கோவில் 1916 - விழுப்புரம் சோழங்குணம் முருகன் கோவில்
🙏🏼🙏🏼
தினம் ஒரு முருகன் ஆலயம்-1916
ஆன்மீக அதிர்வுகளை உண்டாக்கும் விழுப்புரம் சோழங்குணம் முருகன் கோவில்
6.09.2026 ஞாயிறு
அருள்மிகு முருகன் திருக்கோவில்
சோழங்குணம் 604210
செஞ்சி வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
இருப்பிடம்: செஞ்சி 19 கிமீ, திண்டிவனம் 42 கிமீ, விழுப்புரம் 53 கிமீ, திருவண்ணாமலை 59 கிமீ
மூலவர்: முருகன்
உற்சவர்: முருகன்
தல மகிமை:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் சோழங்குணம் கிராமத்தில் உள்ள ஒரு சிறிய மலையின் மேல் ஆன்மீக அதிர்வுகளை உண்டாக்கும் விழுப்புரம் சோழங்குணம் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்குச் செல்லும் வழியில் பெரிய முருகப்பெருமான் சிலை உள்ளது. மலையில் உள்ள இக்கோவிலுக்கு செல்லும் வழியில் பிராசித்திப் பெற்ற வெங்கடேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.
செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது திண்டிவனம் பேருந்து நிலையத்திலிருந்து 42 கிமீ தொலைவு அல்லது விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து 53 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 59 கிமீ தொலைவு பிரயாணம் செய்தால் விழுப்புரம் சோழங்குணம் முருகன் திருக்கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் சிறிய மூர்த்தமாக வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றார்.
விழுப்புரம் சோழங்குணம் முருகன் கோவிலில் தைப்பூசம் திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் சோழங்குணம் முருகன் கோவில் மலை மீது அமைந்துள்ள அமைதியான திருக்கோவில் ஆகும்.
தல அமைப்பு :
விழுப்புரம் சோழங்குணம் முருகன் கோவில் ஒரு சிறிய மலையின் மீது அமைந்துள்ளது. மலையின் மீது மலேசியா முருகனை போல பெரிய முருகப்பெருமான் சிலை நிறுவப்பட்டு, தேடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார். மேலும் வழியில் வெங்கடேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் முருகன் பொலிவுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். முருகப்பெருமானுக்கு எதிரில் வேல் உள்ளது. மேலும் விநாயகர், அம்மன் உள்ளிட்ட தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
ஆன்மீக அதிர்வுகள் உண்டாக, மன அமைதி பெற, எண்ணியது ஈடேற, நல்லன அருள, குழந்தை பாக்கியம் உண்டாக, உடல் ஆரோக்கியம் வேண்டி, தொழில் மேம்பட, குறைகள் தீர, வினைகள் போக்க, பிணிகள் அகல, செல்வம் சேர, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
மன அமைதி தந்தருளும் விழுப்புரம் சோழங்குணம் முருகனை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏼🙏🏼
படம் 1 - 1916 ஆன்மீக அதிர்வுகளை உண்டாக்கும் விழுப்புரம் சோழங்குணம் முருகன்
Comments
Post a Comment