கோவில் 867 - சிவகங்கை புழுதிப்பட்டி சத்திரம் பாலதண்டாயுதபாணி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-867
நல்லன அருளும் சிவகங்கை புழுதிப்பட்டி சத்திரம் பாலதண்டாயுதபாணி கோவில்
23.10.2023 திங்கள்
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில்
புழுதிபட்டி சத்திரம் -630309
பிரான்பட்டி
சிவகங்கை மாவட்டம்
இருப்பிடம்: துவரங்குறிச்சி 8 கிமீ, நத்தம் 29 கிமீ
மூலவர்: பாலதண்டாயுதபாணி
உற்சவர்: முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை
தலமகிமை:
சிவகங்கை மாவட்டம் நத்தம்-துவரங்குறிச்சி சாலையில் துவரங்குறிச்சியில் இருந்து 8 கிமீ தொலைவில் இருக்கும் புழுதிபட்டி சத்திரத்தில் நல்லன அருளும் பாலதண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் நத்தம் பேருந்துநிலையத்தில் இருந்து 29 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு முருகப்பெருமான் பாலதண்டாயுதபாணியாக அருளுகின்றார். ஆறு தாமரை மலர்களில் ஆறு முருகன் வீற்றிருக்கும் சிற்பங்கள் கண்கொள்ளா அழகு.
இக்கோவிலில் தைப்பூசம் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. பல்வகை அபிஷேகங்கள் நடைபெற்று அழகிய அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. பங்குனி உத்திரத் திருவிழாவும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
தல வரலாறு:
மலை மேல் வீற்றிருக்கும் இக்கோவில் மிகவும் பழமையான கோவிலாகக்கருதப்படுகின்றது. 20.01.2008-ல் புனரமைக்கப்பட்ட கோவிலின் கும்பாபிஷேம் நடைபெற்றது.
தல அமைப்பு:
மலை மீது அமைந்திருக்கும் முருகப்பெருமானின் சிறிய கோவிலுக்கு செல்ல சுமார் 40 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். கோவில் கருவறையில் மூலவராக பாலதண்டாயுதபாணி சிறிய கீர்த்தி வாசனாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிகின்றார். சிறப்பு திருநாட்களில் கண்மலர், ராஜ கிரீடம் அணிந்து அருள்புரிக்கின்றார். அருகில் சித்தி விநாயகர் வீற்றிருந்து அருள்கின்றார்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, கிருத்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
நல்லன நடைபெற, மன அமைதி கிடைத்திட, கல்வி, ஞானம் சிறக்க, குழந்தைப்பேறு வேண்டி
நேர்த்திக்கடன்:
அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்
மன அமைதி கிடைத்திட அருளும் புழுதிப்பட்டி சத்திரம் பாலதண்டாயுதபாணியை மனமுருகி வேண்டிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 867 நல்லன அருளும் சிவகங்கை புழுதிப்பட்டி சத்திரம் பாலதண்டாயுதபாணி
படம் 2 - 867 மன அமைதி கிடைத்திட அருளும் புழுதிப்பட்டி சத்திரம் பாலதண்டாயுதபாணி
Comments
Post a Comment