கோவில் 866 - சிவகங்கை அரளிப்பாறை முருகன் கோவில்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-866

சிக்கல்கள் தீர்க்கும் சிவகங்கை அரளிப்பாறை முருகன் கோவில்

22.10.2023 ஞாயிறு


அருள்மிகு முருகன் திருக்கோவில்

அரளிப்பாறை

சதுர்வடமங்கலம்-630505

சிங்கணம்புரி வட்டம்

சிவகங்கை மாவட்டம்

இருப்பிடம்: சிங்கணம்புரி 9 கிமீ, திருப்பத்தூர் 16 கிமீ


மூலவர்: முருகன்

பழமை: 800 ஆண்டுகள்


தலமகிமை:

சிவகங்கை மாவட்டம் சிங்கணம்புரி வட்டம் சிங்கணம்புரியிலிருந்து 9 கிமீ தொலைவில் இருக்கும் அரளிப்பாறையில் சிக்கல்கள் தீர்க்கும் முருகன் கோவில் அமைந்துள்ளது. திருப்பத்தூரில் இருந்து 16 கிமீ பிரயாணம் செய்தாலும் சிறப்பு மிக்க இக்கோவிலை அடையலாம். கோவில் இருக்கும் பாறையில் மாசி மகத்தன்று நடைபெறும் மஞ்சு விரட்டு பந்தயம் இம்மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அரளிப்பாறை முருகபெருமானுக்கு பூஜைகள் நடந்த பின்னர்தான் மஞ்சு விரட்டு பந்தயம் நடைபெறும். இக்கோவிலில் கல்யாணங்கள் அதிக அளவில் நடக்கின்றன. அரளிப்பாறை எனும் இப்பகுதியை அரளிப்பட்டி என்றும் அழைக்கின்றனர். இக்கோவில் பகுதியில் அதிக அளவில் சினிமா படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன.


தைப்பூசம் மற்றும் மாசி மகம் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்நாட்களில் முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.

தல வரலாறு:

800 வருடங்கள் பழமையான இக்கோவில், அன்று ஆண்ட பாண்டிய மன்னர் கனவில் வந்து முருகபெருமான் சொன்னதால் கட்டப்பட்டது என்கிறது வரலாறு.


தல அமைப்பு:

அரளிப்பாறையின் கீழ் தெப்பகுளம் உள்ளது. அருகில் உள்ள ஆலமரத்தடியில் விநாயகர் எழுந்தருளி அருளுகின்றார். அருகில் நாக தெய்வங்கள் அருளுகின்றன. அரளிப்பாறை முருகன் கோவிலுக்கு செல்ல இரண்டு பாதைகள் உண்டு. வாகனமும் செல்லலாம். ஏறும் வழியில் இடும்பன் கோவில் உள்ளது. பாறையின் மேல் அமைந்துள்ள கோவிலின் முன்னர் அழகிய கொடிமரமும், மயிலும் உள்ளன. கருவறையில் மூலவரான முருகப்பெருமான் மேற்கு நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு சிறப்பாக அருள்பாலிக்கின்றார். விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களும் அருள்புரிகின்றனர். கோவிலுக்கு தெற்கில் குடவறை சிவன் கோவில் இருப்பது சிறப்பம்சம்.


திருவிழா:

தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம்


பிரார்த்தனை:

சிக்கல்கள் தீர, கல்யாணம் வேண்டி, நினைத்தது நடக்க, மன அமைதி கிடைக்க, வாழ்வில் வெற்றியடைய


நேர்த்திக்கடன்:

அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள்


வாழ்வில் வெற்றியடைய அருளும் சிவகங்கை அரளிப்பாறை முருகனை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 866 சிக்கல்கள் தீர்க்கும் சிவகங்கை அரளிப்பாறை முருகன் கோவில்


படம் 2 - 866 வாழ்வில் வெற்றியடைய அருளும் சிவகங்கை அரளிப்பாறை முருகன் கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்