கோவில் 862 - கோயம்புத்தூர் பீட்பள்ளம் கங்கைஸ்தல பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-862
செல்வம் பெருக்கும் கோயம்புத்தூர் பீட்பள்ளம் கங்கைஸ்தல பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்
18.10.2023 புதன்
அருள்மிகு கங்கைஸ்தல பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்
பீட்பள்ளம்
செல்லப்பா கவுண்டன் புதூர்
[செல்லப்பா கவுண்டன் புத்தூர்]
கோயம்புத்தூர்-641010
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: காந்திபுரம் 15 கிமீ, பேரூர் 5.5 கிமீ
செல்: மதன் கண்ணன் 99429 50770
மூலவர்: பாலதண்டாயுதபாணி சுவாமி
உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை
தலமகிமை:
கோயம்புத்தூர் மாநகரில் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவில் இருக்கும் பீட்பள்ளம் பகுதியில் செல்வம் பெருக்கும் கங்கைஸ்தல பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலுக்கு 5.5 கிமீ தொலைவில் சிறப்பு மிக்க பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.
இத்திருக்கோவிலுக்கு கிருத்திகை, சஷ்டி, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய் திருநாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர். இந்நாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன, பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம் திருவிழாக்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன..
தல வரலாறு:
150 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் அதி தீவிர முருக பக்தர் ஒருவரின் கனவினில் முருகப்பெருமான் தோன்றி அருகில் இருக்கும் கிணறு போன்ற பகுதியில் பாலசுப்பிரமணிய சுவாமியாக எழுந்தருளுவேன் என்று சொல்லி விட்டு மறைந்து விட்டார். அதன் படியே அருகில் இருக்கும் கிணற்று பகுதியில் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். அந்த இடத்தில் கோவில் கட்டி, கிணற்று பகுத்யிலிருந்து கிடைத்ததால் முருகப்பெருமானுக்கு கங்கைஸ்தல பாலதண்டாயுதபாணி சுவாமி என திருப்பெயரிட்டு வழி[அட்டு வந்தனர். தற்போது கோவில் புனரமைக்கப்பட்டு வருகிறது. முருக பக்தர்கள் இக்கோவிலுக்கு சென்று தங்களால் முடிந்த காணிக்கையை நேரடியாக செலுத்தும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தல அமைப்பு:
இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பாலதண்டாயுதபாணி சுவாமி கருணை ததும்பும் அழகிய திருக்கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. விநாயகர், புஜ்லி அம்மன் உட்பட தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி
பிரார்த்தனை:
செல்வம் பெருக, சந்தான பாக்கியம் வேண்டி, கல்வி சிறக்க, நினைத்தது நடக்க, குடும்ப ஒற்றுமை ஓங்கிட, மன நிம்மதி கிடைக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்
திறக்கும் நேரம்:
காலை 8-11 மாலை 6-7
சந்தான பாக்கியம் அருளும் கோயம்புத்தூர் பீட்பள்ளம் கங்கைஸ்தல பாலதண்டாயுதபாணி சுவாமியை தொழுது மகிழ்ந்திடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 862 செல்வம் பெருக்கும் கோயம்புத்தூர் பீட்பள்ளம் கங்கைஸ்தல பாலதண்டாயுதபாணி சுவாமி
படம் 2 - 862 சந்தான பாக்கியம் அருளும் கோயம்புத்தூர் பீட்பள்ளம் கங்கைஸ்தல பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்
Comments
Post a Comment