக்கு கிருத்திகை, சஷ்டி, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய் திருநாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர். இந்நாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன, பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம் த...

கோவில் 861 - விழுப்புரம் ஒதியத்தூர் அறுபடை முருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻   தினம் ஒரு முருகன் ஆலயம்-861 வேண்டுதல்களை நிறைவேற்றும் விழுப்புரம் ஒதியத்தூர் அறுபடை முருகன் கோவில் 17.10.2023 செவ்வாய் அருள்மிகு அறுபடை முருகன் திருக்கோவில் ஒதியத்தூர்-605701 [ஒடியாத்தூர்] கண்டாச்சிபுரம் தாலுகா விழுப்புரம் மாவட்டம் இருப்பிடம்: விழுப்புரம் 25 கிமீ, திருவண்ணாமலை 40 கிமீ மூலவர்: அறுபடை முருகன் தேவியர்: வள்ளி, தெய்வானை உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை தலமகிமை: விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம்-திருவண்ணாமலை சாலையில் கண்டாச்சிபுரம் தாலுகாவில் வேண்டுதல்களை நிறைவேற்றும் ஒதியத்தூர் அறுபடை முருகன் கோவில் அமைந்துள்ளது. திருவண்ணாமலையிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள கண்டாச்சிபுரம் அடுத்து ஒதியத்தூர் கிராமத்தில் அறுபடை முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அறுபடை வீட்டு முருகபெருமானும் வீற்றிருப்பதால், ஆறுபடை முருகன் கோவில்களில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும் சிறப்பம்சமாக இக்கோவிலில் நவக்கிரகங்கள் மற்ற கோவில்களை போலன்றி தனித் தனியே தத்தம் துணவியருடன் வீற்றிருக்கின்றனர். சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில்...