கோவில் 1914 - விழுப்புரம் வீரங்கிபுரம் முருகன் கோவில்

 🙏🏼🙏🏼

தினம் ஒரு முருகன் ஆலயம்-1914

வெற்றிகளை அள்ளி வழங்கும் விழுப்புரம் வீரங்கிபுரம் முருகன் கோவில்

4.09.2026 வெள்ளி

அருள்மிகு முருகன் திருக்கோவில்

வீரங்கிபுரம் 605701

கண்டாச்சிபுரம் வட்டம்

விழுப்புரம் மாவட்டம்

இருப்பிடம்: கண்டாச்சிபுரம் 6 கிமீ, திருக்கோவிலூர் 18 கிமீ, திருவண்ணாமலை 37 கிமீ, திருவெண்ணெய்நல்லூர் 41 கிமீ, விழுப்புரம் 48 கிமீ



மூலவர்: முருகன்

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை


தல மகிமை:

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் வீரங்கிபுரம் கிராமத்தில் வெற்றிகளை அள்ளி வழங்கும் விழுப்புரம் வீரங்கிபுரம் முருகன் கோவில் அமைந்துள்ளது.


கண்டாச்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 37 கிமீ தொலைவு அல்லது திருவெண்ணெய்நல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 41 கிமீ தொலைவு அல்லது விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து 48 கிமீ தொலைவு பிரயாணம் செய்தால் விழுப்புரம் வீரங்கிபுரம் முருகன் திருக்கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து அருள்புரிகின்றார்.


விழுப்புரம் வீரங்கிபுரம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் முக்கியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. பக்தர்கள் காவடி ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். பங்குனி உத்திரத் திருவிழா சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற நன்னாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

தல வரலாறு:

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் வீரங்கிபுரம் முருகன் கோவில் இப்பகுதியில் பிரசித்திப் பெற்றத் திருக்கோவில் ஆகும்.


தல அமைப்பு :

விழுப்புரம் வீரங்கிபுரம் முருகன் கோவில் அழகிய கோபுரங்களுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் முருகன் கையில் வேலுடன் மயில் மீது வீற்றிருந்து வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் உற்சவர், விநாயகர், குலதெய்வங்கள் உட்பட எல்லா தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, சஷ்டி, கிருத்திகை

பிரார்த்தனை:

வெற்றிகள் பெற, மன அமைதி கிடைக்க, நல்லன அருள, வினைகள் விலக, பிணிகள் போக்க, ஞானம் மேம்பட, தொழில் சிறக்க, குழந்தைப்பேறு வேண்டி, குடும்ப வாழ்வு மேன்மையடைய, உடல் ஆரோக்கியம் கிட்ட, செல்வம் சேர, கவலைகள் தீர, தோஷங்கள் அகல


நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


மன அமைதி தரும் விழுப்புரம் வீரங்கிபுரம் முருகன் திருவடி பற்றி வேண்டிடுவோம்!

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!

முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏼🙏🏼


படம் 1 - 1914 வெற்றிகளை அள்ளி வழங்கும் விழுப்புரம் வீரங்கிபுரம் முருகன்


படம் 2 - 1914 மன அமைதி தரும் விழுப்புரம் வீரங்கிபுரம் முருகன்


Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்