கோவில் 1918 - விழுப்புரம் வெங்கமூர் முருகன் கோவில்

 🙏🏼🙏🏼

தினம் ஒரு முருகன் ஆலயம்-1918

மங்கல வாழ்வு அருளும் விழுப்புரம் வெங்கமூர் முருகன் கோவில்

8.09.2026 செவ்வாய்

அருள்மிகு முருகன் திருக்கோவில்

வெங்கமூர் 605701

விழுப்புரம் வட்டம்

விழுப்புரம் மாவட்டம்

இருப்பிடம்: திருக்கோவிலூர் 8 கிமீ, கண்டாச்சிபுரம் 18 கிமீ, திருவெண்ணெய்நல்லூர் 30 கிமீ, விழுப்புரம் 35 கிமீ, திருவண்ணாமலை 42 கிமீ, விக்கிரவாண்டி 45 கிமீ


மூலவர்: முருகன்

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை


தல மகிமை:

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் வெங்கமூர் கிராமத்தில் உள்ள ஒரு சிறிய குன்றின் மீது விழுப்புரம் வெங்கமூர் முருகன் கோவில் அமைந்துள்ளது.


திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது கண்டாச்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது திருவெண்ணெய்நல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 30 கிமீ தொலைவு அல்லது விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 42 கிமீ தொலைவு அல்லது விக்கிரவாண்டி 45 கிமீ பேருந்து நிலையத்திலிருந்து தொலைவு பிரயாணம் செய்தால் விழுப்புரம் வெங்கமூர் முருகன் திருக்கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.


விழுப்புரம் வெங்கமூர் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் முக்கியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. காவ்டி ஏந்துதல் மற்றும் தீர்த்தோற்சவம் இத்திருக்கோவில் திருவிழாக்களில் முக்கிய நிகழ்வுகளாகும்.. பங்குனி உத்திரத் திருவிழா சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், கார்த்திகை தீபம், தை கிருத்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் எல்லா திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை முதலான நன்னாட்களில் சிறப்புப் பூஜைகளுடன் வழிபாடுகள் நடக்கின்றன.

தல வரலாறு:

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் வட்டம் வெங்கமூர் முருகன் கோவில் சிறிய மலை மீது அமைந்துள்ள மிகவும் பழமையான திருக்கோவிலாகும்.


தல அமைப்பு :

விழுப்புரம் வெங்கமூர் முருகன் கோவில் கோபுரங்கள் மற்றும் சிற்பங்களுடன் அழகுற அமைந்துள்ளன இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் முருகன் வள்ளி, தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு ஆற்றலுடன் அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் உற்சவர், விநாயகர், சிவபெருமான், அம்மன் நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், கார்த்திகை தீபம், தை கிருத்திகை, ஆடிக்கிருத்திகை சஷ்டி, கிருத்திகை

பிரார்த்தனை:

மங்கல வாழ்வு அருள, நேர்மறை சிந்தனைகள் உருவாக, நினைத்தது நடைபெற, வினைகள் போக்க, பிணிகள் தீர. திருமணத்தடை நீங்க, குழந்தைப்பேறு உண்டாக, குடும்ப ஒற்றுமை ஓங்க, நோய்கள் குணமடைய, நல்லன நடைபெற, கல்வி, ஞானம் சிறக்க, தொழில், வியாபாரம் மேம்பட, அல்லல்கள் அகல, செல்வம் பெருக, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


நேர்மறை சிந்தனைகளை உருவாக்கும் விழுப்புரம் வெங்கமூர் முருகன் திருத்தாள் பணிந்து தொழுதிடுவோம்!

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!

முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏼🙏🏼


படம் 1 - 1918 மங்கல வாழ்வு அருளும் விழுப்புரம் வெங்கமூர் முருகன்


படம் 2 - 1918 நேர்மறை சிந்தனைகளை உருவாக்கும் விழுப்புரம் வெங்கமூர் முருகன்

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்